ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கை கடந்த அரசு கைவிடவில்லை; போதிய ஆதாரம் கிடைக்காததால் தள்ளி வைத்தது: தி.மு.க விளக்கம்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கை கடந்த அரசு கைவிடவில்லை; போதிய ஆதாரம் கிடைக்காததால் தள்ளி வைத்தது: தி.மு.க விளக்கம்

ஜெம் கிரானைட் வீரமணி மீதான போக்ஸோ வழக்கு திமுக ஆட்சியில் கைவிடப்படவில்லை என்றும், வழக்கை நீர்த்துப்போகச் செய்ய சட்ட அமைச்சர் நிர்மல் குமார் பொய் பிரச்சாரம் செய்வதாகவும் திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ குற்றம் சாட்டியுள்ளார். ஜெம் கிரானைட் வீரமணி மீதான போக்ஸோ வழக்கின் மேல் புலன் விசாரணை தொடரும் நிலையில், அரசியல் லாபத்துக்காகவும் குற்றவாளிகளைக் காப்பாற்றவும் சட்ட அமைச்சர் நிர்மல் குமார் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாக திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ சாடியுள்ளார். ஜெம் கிரானைட் வீரமணி மீதான போக்ஸோ வழக்கின் மேல் புலன் விசாரணை தொடரும் நிலையில், அரசியல் லாபத்துக்காகவும் குற்றவாளிகளைக் காப்பாற்றவும் சட்ட அமைச்சர் நிர்மல் குமார் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாக தி.மு.க சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ சாடியுள்ளார். மேலும், தவெக ஆட்சியில் 150 நாட்களில் 219 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்தால் அமைச்சர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். சென்னையில் தி.மு.க சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ செய்தியாளர்களிடம் பேசியதாவது: “ஜெம் கிரானைட் வீரமணி மீது பதியப்பட்டுள்ள போக்சோ வழக்கை குறித்து அது ஏதோ தி.மு.க ஆட்சியில் நீர்த்துப் போக செய்ததாக ஒரு கருத்தை சட்ட அமைச்சர் நிர்மல் குமார் பரப்பி இருக்கிறார். அது முற்றிலும் தவறான கருத்து. ஏனென்றால் 7.11.2025-ல் பதியப்பட்ட அந்த வழக்கு அப்போது காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு, வீடுகள் சோதனை இடப்பட்டு அப்போதைக்கு கிடைத்திருந்த ஆதாரங்களை வைத்து மேல் புலன் விசாரணை செய்து, உரிய ஆதாரங்கள் கிடைக்காததால் நீதிமன்றத்தில் இதுவரை செய்த புலன் விசாரணையில் உரிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை, இந்த வழக்கை நாங்கள் கைவிடவில்லை. புதிய ஆதாரங்கள் திரட்டும் வரை இந்த வழக்கினுடைய மேல் விசாரணையை தள்ளி வைத்திருக்கிறோம் என்று தான் குறிப்பிட்டு, குறிபானை தாக்கல் செய்திருக்கிறார்கள். அதுவும் கூட அப்போதைக்கு இருந்த கூடுதல் அரசு வழக்கறிஞரின் கருத்துருவின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டது. எனவே தி.மு.க ஆட்சியில் அந்த வழக்கின் புலன் விசாரணை கைவிடப்படவில்லை. மேல் புலன் விசாரணை தொடரும் என்று தான் குறிபானை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை மறைத்து அவதூறு கருத்துகளை சட்ட அமைச்சர் பரப்பி வருகிறார். குறிப்பாக சொல்லப் போனால், தி.மு.க-வின் நிலைப்பாடு குற்றம் புரிபவர்கள் யாராக இருந்தாலும் குறிப்பாக பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதுபோன்ற வழக்குகளில் ஆதாரமற்ற செய்திகளை பரப்புவது அமைச்சர் நிர்மல் குமார் எப்படியாவது குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்றி விடலாமா என்ற எண்ணத்தோடு தான் பேசுவதாக தெரிகிறது. ஏனென்று, சொன்னால் இல்லாத அரசியல் அழுத்தங்களை இருப்பதாக சொன்னால் பாதிக்கப்பட்ட அந்த நபர்கள் இந்த வழக்கில் ஏதோ மிகப்பெரிய பிரச்னை இருக்கிறது போல எண்ணி அவர்கள் சாட்சியம் அளிக்காமல் அதிலிருந்து விலகிச் செல்வதற்காகவே குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களை காப்பாற்றுவதற்காகவே இந்த அறிக்கையை கொடுப்பதாக நாங்கள் நம்புகிறோம். அதுமட்டுமல்ல த.வெ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஒரு நாளைக்கு இரண்டு பாலியல் குற்றங்கள் ஆவது புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. சொல்லப்போனால் என் கையில் இருக்கும் பட்டியலில் த.வெ.க ஆட்சியில் நடந்திருக்கும் பாலியல் குற்றங்களை பற்றி சொன்னால் அதற்கு ஒரு நாள் கூட பத்தாது. ஆட்சிக்கு வந்து 150 நாட்களில் இதுவரை 219 பாலியல் குற்றங்கள் அரங்கேறி இருக்கின்றன. இதில் வேறு யாரோ அல்ல த.வெ.க-வின் பொறுப்பாளர்களே பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். சொல்லப்போனால், ஒரே ஒரு நாளில் மட்டும் ஜூன் 15, 2026-ல் மட்டும் ஏறக்குறைய 5 இடங்களில் சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள், குற்றங்களுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சட்டம் ஒழுங்கு பற்றி கவலைப்படாமல் அரசியல் லாபத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களை மட்டுமே சட்ட அமைச்சர் நிர்மல் குமார் இதுபோன்ற பேட்டிகளை கொடுத்து வருகிறார். சட்ட அமைச்சர் நிர்மல் குமார் தனது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும், போக்சோ போன்ற சிறப்பு வழக்குகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவை. இந்த வழக்குகளில் குற்றங்கள் பற்றி பொதுவெளியில் பேசி அந்த குற்றங்களை நீர்த்துப்போக செய்வது என்பது சட்டம் ஒழுங்கிற்கு நல்லது அல்ல. இது போன்ற திசை திருப்பும் வேலைகள் இந்த வழக்கை நீர்த்துப் போக செய்யும். ஒரு சட்ட அமைச்சர் அது கூட தெரியாமல் இருக்கிறார். மேலும், சட்ட அமைச்சர் நிர்மல் குமார் தான் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் என்று நினைத்துக் கொண்டு பேசுகிறார். அவதூறு செய்தால், அவதூறு பரப்பினால், அவரும் அவதூறு செய்த குற்றத்திற்கு உட்பட்டவர் தான். அதற்கான நடவடிக்கையை தி.மு.க தொடரும். நான் இதுவரை சொன்னவற்றில் குறைந்தபட்சம் மூன்று சிறுமிகளாவது பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். அந்த வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்காத த.வெ.க அரசு இல்லாத கூற்றுகளை, வழக்கை நீர்த்துப் போக செய்வதற்காக செய்து வருவது உண்மையிலேயே கன்னடத்துக்குரியது. தமிழக நலனுக்கு உகந்தது அல்ல என்பதால் கவலைக்குரியது. இந்தப் போக்கை தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கக் கூடிய அனைவரும் கைவிட வேண்டும் என்பதை நாங்கள் அழுத்தமாக பதிவு செய்கிறோம். இப்படியே மீறி சென்றாள் வெறுமனே அவதூறு வழக்கு மட்டுமல்லை, போக்ஸோ வழக்கை திசை திருப்பியதற்காக, குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கு ஒரு வழியாக இருந்ததற்காக, காரணமாக இருந்ததற்காக உரிய பிரிவுகளில் அவர்கள் மீது நாங்கள் வழக்கு தாக்கல் செய்வோம்” என்று கூறினார். தொடர்ந்து செய்திகளின் கேள்விக்கு பதிலளித்த வழக்கறிஞர் நிர்மல் குமார், “இந்த வழக்கில் அதிகாரிகளுக்கு பணம் வழங்கப்பட்டிருந்தால் அது லஞ்ச வழக்கு அவர்களிடம் உரிய ஆதாரங்கள் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க உடன் தொடர்பு இருக்கிறது என்பதை அவர் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். ஆதாரங்கள் இல்லை என்றால் அவர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவர் மீது உரிய வழக்கை தொடருவோம்” என்று கூறினார். அரசு ஆவணங்களில் பார்த்தால் கொரோனா காலகட்டத்தில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தொழிலதிபர்கள் பிரமுகர்கள் என பலரும் நிதி அளித்திருக்கிறார்கள் அப்படி வீரமணியும் நிதி அளித்திருக்கிறார். இதைத் தவிர்த்து வேறு எந்த காரணத்தை கொண்டும் அவர் தி.மு.க தலைவரை சந்திக்கவில்லை என்பதை உறுதியாக சொல்கிறோம்.” என்று கூறினார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. A seasoned journalist with 10+ years of experience in print, digital, and broadcast media (Indian Express Tamil, Hindu Tamil, Jaya Plus). Currently a Senior Sub-Editor, he blends his M.A. in History with a deep commitment to news authenticity and social impact. As an active poet and short story writer, he brings a unique literary perspective to journalism. Expert in news verification and digital editorial. Highlights: 10+ Yrs Exp M.A. History Poetry & Fiction writer இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை