இன்ஸ்டா ரீல்ஸில் தன் ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் அணிந்திருக்கும் தங்க நகைகளை அடிக்கடி வெளிப்படுத்தி வந்த பிரபல யூடியூபர் மதுமிதா, சமீபத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்களிடம் பறிகொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்தே கைவரிசை: ஷாப்பிங் சென்ற நேரத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை! கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தாமத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவரது மனைவி மதுமிதா. இவர் ஒரு பிரபல சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர் மற்றும் யூடியூபர் ஆவார். கடந்த வியாழக்கிழமை மாலை மதுமிதாவும் அவரது குடும்பத்தினரும் வீட்டை பூட்டிவிட்டு ஷாப்பிங் செல்வதற்காக வெளியே சென்றுள்ளனர். பின்னர் இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 118 சவரனுக்கும் அதிகமான தங்க நகைகள், வைர நகைகள் மற்றும் 50,000 ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் ஆகும் இது குறித்து தகவல் அறிந்ததும் ராஜமங்கலம் காவல்துறையினர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்சுல் நாகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், தடயங்களை சேகரிக்க கைரேகை நிபுணர்களும், மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டன. கொள்ளைக்காரர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது விசாரணையில், குற்றவாளிகள் அதிநவீன கட்டிங் மெஷின் மூலம் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை அறுத்து உள்ளே நுழைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனிடையே, மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கங்களில் அடிக்கடி தங்களது வீட்டில் உள்ள தங்கம், கட்டுக் கட்டாக பணம் மற்றும் வைரம் போன்றவற்றை வெளிப்படையாக காட்டி ரீல்ஸ் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். மேலும், தாங்கள் எங்கு நகை வாங்குவதற்குச் செல்கிறோம், எங்கு பயணம் செய்கிறோம் என்ற விவரங்களையும் குடும்பத்தினர் தொடர்ந்து ஆன்லைனில் பகிர்ந்து வந்துள்ளனர். குடும்பத்தினரின் இந்த தொடர்ச்சியான சமூக வலைதள பதிவுகளை துப்பு துலக்கிய கொள்ளையர்கள், வீடு ஆளில்லாத நேரத்தை துல்லியமாக கணித்து இந்த கைவரிசையை காட்டியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஒருபுறம் இருக்க, கடந்த காலங்களில் தன் நகை மற்றும் சொத்துக்கள் குறித்து தன்னை விமர்சித்தவர்களுக்கு மதுமிதா பதிலடி கொடுத்து பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகப் பரவி வருகிறது. மதுமிதா முன்னர் வெளியிட்ட அந்த வீடியோவில் பேசியுள்ளதாவது: "நான் எந்த வீட்டில் இருக்கிறேன் என்பது உனக்குத் தெரியாது. நான் ஆறு வீடு வைத்துள்ளேன்; அதில் எந்த வீட்டில் இருப்பேன் என்று உன்னால் சொல்ல முடியுமா? நான் கஷ்டப்பட்டு சம்பாதிப்பதை எப்படி காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் அணியும் நகைகளை அன்றாட பயன்பாட்டிற்காக ஒரு நாள் மட்டும் பயன்படுத்திவிட்டு, உடனடியாக பேங்க் லாக்கரில் கொண்டு போய் வைத்துவிடுவோம். எங்களது கேஷ் மற்றும் நகைகள் அனைத்தும் பாதுகாப்பான லாக்கரில் தான் இருக்கும். உங்களது முட்டாள்தனமான கமெண்டுகளையும், 'இவள் வீட்டில் போய் திருடு' என்ற கேவலமான யோசனைகளையும் தயவுசெய்து நிறுத்திக் கொள்ளுங்கள். நான் எதையும் பணத் திமிரில் செய்யவில்லை. என் இன்ஸ்டா வீடியோக்கள் அனைத்தும் எனது நினைவுகளுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் மட்டுமே பகிரப்படுபவை. அதைப் பார்ப்பதும் பார்க்காததும் உங்கள் விருப்பம். ஆனால், அதை வைத்துவிட்டு என் வீட்டில் நகை இருக்கிறது போய் திருடுங்கள் என்று கூறுவது ரொம்பத் தவறான விஷயம்" என்று அந்த வீடியோவில் அவர் மிக ஆவேசமாக விளக்கியிருந்தார். தற்போது மதுமிதா கோடிக்கணக்கில் நகைகளை இழந்து நிற்கும் நிலையில், இந்த பழைய வீடியோவை நெட்டிசன்கள் இணையத்தில் பகிர்ந்து கிண்டல் செய்தும், விழிப்புணர்வு பதிவுகளாகவும் மாற்றி வருகின்றனர். சமூக வலைதளங்களில் தங்களது சொந்த வாழ்க்கை முறைகள், விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் இருப்பிடங்களை வெளிப்படையாகக் காட்டுவது எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
இன்ஸ்டா ரீல்ஸ் மோகத்தால் ரூ.1 கோடி நகை பறிபோன விவகாரம்: ’முடிந்தால் திருடுங்கள்’: மதுமிதாவின் பழைய சவால் வீடியோ மீண்டும் வைரல்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk