தமிழக சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 4724 பணியிடங்கள்; டிப்ளமோ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க; தேர்வு முறை இதுதான் தமிழ்நாடு அரசின் மாநில நலவாழ்வு சங்கத்தின் கீழ் மாவட்டந்தோறும் செயல்படும் துணை சுகாதார நிலையம் – நலவாழ்வு மையங்களில் செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4724 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் அனைத்தும் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகிறது. தகுதியுள்ளவர்கள் 25.09.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். செவிலியர் (Staff Nurse) காலியிடங்களின் எண்ணிக்கை: 4724 கல்வித் தகுதி: செவிலியர் பட்டயப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டப்படிப்பு (B.Sc Nursing) படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ அல்லது டிகிரி படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://nhm.tn.gov.in/sites/default/files/2026-9/02_Model_Application_Form_Staff_Nurse.pdf என்ற இணையதள பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அந்தந்த மாவட்ட நலவாழ்வுச் சங்களில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.09.2026 இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. He is working as a Senior Sub Editor in Indian Express Tamil. He has been working in this organization for more than 4 years. He writes news related to politics, education and employment opportunities. Educational Qualification: Bachelor's Degree in Information Technology Experience: More than 5 years of experience in the news industry. Expertise: He writes education-related news ranging from school and college exams, results, and other information to exams like NEET and JEE. Additionally, he is also writing about the latest job news on TNPSC, Railways, Bank exams and Tamil Nadu and India-wide job opportunities. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
தேர்வு கிடையாது; தமிழக சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 4724 பணியிடங்கள்; விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk