சென்னை ஐ.ஐ.டி பாட்காஸ்ட்: ஏ.ஐ காலத்தில் தொழில்முறை முடிவுகளை எப்படி எடுப்பது? பொருளாதார நிபுணர் சஞ்சீவ் சன்யால் அறிவுரை

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️
சென்னை ஐ.ஐ.டி பாட்காஸ்ட்: ஏ.ஐ காலத்தில் தொழில்முறை முடிவுகளை எப்படி எடுப்பது? பொருளாதார நிபுணர் சஞ்சீவ் சன்யால் அறிவுரை

கணிக்க முடியாத உலகத்திலும், ஏ.ஐ ஆதிக்கம் செலுத்தும் எதிர்காலத்திலும் மாணவர்கள் எவ்வாறு சரியான தொழில்முறை முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யாலுடன் சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் நடத்திய சுவாரஸ்யமான பாட்காஸ்ட் உரையாடல். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரான சஞ்சீவ் சன்யால் பங்கேற்று, ஆரம்பத்திலேயே "சரியான" வேலைப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் அழுத்தம் குறித்தும், ஏ.ஐ காலத்தில் தங்களை தகவமைத்துக் கொள்வதன் அவசியம் குறித்தும் விரிவாகப் பேசியுள்ளார். செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) மற்றும் தொழில்நுட்ப சீர்குலைவுகளால் வேகமாக மாறிவரும் உலக சூழலில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெளிவான வேலைவாய்ப்பு முடிவுகளை எடுக்க உதவும் வகையில் சென்னை ஐ.ஐ.டி ஒரு சிறப்பு பாட்காஸ்ட் தொடரை வெளியிட்டுள்ளது. இதில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரான சஞ்சீவ் சன்யால் பங்கேற்று, ஆரம்பத்திலேயே "சரியான" வேலைப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் அழுத்தம் குறித்தும், ஏ.ஐ காலத்தில் தங்களை தகவமைத்துக் கொள்வதன் அவசியம் குறித்தும் விரிவாகப் பேசியுள்ளார். சென்னை ஐ.ஐ.டியின் பயன்பாட்டு இயக்கவியல் மற்றும் உயிரி மருத்துவப் பொறியியல் துறை பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா தொகுத்து வழங்கும் ‘தி பேராசிரியர் மகேஷ் பாட்காஸ்ட்’ (The Prof. Mahesh Podcast) நிகழ்ச்சியின் புதிய அத்தியாயம் செப்டம்பர் 24 அன்று வெளியானது. சென்னை ஐ.ஐ.டியின் டிஜிட்டல் கல்வி மற்றும் விரிவாக்க மையத்தின் (CODE) ஆதரவோடு இயங்கும் இந்த பாட்காஸ்ட், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே நிலவும் தகவல் இடைவெளியைப் போக்குவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரான சஞ்சீவ் சன்யாலைத் தனது பாட்காஸ்ட் தொடரில் தொகுப்பாளராக இணைந்து வரவேற்றார். பொறியியல் மற்றும் அறிவியல் துறைகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தகவலறிந்து வேலைவாய்ப்பு குறித்த சரியான முடிவுகளை எடுக்க உதவுவதே இந்த பாட்காஸ்ட்டின் நோக்கமாகும். ‘பேராசிரியர் மகேஷ் பாட்காஸ்ட்’ (The Prof. Mahesh Podcast) தொடரின் புதிய அத்தியாயம் வியாழக்கிழமை (செப்டம்பர் 24, 2026) ஒளிபரப்பப்பட்டது. தொழில்நுட்ப சீர்குலைவு, மாறிவரும் பொருளாதார வாய்ப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) ஆகியவற்றால் உருவாக்கப்படும் கணிக்க முடியாத உலகத்தில், தொழில்முறை முடிவுகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். சென்னை ஐ.ஐ.டி உட்பட பல்வேறு இடங்களில் ஸ்டார்ட்-அப் கலாச்சாரம் மற்றும் பரிசோதனை முயற்சிகள் அதிகரித்து வருவது, ஆபத்துகளை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருப்பதையே காட்டுகிறது என்று திரு. சஞ்சீவ் சன்யால் சுட்டிக்காட்டினார். இதில் பெற்றோர்களின் பங்கையும் வலியுறுத்திய அவர், தங்கள் சொந்த ஆசைகளை பிள்ளைகள் மீது சுமையாக திணிக்காமல், இளைஞர்கள் தங்களுக்கான சொந்தப் பாதையை உருவாக்கிக் கொள்ள அவர்களுக்குத் தேவையான சுதந்திரத்தை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சென்னை ஐ.ஐ.டி-யின் பயன்பாட்டு இயக்கவியல் மற்றும் உயிரி மருத்துவப் பொறியியல் (Applied Mechanics and Biomedical Engineering) துறையின் முன்னாள் மாணவர் சமூகத் தலைவருமான பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா இந்த பாட்காஸ்ட்டை தொகுத்து வழங்குகிறார். இதில் துறை சார்ந்த வல்லுநர்களுடன் ஆழமான உரையாடல்கள் இடம்பெறுகின்றன. இளமைப் பருவத்திலேயே இளைஞர்கள் சரியான "தொழில்முறைப் பாதையை" தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பரவலான எண்ணத்திற்கு இந்த அத்தியாயம் சவால் விடுக்கிறது. மாறாக, வேலைவாய்ப்பு என்பது தேர்வுகள், வாய்ப்புகள், பரிசோதனைகள் மற்றும் எப்போதும் கணிக்க முடியாத சூழல்களின் வழியாகவே உருவெடுக்கிறது என்று வாதிடுகிறது. சென்னை ஐ.ஐ.டி-யின் டிஜிட்டல் கல்வி மற்றும் விரிவாக்க மையத்தின் (CODE) ஆதரவுடன் இயங்கும் 'பேராசிரியர் மகேஷ் பாட்காஸ்ட்', மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முடிவுகளை எடுக்கும்போது எதிர்கொள்ளும் தகவல்தொடர்பு இடைவெளியைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் துறை சார்ந்த வல்லுநர்களுடன் விரிவான உரையாடல்கள் இடம்பெறும். இதில் தொழில் வாய்ப்புகள், தொழில்கள் எவ்வாறு பரிணமித்துள்ளன, வளர்ந்து வரும் புதிய போக்குகள் மற்றும் புதுமை படைத்தல் மற்றும் தொழில்முனைவோர் ஆவதற்கான வாய்ப்புகள் குறித்துப் பேசப்படுகிறது. மேலும், சமூக வலைதளங்கள் மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கேள்விகளை எழுப்பவும், வல்லுநர்களுடன் கலந்துரையாடவும் இந்த பாட்காஸ்ட் ஒரு தளத்தை உருவாக்குகிறது. முக்கிய டிஜிட்டல் தளங்களில் இந்த அத்தியாயங்களும் அதன் குறுங்காட்சிகளும் கிடைக்கப் பெறுகின்றன. மேலும் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இதன் சுருக்கங்கள் வழங்கப்படுகின்றன. ஆரம்பகால தொழில்முறை முடிவுகளை எடுக்கும்போது மாணவர்கள் சந்திக்கும் மன அழுத்தம் குறித்துப் பேசிய திரு. சஞ்சீவ் சன்யால், ஒரு "பாதுகாப்பான தொழில்" அல்லது "சரியான ஆரம்பக் தேர்வை" தேடுவது என்பது உலகம் இயங்கும் முறையைப் பற்றிய இயந்திரத்தனமான பார்வையை அடிப்படையாகக் கொண்டது என்றார். மேலும், அவர் 'ஆபத்து' (Risk) மற்றும் 'நிச்சயமற்ற தன்மை' ஆகிய இரண்டிற்கும் இடையேயான வேறுபாட்டை விளக்கினார். 'ஆபத்து' என்பதில் சாத்தியக்கூறுகளை மதிப்பிட முடியும்; ஆனால் 'நிச்சயமற்ற தன்மையில்' எதிர்கால விளைவுகளை நம்பகத்தன்மையோடு மதிப்பிட முடியாது. அவரைக் பொறுத்தவரை, தொழில்சார்ந்த முடிவுகள் நிச்சயமற்ற ஒரு உலகத்திலேயே எடுக்கப்படுகின்றன. அங்கு பலவிதமான பாதைகள் உருவாகலாம், மேலும் ஒரு ஆரம்பகால முடிவின் விளைவுகள் காலப்போக்கில் மட்டுமே தெளிவாகத் தெரியும். தனது சொந்த வாழ்க்கைப் பயணத்தைக் குறிப்பிட்ட திரு. சஞ்சீவ் சன்யால், டெல்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீராம் வணிகக் கல்லூரியில் (எஸ்.ஆர்.சி.சி) பொருளாதாரம் படித்ததில் தொடங்கி, ஆக்ஸ்போர்டு, நிதிச் சந்தைகள், எழுத்துப் பணி மற்றும் பொதுக் கொள்கை வரை அமைந்த தனது பாதை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று அல்ல என்றார். வெவ்வேறு கட்டங்களில், தான் விரும்பாத தேர்வுகளை நிராகரிப்பதிலும், அந்தத் தேர்வுகள் எங்கு அழைத்துச் செல்கிறதோ அதற்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பதிலுமே கவனம் செலுத்தியதாகக் கூறினார். உரையாடலின் போது இளைஞர்கள் தொழில்முறை முடிவுகளை எவ்வாறு அணுக வேண்டும் என்று விளக்கிய திரு. சஞ்சீவ் சன்யால், "நான் ஒரு குறிப்பிட்ட திசையை விட நெகிழ்வுத்தன்மைக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறேன்" என்றார். மேலும், மன உறுதியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திய அவர், பயனுள்ள எந்தவொரு தொழிலும் கடினமான மற்றும் சலிப்பான காலக்கட்டங்களைக் கொண்டிருக்கும் என்றும், மாணவர்கள் அத்தகைய சூழல்களை சகித்துக்கொண்டு தொடர்ந்து முன்னேற முடியுமா என்பதை யோசிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இந்த உரையாடல் ஒருவரது "ஆர்வம் அல்லது விருப்பத்தைப்" பின்தொடர்வது குறித்த அழுத்தத்தையும் பேசுகிறது. 18 வயது இளைஞரிடம் வாழ்நாள் முழுமைக்குமான ஆர்வத்தை அடையச் சொல்வது தேவையற்ற சுமையாகிவிடும் என்று சஞ்சீவ் சன்யால் எச்சரித்தார். ஏனெனில், இளைஞர்களுக்குத் தங்களுக்கு முன்னால் இருக்கும் வாய்ப்புகள் குறித்து குறைந்த அளவே அனுபவம் இருக்கும். அதற்குப் பதிலாக, மாணவர்கள் கல்லூரிப் பருவத்திலேயே பல்வேறு செயல்பாடுகளைச் செய்து பார்க்கவும், தங்களுக்குப் பிடிக்காத பாதைகளை விலக்கவும், புதிய ஆர்வங்களைக் கண்டறியத் திறந்த மனதுடன் இருக்கவும் அவர் ஊக்குவித்தார். அதன்பின்னர், உரையாடல் ஏ.ஐ மற்றும் வேலைவாய்ப்பில் அதன் தாக்கங்கள் பக்கம் திரும்பியது. அடுத்த சில ஆண்டுகளில் ஏ.ஐ எவ்வாறு வேலைகளையும் தொழில்களையும் பாதிக்கும் என்பதை நிபுணர்களால்கூட துல்லியமாகக் கணிக்க முடியும் என்று நம்ப வேண்டாம் என சஞ்சீவ் சன்யால் எச்சரித்தார். முந்தைய புரட்சிகர தொழில்நுட்பங்களுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், தொழில்நுட்பங்கள் பெரும்பாலும் அதை உருவாக்கியவர்களே எதிர்பார்க்காத விளைவுகளையே உருவாக்கியுள்ளன என்றார். ஏ.ஐ-யின் ஒவ்வொரு விளைவையும் கணிக்க முயல்வதற்குப் பதிலாக, தொழில்நுட்பம் வளருவதற்கேற்ப தனிநபர்களும் நிறுவனங்களும் தங்களை தகவமைத்துக் கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வாதிட்டார். இது உயர்கல்வியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பெரும்பாலான முறையான கல்வியை 18-22 வயதுக்குள் முடித்துக் கொள்வதற்குப் பதிலாக, தொழில்நுட்பங்கள், தொழில்கள் மற்றும் தொழில்முறைப் பங்குகள் மாறும்போது, பல்கலைக்கழகங்கள் மக்கள் தங்கள் வாழ்நாளில் மீண்டும் மீண்டும் கல்வி பயில வந்து செல்வதை ஆதரிக்க வேண்டியிருக்கும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. A seasoned journalist with 10+ years of experience in print, digital, and broadcast media (Indian Express Tamil, Hindu Tamil, Jaya Plus). Currently a Senior Sub-Editor, he blends his M.A. in History with a deep commitment to news authenticity and social impact. As an active poet and short story writer, he brings a unique literary perspective to journalism. Expert in news verification and digital editorial. Highlights: 10+ Yrs Exp M.A. History Poetry & Fiction writer இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை