பரச்சேரி இனி வடக்கு அச்சம்தவிழ்த்தான்; தலித் மக்களின் பல ஆண்டு கோரிக்கை ஏற்பு: கிராம பெயரை மாற்றி அரசாணை வெளியீடு

📅 📍 Madurai, Tamil Nadu 🏷️ News ✍️
பரச்சேரி இனி வடக்கு அச்சம்தவிழ்த்தான்; தலித் மக்களின் பல ஆண்டு கோரிக்கை ஏற்பு: கிராம பெயரை மாற்றி அரசாணை வெளியீடு

கிராமத்தின் பெயர் அச்சம்தவிழ்த்தான் என்றாலும், தலித் மக்கள் வாழும் பகுதி இனி பரச்சேரி இல்லாமல் வடக்கு அச்சம்தவிழ்த்தான் என்று அழைக்கப்படும் என்று வருவாய்த்துறை ஆணையர் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் அச்சம்தவிழ்த்தான் கிராமத்தில் தலித் மக்கள் வாழும் பகுதிக்கு பரச்சேரி என்று அழைக்கப்பட்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ஊரின் பெயரை மாற்ற அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சட்டமன்ற தேர்தலையும் அக்கிராம தலித் மக்கள் புறக்கணித்தனர். இதனிடையே அப்பகுதி தலித் மக்கள் நீண்ட நாள் கோரிக்கையான பரச்சேரி பெயர் மாற்றம் தற்போது நடந்துள்ளது. கிராமத்தின் பெயர் அச்சம்தவிழ்த்தான் என்றாலும், தலித் மக்கள் வாழும் பகுதி இனி பரச்சேரி இல்லாமல் வடக்கு அச்சம்தவிழ்த்தான் என்று அழைக்கப்படும் என்று வருவாய்த்துறை ஆணையர் அறிவித்துள்ளார். இது குறித்து பீமாராவ் சாக்யா என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பரச்சேரி இனி வடக்கு அச்சம்தவிழ்த்தான் என்று அழைக்கப்படும்! விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்திற்குட்பட்ட அச்சம்தவிழ்த்தான் கிராமத்தில் பட்டியலின மக்கள் வாழும் பகுதி சாதிய அடையாளத்தோடு பரச்சேரி என அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனை நீக்கக்கோரி அம்மக்கள் பல ஆண்டுகள் கடுமையாக போராடி வந்தனர். ஆனாலும், ஆண்ட அரசுகள் அவர்களின் கோரிக்கையை காது கொடுத்துக்கூட கேட்கவில்லை. இறுதியாக, அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கவும் செய்தனர். கிராமங்கள், தெருக்கள், சாலைகள் மற்றும் நீர்நிலைகள், சந்தைகள் உள்ளிட்ட பொது சொத்துக்கள் சாதிப் பெயரோடு இருப்பதை நீக்க கடந்த 06.10.2025 அன்று நகரட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பிறப்பித்த அரசாணை சார்பில் அரசாணை பிறப்பிக்கப்படிருந்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமரவில் பரமசிவம் என்பவரால் தொடரப்பட்ட வழக்கு, கடந்த 23.09.2026 அன்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், பரச்சேரி எனும் பெயரை அரசு ஆவணங்களிலிருந்து நீக்கி, வடக்கு அச்சம்தவிழ்த்தான் என பெயர் சூட்ட, விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார். இனி அச்சம்தவிழ்த்தானில் பட்டியலின மக்கள் வாழும் பகுதி வடக்கு அச்சம்தவிழ்த்தான் என அழைக்கப்பட இருக்கிறது. இது அந்த மக்களின் நீண்ட நெடிய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். மகிழ்ச்சி! என்று, பீமாராவ் சாக்யா என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை