'சோவியத்' விமானத்தை எல்லை தாண்டி ஆப்கன் வீரர் ஓட்டி வந்ததால் பாகிஸ்தான் சந்தித்த புதிய சவால்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
'சோவியத்' விமானத்தை எல்லை தாண்டி ஆப்கன் வீரர் ஓட்டி வந்ததால் பாகிஸ்தான் சந்தித்த புதிய சவால்

பட மூலாதாரம், Pakistan Air Force 1984, செப்டம்பர் 2ஆம் தேதி, ஆப்கானிஸ்தானில் இருந்து பறந்த ஒரு ராணுவ விமானம், தனது இலக்கை நோக்கிச் செல்லாமல் பாகிஸ்தான் எல்லையை நோக்கித் திரும்பியது. சோவியத் தயாரிப்பான அன்டோனோவ் ஏ.என்-26 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்திற்கு ஆப்கானிஸ்தான் விமானப்படை கர்னல் ஹாஜி ஃபகிர் அகமது கேப்டனாக செயல்பட்டார். அந்த விமானம் எல்லையைத் தாண்டி வடக்கு வஜிரிஸ்தானில் உள்ள மிரான்ஷா விமானப்படைத் தளத்தில் தரையிறங்கியது. ஆனால், இது ஒரு ராணுவ விமானம் பாகிஸ்தானுக்குள் எல்லையைக் கடந்து சென்ற சம்பவம் மட்டுமல்ல. சோவியத் ஆதரவு பெற்ற ஆப்கன் அரசாங்கத்திலிருந்தும் போரிலிருந்தும் ஆப்கன் ராணுவ அதிகாரிகள் தப்பிச் செல்லும் போக்கு அதிகரித்து வந்ததன் முக்கியமான அறிகுறியாகவும் இது இருந்தது. 1979, மார்ச் 23 அன்று வெளியிடப்பட்ட அமெரிக்க உளவு முகமையான சிஐஏ-வின் சிறப்புப் பகுப்பாய்வு அறிக்கை ஒன்று, அந்த ஆண்டின் பிற்பகுதியில் சோவியத் ராணுவம் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைவதற்கு முன்பாகவே ஆப்கன் ராணுவத்தில் கிளர்ச்சியும், படைகளை விட்டு விலகும் போக்கும் தொடங்கிவிட்டதைக் காட்டுகிறது. அந்த அறிக்கையின்படி, தராகி அரசாங்கம் ஆயுதக் கிளர்ச்சியின் அதிகரித்து வந்த அச்சுறுத்தலை எதிர்கொண்டிருந்தது. உயிரிழப்புகள், வீரர்களின் பழங்குடியினக் குழுக்களுடனான விசுவாசம் மற்றும் வெற்றி பெறுவதற்கான நம்பிக்கை குறைந்தது ஆகியவற்றால் ராணுவத்தின் மன உறுதி பாதிக்கப்பட்டிருந்தது. என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவின்படி, ஆப்கானிஸ்தான் ராணுவம் கடுமையான அழுத்தத்தில் இருந்தது. "ராணுவத்தின் மன உறுதி குறைவாக இருந்தது. புதிதாகச் சேர்க்கப்பட்ட இளைஞர்கள் முதல் வாய்ப்பு கிடைத்தவுடனேயே தப்பியோடினர். இதனால்தான் 1978-ஆம் ஆண்டில் 1,05,000 ஆக இருந்த ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை, 1987-ஆம் ஆண்டில் சுமார் 20,000 முதல் 30,000 வரை குறைந்தது." 1980, ஜனவரி 21-ஆம் தேதியிட்ட 'டைம்' இதழில், ஆப்கானிஸ்தானில் உள்ள சோவியத் படைகளின் எண்ணிக்கை ஆப்கானிஸ்தான் ராணுவத்தை விடக் கணிசமாக அதிகமாகிவிட்டது என்று செய்தியாளர் டேவிட் டிவோஸ் எழுதியிருந்தார். End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு "காபூலின் ராணுவம் ஒரு காலத்தில் 1,00,000-க்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்டிருந்தது. ஆனால் அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் தப்பியோடியதால், அவர்களின் எண்ணிக்கை 65,000-க்கும் கீழாகக் குறைந்துவிட்டது." கைபர் கணவாயில் நடந்த சண்டையின்போது, சோவியத் ஆதரவு பெற்ற ஆப்கானிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றனர் என்றும், ஆனால் அவர்கள் இருக்கும் இடத்தை சோவியத் படையினர் அறிந்துகொண்டனர் என்றும் டைம் இதழின் வில்லியம் இ. ஸ்மித் ஏப்ரல் 1985-இல் எழுதியிருந்தார். "வெள்ளைக்கொடி ஏந்திய ஒரு சோவியத் ராணுவக் கவச வாகனம் தோர்காமில் உள்ள பாகிஸ்தான் எல்லைச் சாவடிக்கு வந்தது. அந்த மூன்று வீரர்களையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று சோவியத் கேப்டன் ஆங்கிலத்தில் கோரினார். அவர்களைத் திருப்பித் தரவில்லை என்றால் பாகிஸ்தான் 'பல பிரச்னைகளை' சந்திக்க நேரிடும் என்று ஆப்கன் அதிகாரி ஒருவர் உருது மொழியில் மிரட்டினார்." "அந்த வாகனம் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியது. ஆனால் அன்றிரவே, பாகிஸ்தான் சாவடியை நோக்கி 80 பீரங்கி குண்டுகள் வீசப்பட்டன. இரண்டு நாட்களுக்கு, டாங்கிகள் மற்றும் பீரங்கிகளிலிருந்து விட்டுவிட்டுத் தாக்குதல் தொடர்ந்தது. மூன்றாவது நாளில், பாகிஸ்தான் அந்த மூன்று வீரர்களையும் திருப்பி அனுப்பியது." பட மூலாதாரம், Pakistan Air Force ஆனால், ஆப்கன் ராணுவ அதிகாரிகளும் விமானிகளும் தங்களது விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுடன் பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றது, ஒரு சில தனிநபர்கள் தப்பிச் சென்ற சம்பவமாக மட்டும் இருக்கவில்லை. ராணுவத்துக்குள் குழப்பமும் மன உறுதியின்மையும் அதிகரித்து வந்ததற்கான அறிகுறியாக அது இருந்தது. அமெரிக்க தேசிய விமான மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குநரும் எழுத்தாளருமான வால்டர் ஜே. பாய்னின் கூற்றுப்படி, ஆப்கானிஸ்தான் விமானப்படையின் 10 விமானங்கள் பாகிஸ்தானை நோக்கித் திருப்பப்பட்டன. பின்னர் பகிரங்கப்படுத்தப்பட்ட சிஐஏ அறிக்கை ஒன்றின்படி, அந்த நேரத்தில் ஆப்கானிஸ்தான் விமானப்படையானது அதிகாரிகள் மற்றும் வீரர்கள் படைகளை விட்டு விலகுவது மற்றும் குறைவான மன உறுதியுடன் அவர்கள் பணியாற்றுவது போன்ற பிரச்னைகளை எதிர்கொண்டு வந்தது. அதாவது, 1979-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனின் ராணுவத் தலையீட்டிற்குப் பிறகு, ஏ.என்-26 விமானம் பாகிஸ்தானுக்கு வந்தது, அத்தகைய சம்பவங்களில் முதலாவதும் அல்ல, கடைசியும் அல்ல. ஏ.என்-26 விமானம் 1960-களில் சோவியத்தின் 'அன்டோனோவ் டிசைன் பீரோ'வால் உருவாக்கப்பட்டது. இது ஒரு வலுவான சரக்கு விமானமாகும். ஆனால், அப்போது அதை மிரான்ஷாவைத் தாண்டி இயக்குவது மிகவும் ஆபத்தானதாக இருந்தது. பாகிஸ்தான் விமானப்படை ஒரு புதிய சவாலை எதிர்கொண்டது. விமானம் பாகிஸ்தானுக்கு வந்துவிட்டது, ஆனால் அதை ஒரு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், பாகிஸ்தான் விமானிகள் இதற்கு முன்பு இந்த சோவியத் தயாரிப்பு விமானத்தை ஓட்டியதே இல்லை. அந்த விமானம் அங்கிருந்து எப்படி எடுத்துச் செல்லப்பட்டது என்பதை சம்பவம் நடந்த மறுநாள், பாகிஸ்தான் விமானப்படை இதழான 'செகண்ட் டு நைன்'-இல் வெளியான ஒரு கட்டுரையில் ஏர் கொமடோர் காலித் கமல் விவரித்துள்ளார். "நான் குழுவினர் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, யாரோ ஒருவர் வந்து எங்களது கமாண்டிங் அதிகாரி விங் கமாண்டர் கஃபூர் அந்த விமானத்தை மிரான்ஷாவிலிருந்து இயக்கத் திட்டமிட்டுள்ளார் என்று சொன்னார். அது பலவிதமான நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படக் கூடிய இரட்டை இன்ஜின் கொண்ட இலகுரக டர்போப்ராப் விமானமாகும்." "அந்த நேரத்தில், நான் 12-ஆவது விஐபி ஸ்க்வாட்ரனில் எஃப்-27 ஃபோக்கர் பிரண்ட்ஷிப் விமானத்தின் இணை விமானியாக இருந்தேன். நான் இளைஞனாக இருந்ததால் எப்போதும் சுவாரஸ்யமான ஏதாவது ஒன்றைத் தேடிக்கொண்டிருந்தேன். எனவே, இந்தப் பணி எனக்குப் பொருத்தமானது என்று நினைத்தேன். நேராக கமாண்டிங் அதிகாரியின் அறைக்குச் சென்றேன். அங்கே அவர் சீனியர் நேவிகேட்டரான ஸ்குவாட்ரன் லீடர் சுல்ஃபிகருடன் அமர்ந்திருந்தார். அவர்களுக்கு எதிரே மேசையில் வரைபடங்கள் விரித்து வைக்கப்பட்டிருந்தன." "இந்த மிஷனில் இணை விமானியாக வர நான் விருப்பம் தெரிவித்தேன். அவர்கள் இருவரும் என்னைப் பார்த்தார்கள். விங் கமாண்டர் கஃபூர், 'இது எத்தகைய பணி என்று உனக்குத் தெரியுமா? இது மிகவும் ஆபத்தானது, உயிர்கூட போகலாம். மிரான்ஷாவிலிருந்து விமானம் புறப்பட்டவுடனேயே அதைச் சுட்டு வீழ்த்த ரஷ்யர்கள் முயற்சிப்பார்கள். எனவே இந்தப் பணியில் சேர முடிவெடுப்பதற்கு முன் கவனமாக யோசி' என்று கூறினார்." "எனது தொடர் வற்புறுத்தல்களுக்குப் பிறகு, ஒரு இணை விமானியாக அவருடன் வர எனக்கு அவர் அனுமதி அளித்தார்." அடுத்த நாள் காலை தனது இரவுப் பயணத்துக்கான பொருட்களுடன் தான் வந்தடைந்ததாக காலித் கமல் தனது "ஃபைனஸ்ட் ஹவர்: தி டேல் ஆஃப் தி ஏ.என்-26" என்ற கட்டுரையில் எழுதியுள்ளார். ஸ்க்வாட்ரன் லீடர் காலித் மற்றும் ஃபிளைட் லெப்டினன்ட் நயீம் ஆகியோர் அவரை ஒரு பீச்கிராஃப்ட் விமானத்தில் மிரான்ஷாவுக்கு அழைத்துச் சென்றனர். "மிரான்ஷாவை அடைந்ததும், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளால் நாங்கள் வரவேற்கப்பட்டோம். அந்த விமானத்தைப் பார்த்து அதைப் புரிந்துகொள்ள நாங்கள் விரும்பினோம். ஆனால் எல்லைக்கு அப்பால் இருந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்றுக் கொண்டிருந்ததால், விமானத்தின் அருகே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டோம். மரக்கிளைகளால் மூடி அந்த விமானம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது." "நாங்கள் ராணுவப் பிரிவு அதிகாரிகளின் உணவுக்கூடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். பாகிஸ்தானுக்கு விமானத்தை ஓட்டி வந்த அந்த ஆப்கன் விமானிகளை அங்கே சந்தித்தோம். அவர்கள் இருவரும் ஒரு பூட்டிய அறைக்குள் அமர வைக்கப்பட்டிருந்தனர்." "அந்த விமானத்தின் ஆப்கன் கேப்டன் தனது குடும்பத்தை முன்னதாகவே பாகிஸ்தானுக்கு அனுப்பிவிட்டார் என்பதை நாங்கள் அங்கே தெரிந்துகொண்டோம். அரசியல் தஞ்சம் கோருவதற்காக அதன் பின்னர் அவரே விமானத்தை பாகிஸ்தானுக்கு ஓட்டி வந்துள்ளார். அவரது இந்த முடிவால் அவருடைய இணை விமானி மிகவும் கோபமடைந்திருந்தார், இதனால் அவர்கள் இருவரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்." "இணை விமானியின் கோபத்திற்கு நியாயமான காரணம் இருந்தது. கேப்டன் தனது திட்டத்தைப் பற்றி முன்கூட்டியே அவரிடம் கூறியிருந்தால், அவரும் தனது குடும்பத்தை பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்க முடியும்." எல்லா ஏற்பாடுகளும் முடிந்த பிறகு, ஆப்கன் கேப்டனை விமானத்திற்கு அழைத்து வருமாறு ராணுவ அதிகாரிகளிடம் கேட்டதாக காலித் கமல் எழுதியுள்ளார். அதாவது, விமானம் புறப்படுவதற்கு முந்தைய சோதனைகளில் அவர் உதவ முடியும் என்பதால். ஆனால், அந்தக் கேப்டனிடம் 'பாகிஸ்தானில் உள்ள ஒரு நகரத்துக்கு எங்களுடன் வருவதுடன், விமானப் பயணத்தின் போது எங்களுக்கு உதவலாம்' என்று தெரிவிக்கப்பட்டது. "இதைக் கேட்டதும் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து உற்சாகமாக எங்களுடன் விமானத்தை நோக்கி நடந்தார். இதைப் பார்த்ததும் அவருடைய இணை விமானி மேலும் கோபமடைந்தார். நாங்கள் விமானத்திற்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டோம். எங்கள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, என்ஜினை ஸ்டார்ட் செய்ய ஆப்கன் கேப்டனின் உதவியைக் கேட்டோம். அவர் எங்களுக்கு மகிழ்ச்சியுடன் உதவினார்." "விமானத்தை ஓடுபாதைக்குக் கொண்டு வந்து புறப்படத் தயாரான போது, அவர் எங்களுடன் வரப்போவதில்லை என்று கேப்டனிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் மிகவும் கோபமடைந்தார். ராணுவ அதிகாரிகள் அவரை வலுக்கட்டாயமாக விமானத்திலிருந்து வெளியேற்ற வேண்டியதாயிற்று." காலித் கமலின் கூற்றுப்படி, இறக்கிவிடப்படும் போது, அந்த ஆப்கன் கேப்டன் ஃப்ளைட் என்ஜீனியரின் பேனலில் இருந்த ஒரு சுவிட்சின் நிலையை மாற்றிவிட்டார், அதை காலித் கவனிக்கவில்லை. "வானிலை தெளிவாகவும் வெயிலுடனும் இருந்தது. மிரான்ஷாவின் மலைகள் அழகாகக் காட்சியளித்தன. புறப்பட்ட பிறகு, நாங்கள் கிழக்கு நோக்கிச் சென்று பள்ளத்தாக்கிற்குள் மிகக் குறைந்த உயரத்தில் பறந்தோம். எல்லையைக் கண்காணித்து வரும் ரஷ்யப் போர் விமானங்களைத் தவிர்ப்பதே இதன் நோக்கமாகும். நாங்கள் அவர்கள் கண்களில் சிக்குவோம் என்று அவர்கள் காத்திருந்தார்கள்" என காலித் குறிப்பிடுகிறார். பட மூலாதாரம், Combat & Aviation History Of Pakistan "ஆபத்து மிகப்பெரியதாக இருந்தது. ரஷ்ய ஏவுகணைகள் எங்களைக் குறிவைக்கலாம் என்று நாங்கள் பயந்தோம். அந்த நேரத்தில், பாகிஸ்தான் விமானப்படையின் மிராஜ் போர் விமானங்கள் எங்களுக்கு மேலே வளைந்து நெளிந்து பறந்து கொண்டிருந்தன. அவை எங்களது விமானத்திற்கு ஏற்ப தங்களது வேகத்தை சீராக வைத்திருந்தன, எந்தவொரு தாக்குதலில் இருந்தும் எங்களைப் பாதுகாப்பதற்காக எங்களுடன் வந்தன. அவற்றின் இருப்பு எங்கள் மன உறுதியை அதிகரித்தது". "இராக்கில் பணியில் இருந்தபோது விங் கமாண்டர் கஃபூர் இதேபோன்ற ஒரு விமானத்தை ஓட்டியிருந்தார். அவர் முழு நம்பிக்கையுடனும் அமைதியுடனும் விமானத்தைக் கையாண்டு கொண்டிருந்தார்." "மலைப்பாங்கான நிலப்பரப்பில் வழியைக் கண்டறிய ஸ்க்வாட்ரன் லீடர் சுல்ஃபிகர் எங்களுக்கு உதவிக் கொண்டிருந்தார். நான் வானொலி தகவல்தொடர்புகளையும் விமானத்திற்குள் இருந்த காற்றழுத்த அமைப்பையும் நிர்வகித்து வந்தேன். இந்த விறுவிறுப்பான பயணத்தை நானும் அனுபவித்துக் கொண்டிருந்தேன்." "மியான்வாலியில் உள்ள பயிற்சிப் பகுதியை அடைந்த பிறகு, மியான்வாலி கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டேன். நாங்கள் செல்லக்கூடிய இடம் பற்றி ஏர் டிராஃபிக் கன்ட்ரோலர் கேட்டார். செயல்பாட்டு காரணங்களுக்காக, நாங்கள் செல்லும் இடத்தை என்னால் வெளிப்படுத்த முடியாது என்று நான் பதிலளித்தேன்." "நாங்கள் மஸ்ரூர் பாகிஸ்தான் விமானப்படை தளத்தை நோக்கித் தொடர்ந்து சென்றோம். அங்கே விங் கமாண்டர் கஃபூர் மிகவும் நிதானமாகவும் தொழில்முறையாகவும் விமானத்தைத் தரையிறக்கினார்." "நாங்கள் விமானத்தை ஓடுபாதையிலிருந்து தார் தளத்தை நோக்கிக் கொண்டு சென்றபோது, விமானத்தின் சில பகுதிகள் தரையில் உரசிக் கொண்டிருப்பதை நாங்கள் உணர்ந்தோம். தரையிறங்கும்போது விமானத்தின் பின்பக்கக் கதவு திறந்துகொண்டதும், அது இப்போது தரையில் இழுபட்டுக் கொண்டே வந்ததும் தெரியவந்தது" என காலித் கமல் தொடர்ந்து விவரிக்கிறார். "விமானத்தில் இருந்து இறக்கிவிடப்படும் போது ஆப்கன் கேப்டன் மாற்றியமைத்த அதே சுவிட்சினால் இந்தச் சிக்கல் ஏற்பட்டிருந்தது." அந்த விமானத்திற்கு பின்னர் பாகிஸ்தான் விமானப்படையின் நிறங்கள் மற்றும் சின்னங்கள் பூசப்பட்டன. அதற்கு ஜே-754 என்ற பதிவு எண் வழங்கப்பட்டது. அது பாகிஸ்தான் விமானப்படையில், (எண் 12 படைப்பிரிவு உட்பட) சில காலம் சேவையில் இருந்தது. விமானப் புகைப்படக் கலைஞரான பீட்டர் ஸ்டெய்ன்மேன் பிப்ரவரி 21, 1988 அன்று ராவல்பிண்டியில் உள்ள சக்லாலா விமானத் தளத்தில் இந்த விமானத்தைப் புகைப்படம் எடுத்தார். அந்த நேரத்தில், விமானம் பாகிஸ்தான் விமானப்படை சின்னங்களையும் ஜே-754 என்ற பதிவு எண்ணையும் தாங்கியிருந்தது. பின்னர் இந்த விமானம் கராச்சியில் உள்ள பி.ஏ.எஃப் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை