அரங்கு முழுவதும் மாணவர்களும், பெற்றோர்களும், பேராசிரியர்களும் நிறைந்திருந்த அந்த நிகழ்ச்சியில், உயர்நீதிமன்ற நீதிபதி ஏடி.ஜெகதீஷ்சந்திரா பேசிக்கொண்டிருந்தபோது மின்வெட்டு ஏற்பட்டது. மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற அரசு சட்டக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் நீதிபதி ஏடி ஜெகதீஷ்சந்திரா பேசிக் கொண்டிருந்தபோதே திடீரென மின்தடை ஏற்பட்டது. மின்சாரத்துறை சார்ந்த அமைச்சரின் நிகழ்ச்சியிலேயே மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் சற்றே பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது. மதுரை அரசு சட்டக்கல்லூரியில் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிச் சிறப்பு உரையாற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அரங்கு முழுவதும் மாணவர்களும், பெற்றோர்களும், பேராசிரியர்களும் நிறைந்திருந்த அந்த நிகழ்ச்சியில், உயர்நீதிமன்ற நீதிபதி ஏடி.ஜெகதீஷ்சந்திரா பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்த அரங்கு இருளில் மூழ்கியதால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், சில நிமிடங்களில் மின்சாரம் மீண்டும் வந்தது. இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதி தனது பேச்சை தொடங்கினார். தமிழகத்தில் மின் பற்றாக்குறை எதுவும் இல்லை என்று தினம் தோறும் அமைச்சர் நிர்மல்குமார் கூறி வரும் நிலையில், அவர் பங்கேற்ற நிகழ்ச்சியிலே மின் தடை ஏற்படுகிறதே என்று பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மாணவ மாணவிகள் முனுமுனுத்தையும் பார்க்க முடிந்தது. முன்னதாக, இடைத்தேர்தல் நடைபெறும் தாராபுரம், மதுராந்தகம் தொகுதியிலும் மின்வெட்டு ஏற்படுவது தவெகவினர் மத்தியிலே தர்மசங்கடத்தை எற்படுத்தியது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அச்சிறுப்பாக்கத்தில் நடைபெற்ற தவெக முகவர்கள் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசும் போது, திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. உடனே அப்செட் ஆன ஆதவ், ஜெனரேட்டரை ஆன் செய்யுங்கள் என்றார். சிறிது நேரத்தில் மீண்டும் மின்சாரம் வந்தது. அதேபோல, தாராபுரத்தில் அமைச்சர் செங்கோட்டையன் உள்பட அமைச்சர்கள் பலர் பங்கேற்ற நிகழ்ச்சியிலும் மின்வெட்டு ஏற்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகின. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
மின்சாரத்துறை அமைச்சர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு: மதுரை நிகழ்ச்சியில் பரபரப்பு
📅
📍 Madurai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk