துணைநிலை ஊழியர்களின் பிரச்சினைகளில் தீர்வு காண வேண்டும். வங்கி பெண் ஊழியர்களுக்கான அடிப்படை கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு கனரா வங்கி பணியாளர்கள் சங்கத்தின் 4-வது மாநில மாநாடு, திருச்சியில் இன்று நடைபெற்றது. கனரா வங்கி பணியாளர்கள் சங்க தலைவர் சிவலிங்கம் மாநாட்டு கொடியை ஏற்றிவைத்து மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார். தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சுரேஷ் துவக்கவுரையாற்றினார். கனரா வங்கி பணியாளர் சங்க செயலாளர் வெங்கடேஷ், பிஇஎப்ஐ பொதுச் செயலாளர் சுனில்குமார், இணைச் செயலாளர் புவனேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த மாநாட்டில் வங்கி துறையில் வாரம் 5 வேலை நாட்கள் பணியினை அமல்படுத்த வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை மேம்படுத்த வேண்டும். வங்கிப் பணியில் அனைத்து மட்டங்களிலும் தேவைக்கேற்ப ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும். நியாயமான மற்றும் வெளிப்படையான இடமாற்றல் கொள்கையை கொள்கையை அமல்படுத்த வேண்டும். தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். துணைநிலை ஊழியர்களின் பிரச்சினைகளில் தீர்வு காண வேண்டும். வங்கி பெண் ஊழியர்களுக்கான அடிப்படை கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கனரா வங்கி பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் நன்றி கூறினார். பிறகு தமிழ்நாடு கனரா வங்கி பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது ;வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தை நீர்த்து போக செய்யவே நாளை ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது. நாளை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்கள் வங்கிக்கு செல்வார்கள். அதே நேரத்தில் 28 -30 வரை நடைபெறும் மூன்று நாள் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக அமையும். வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு தான், அதே நேரத்தில் நாங்கள் அவர்களுக்கு செய்யும் சேவையை மனதில் கொண்டு பொதுமக்கள் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு தான் அதே நேரத்தில் நாங்கள் அவர்களுக்கு செய்யும் சேவையை மனதில் கொண்டு பொதுமக்கள் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பேசினார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
3 நாட்கள் வேலை நிறுத்தம்; பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்: வங்கி பணியாளர்கள் சங்கம் வேண்டுகோள்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk