முதல் ODI சதமடித்த WI வீரர் ஜஸ்டின் கிரீவ்ஸ்.. இந்தியாவிற்கு 296 ரன்கள் இலக்கு!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Sports ✍️
முதல் ODI சதமடித்த WI வீரர் ஜஸ்டின் கிரீவ்ஸ்.. இந்தியாவிற்கு 296 ரன்கள் இலக்கு!

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்கத்தில் காம்பெல், ஜஸ்டின் கிரீவ்ஸ் இருவரும் அரைசதம் அடித்து 135 ரன்கள் சேர்த்தனர். பின்னர் கிரீவ்ஸ் தனது முதல் ODI சதம் (101) பதிவு செய்தார். இறுதியில் அமிர் ஜாங்கோ அரைசதம் அடித்து, குல்தீப் யாதவ் 4 விக்கெட் எடுத்தாலும், வெஸ்ட் இண்டீஸ் 295 ரன்கள் குவித்தது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் 2 மணிக்கு தொடங்கியது. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முகமது சிராஜுக்கு இடம் அளிக்கப்படவில்லை. ஆனால் பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் குல்தீப் யாதவ், ஜடேஜா, நமன் திர் ஆகியோர் இடம்பிடித்தனர். 🚨 Toss 🚨#TeamIndia have won the toss & will bowl first in the 1️⃣st #INDvWI ODI.Updates ▶️ https://t.co/O2cs86p4gq pic.twitter.com/8LiQXHqslM பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய வேகப்பந்துவீச்சு யூனிட்டை சிதறடித்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய காம்பெல், க்ரீவ்ஸ் இருவரும் அரைசதமடித்து முதல் விக்கெட்டுக்கே 135 ரன்கள் சேர்த்தனர். இந்திய வேகப்பந்துவீச்சாளர் விக்கெட்டை வீழ்த்த போராடிய நிலையில், குல்தீப் யாதவ் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் பவுலராக விளங்கினார். முதல் விக்கெட்டை வீழ்த்திய குல்தீப் யாதவ், 192/2 என வலுவான நிலையில் இருந்த வெஸ்ட் இண்டீஸை அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 198/5 என மாற்றினார். JUSTIN GREAVES BRINGS UP HIS FIRST ODI CENTURY! 🇯🇲🔥A brilliant hundred against India! pic.twitter.com/xwFEoRBzih மறுமுனையில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜஸ்டின் கிரீவ்ஸ் தன்னுடைய முதல் சர்வதேச ஒருநாள் சதத்தை பதிவுசெய்து அசத்தினார். 101 ரன்னில் அவர் அவுட்டாகி வெளியேற, கடைசியாக வந்து அரைசதமடித்த அமிர் ஜாங்கோ 50 ஓவரில் வெஸ்ட் இண்டீஸை 295 ரன்களுக்கு அழைத்துச்சென்றார். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை