ஐச்சி-நகோயாவில் உள்ள டோகாய் சிட்டிசன் ஜிம்னாசியத்தில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில், ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி ஈரானை 37-34 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆசிய விளையாட்டுப் போட்டியில், சனிக்கிழமை நடைபெற்ற 2026 பெண்கள் கபடி இறுதிப் போட்டியில் இந்தியப் பெண்கள் கபடி அணி, ஈரானை வீழ்த்தி, தொடர் முழுவதும் தோல்வியே சந்திக்காமல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: ஐச்சி-நகோயாவில் உள்ள தோகை சிட்டிசன் உடற்பயிற்சிக் கூடத்தில் நடந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், வலுவான இந்திய அணி 37-34 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்திய அணி இந்த ஆண்டு 3-வது தங்க பதக்கத்தை வென்றது. ஏற்கனவே வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர்க்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. அதேபோல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் சுருச்சி சிங் போகட் - கமல்ஜீத் இணை தங்கப்பதக்கம் வென்றது. இதுவே இந்த ஆசிய விளையாட்டுத் தொடரில் இந்தியாவுக்குக் கிடைத்த மூன்றாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.ஆசிய விளையாட்டு கபடிப் போட்டியில், பிரிவு-ஏ போட்டிகளில் இந்திய அணி, வங்கதேசம் மற்றும் ஜப்பான் ஆகிய அணிகளை மிக எளிதாக வீழ்த்தியது. மேலும், குழுச் சுற்றுப் போட்டியிலும் ஈரானைத் தோற்கடித்துப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 2010-ம் ஆண்டு முதல் மகளிர்க்கான கபடி போட்டி சேர்க்கப்பட்டு விளையாடி வருகிறது. இதில் 2018 ஜகார்தாவில் நடைபெற்ற போட்டியில் ஈரானிடம் தோற்று இரண்டாம் இடம் பிடித்ததைத் தவிர, இதற்கு முந்தைய அனைத்துப் பதிப்புகளிலும் இந்தியாவே தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. சாவன் பர்வால் ஆண்களுக்கான மாரத்தான் போட்டியில் வென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கம் மற்றும் ஸ்குவாஷ் போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா - வேலவன் செந்தில்குமார் இணை வென்ற வெண்கலப் பதக்கத்திற்குப் பிறகு, 8-ஆம் நாளில் இந்தியா வென்ற 3-வது பதக்கம் இந்தத் தங்கப் பதக்கமாகும். ஆசிய விளையாட்டு கபடி வரலாற்றில் இந்தியா வெல்லும் 12-வது தங்கப் பதக்கம் இதுவாகும். இதில் 1990-ம் ஆண்டில் இருந்து ஆண்கள் அணி 8 தங்கப் பதக்கங்களைப் பெற்றுத் தந்துள்ளது. இதனிடையே இந்திய ஆண்கள் அணி சனிக்கிழமை (செப்டம்பர் 26) பிற்பகுதியில் நடைபெறும் இறுதிப் போட்டியில் ஈரானை எதிர்கொண்டு தங்கப் பதக்கத்திற்காக விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 40-34 என்ற புள்ளி கணக்கில் இந்திய ஆண்கள் கபடி அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றது. இதன் மூலம் ஆசிய கபடி போட்டியில் இந்திய ஆண்ககள் மற்றும் பெண்கள் என இரு அணிகளும் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
கை கொடுத்த கபடி: ஆசிய போட்டி ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் இந்தியாவுக்கு தங்கம்; ஈரானை வீழ்த்தி அபாரம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk