அரபு கட்சிகளுக்கு NO.. நெதன்யாகு மட்டும் போட்டியில்? இஸ்ரேலில் கொந்தளிப்பு!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️
அரபு கட்சிகளுக்கு NO.. நெதன்யாகு மட்டும் போட்டியில்? இஸ்ரேலில் கொந்தளிப்பு!

2026 அக்டோபர் க்னெசெட் தேர்தலை முன்னிட்டு, இஸ்ரேல் மத்திய தேர்தல் குழு ஜாயிண்ட் லிஸ்ட், ராஅம் ஆகிய முக்கிய அரபு கூட்டணிகளை தகுதி நீக்கம் செய்துள்ளது. இதனால் பாலஸ்தீனியர்கள் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு; அவர்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கடுமையாக பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுகிறது. உச்சநீதிமன்றம் மறுஆய்வு செய்ய உள்ள நிலையில், மனித உரிமை அமைப்புகள், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. செய்தியாளர் - M.மீரா 2026 அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள இஸ்ரேல் நாடாளுமன்ற (Knesset) தேர்தலை முன்னிட்டு, அந்நாட்டின் இரண்டு முக்கிய அரபு பெரும்பான்மை அரசியல் கூட்டணிகளை போட்டியிடத் தகுதியற்றதாக இஸ்ரேலின் மத்திய தேர்தல் குழு அறிவித்துள்ளது. இந்த முடிவு அமலுக்கு வந்தால், இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனிய குடிமக்களின் முக்கிய அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்ற கவலை எழுந்துள்ளது. இஸ்ரேலின் மத்திய தேர்தல் குழு இரண்டு முக்கிய அரபு அரசியல் பட்டியல்களை தகுதி நீக்கம் செய்துள்ளது. ஜாயிண்ட் லிஸ்ட் (Joint List) – ஹதாஷ், பலாத், தால் ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டணி மற்றும் ராஅம் (Ra’am / United Arab List) – மன்சூர் அப்பாஸ் தலைமையிலான தனி அரபு கட்சியையும் தகுதி நீக்கம் செய்துள்ளது. இரண்டு கட்சிகளும் சேர்த்து தற்போது இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் 10 இடங்களை வைத்திருக்கின்றன. இவை பெரும்பாலும் இஸ்ரேலின் பாலஸ்தீனிய குடிமக்களின் வாக்குகளை நம்பியுள்ளன. பாலஸ்தீனியர்கள், இஸ்ரேல் மக்கள்தொகையில் சுமார் 20% ஆக உள்ளனர். வலதுசாரி கட்சிகளான லிகுட் (Likud) மற்றும் ஒட்ஸ்மா யெஹூதித் (Otzma Yehudit ) கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களின் அடிப்படையில் இந்தக் கட்சிகளை தகுதி நீக்கம் செய்துள்ளது இஸ்ரேலின் மத்திய தேர்தல் குழு. இஸ்ரேலை “யூத மற்றும் ஜனநாயக நாடு” என ஏற்க மறுப்பது, ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவு, இன வெறுப்பைத் தூண்டுவது போன்றக் குற்றச்சாட்டுகளை காரணங்களை முன்வைத்து இக்கட்சிகளை தகுதி நீக்கம் செய்ய கூறியது வலதுசாரி கட்சிகள். இந்த குற்றச்சாட்டுகளை இஸ்ரேலின் தேர்தல் குழு பெரும்பான்மை வாக்குகளால் ஏற்றுக்கொண்டது. அடுத்த வாரம் இஸ்ரேல் உச்சநீதிமன்றம் தேர்தல் குழுவின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய உள்ளது. கடந்த காலங்களில் 2003, 2013, 2015, 2020 மற்றும் 2022 ஆகிய தேர்தல்களிலும் அரபு கட்சிகளை தடை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, உச்சநீதிமன்றம் பல முறை அவற்றை ரத்து செய்துள்ளது. இந்த முறையும் அதேபோல் தீர்ப்பு வருமா என்பது கவனிக்கப்படுகிறது. இஸ்ரேலில் வாழும் சுமார் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் பாலஸ்தீனியர்கள். உச்சநீதிமன்றமும் இந்த தடையை உறுதி செய்தால், நாட்டின் இரண்டு முக்கிய அரபு அரசியல் கூட்டணிகளும் தேர்தலில் இல்லாத நிலை உருவாகும். அதனால், பாலஸ்தீனிய குடிமக்களின் குரல் நாடாளுமன்றத்தில் கணிசமாகக் குறையக்கூடும் என்ற அச்சத்தை மனித உரிமை அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் வெளிப்படுத்தியுள்ளன.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை