TN MBBS BDS Admission: மருத்துவ படிப்புகளுக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு தொடக்கம்; சாய்ஸ் ஃபில்லிங், கல்லூரி சேர்க்கையில் இந்த தவறுகள் செய்தால், அபராதம் செலுத்த வேண்டும்; நிபுணர் எச்சரிக்கை தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இரண்டு சுற்று கலந்தாய்வு முடிவு பெற்றுள்ள நிலையில், மூன்றாம் சுற்றுக்கான விதிகள் என்ன? மாணவர்கள் என்ன தவறுகள் எல்லாம் செய்யக் கூடாது? என்பது குறித்து இப்போது பார்ப்போம். தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்து முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து மூன்றாம் சுற்று கலந்தாய்வு தொடங்க உள்ளது. இந்தநிலையில், மூன்றாம் சுற்றுக்கான விதிகள் என்ன? மாணவர்கள் என்ன தவறுகள் எல்லாம் செய்யக் கூடாது? என்பது குறித்து மிஸ்பா கேரியர் அகாடமி என்ற யூடியூப் சேனலில் கல்வி ஆலோசகர் டேனியல் பிரதீப் விளக்கியுள்ளார். அகில இந்திய மருத்துவ கலந்தாய்வின் மூன்றாம் சுற்று செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. தமிழக மருத்துவ கலந்தாய்வு செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது. இதில் முதல் இரண்டு சுற்றுகளில் சீட் கிடைத்தவர்கள் மற்றும் சீட் கிடைக்காதவர்கள் என அனைவரும் பங்கேற்கலாம். மூன்றாம் சுற்றில் சீட் கிடைத்தால் கட்டாயம் அந்த கல்லூரியில் சேர்க்கை பெற வேண்டும். சீட் கிடைத்து சேர்க்கை பெறாவிட்டால் வைப்புத்தொகை (டெபாசிட்) திரும்பக் கிடைக்காது. இரண்டாம் சுற்றில் சீட் கிடைத்து கல்லூரியில் சேர்ந்து இருந்தால், அங்கு செலுத்திய கல்வி கட்டணம் திரும்பக் கிடைக்காது. மேலும் அடுத்தடுத்த சுற்று கலந்தாய்வுகளில் பங்கேற்க முடியாது. மூன்றாம் சுற்றில் சீட் கிடைத்து, ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்த பிறகு, கல்லூரியில் சேராவிட்டால் அபராதக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஒருவேளை கல்லூரியில் சேர்ந்த பின், அந்தக் கல்லூரியில் தொடர விருப்பமில்லை என்றால், வைப்புத்தொகை, கல்விக் கட்டணம் திரும்பக் கிடைக்காது. மேலும் ரூ. 10 லட்சம் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே சாய்ஸ் ஃபில்லிங்கின்போது, நீங்கள் நிச்சயம் சேருவீர்கள் என்ற கல்லூரிகளை மட்டும் தேர்வு செய்யுங்கள். அடுத்ததாக நான்காம் சுற்றில் சீட் கிடைத்து கல்லூரியில் சேராவிட்டால், அகில இந்திய ஒதுக்கீடு என்றால் நீங்கள் அடுத்த ஆண்டு நீட் தேர்வு எழுத முடியாது. தமிழக ஒதுக்கீடு என்றால் அடுத்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்க முடியாது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. He is working as a Senior Sub Editor in Indian Express Tamil. He has been working in this organization for more than 4 years. He writes news related to politics, education and employment opportunities. Educational Qualification: Bachelor's Degree in Information Technology Experience: More than 5 years of experience in the news industry. Expertise: He writes education-related news ranging from school and college exams, results, and other information to exams like NEET and JEE. Additionally, he is also writing about the latest job news on TNPSC, Railways, Bank exams and Tamil Nadu and India-wide job opportunities. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
TN MBBS Admission: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் கவுன்சலிங்; ரவுண்ட் 3-ல் தவறு செய்தால் இவ்வளவு ஆபத்து இருக்கு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk