தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் கட்சி எவ்வளவு செலவு செய்துள்ளது என்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, 2026 சட்டமன்றத் தேர்தலில் 233 தொகுதிகளில் போட்டியிட்டு 108 இடங்களைக் கைப்பற்றி, பின்னர் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி இந்த தேர்தலில் ரூ19.8 கோடி செலவிட்டதாக தாக்கல் செய்துள்ள கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒப்பீட்டளவில், திமுக ரூ197.8 கோடியும், அதிமுக ரூ112.4 கோடியும் தேர்தல் செலவாகத் தெரிவித்துள்ளன. டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், த.வெ.க கட்சி தனது முதலமைச்சர் வேட்பாளர் விஜய்யின் விமானப் பயணத்திற்காக ரூ3.5 கோடியும், அவர் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் ரூ40 லட்சமும் செலவிடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் கட்சியின் பொருளாளர் பி.வெங்கடரமணன் கையொப்பமிட்டுள்ள செலவுக் கணக்கு அறிக்கையில், பொதுத் தேர்தல் பிரச்சாரத்திற்காக ரூ19.4 கோடி செலவிடப்பட்டதாகக் காட்டப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கான செலவு பூஜ்ஜியம் என குறிப்பிடப்பட்டுள்ளது, இதன் மூலம் வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரச் செலவுகளைத் தாங்களே ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது என்பது தெளிவாகிறது. இந்த அறிக்கையில் மார்ச் 14 முதல் ஏப்ரல் 28 வரையிலான காலகட்டத்தில் டி.ஏ.ஐ டெஜட் பிரைவேட் லிமிடெட் (TAI Jets Pvt Ltd), சிப்சன் ஆவிஷன் பிரைவேட் லிமிடெட் (Chipsan Aviation Pvt Ltd) மற்றும் பளை ஹை க்ளோபல் ஏர் க்ளராப்ட் மேனேஜ்மெண்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் (Fly High Global Aircraft Management Services Pvt Ltd) ஆகிய நிறுவனங்களுக்கு விஜய்யின் பயணத்திற்காக நான்கு முறை விமானங்கள் தொடர்பாகக் கட்டணம் செலுத்தப்பட்டதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இதர நிர்வாகிகளின் பயணத்திற்காக எவ்விதச் செலவும் காட்டப்படவில்லை. சமூக ஊடகங்கள் வாயிலான இணையவழிப் (virtual) பிரச்சாரத்திற்கு எந்தச் செலவும் செய்யப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சியின் பொதுப் பிரச்சாரச் செலவில் மிகப்பெரிய பகுதியாக — ரூ6.3 கோடி அச்சு, மின்னணு ஊடகங்கள் மற்றும் வானொலி உள்ளிட்ட ஊடக விளம்பரங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளது. இதில் (தற்போதைய அமைச்சர்) ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆப் காமன் ஸ்டேட்டஜி கன்சல்டடிங் பிரைவேட் லிமிடெட் (Voice of Common Strategic Consulting Pvt Ltd) நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ரூ1.79 கோடி கட்டணமும் அடங்கும். பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்காக (roadshows) ரூ2.1 கோடியும், "புத்தகங்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ள விளம்பரப் பொருட்களுக்காக ரூ40.5 லட்சமும் கட்சி செலவிட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட போது கட்சியிடம் ரூ3 கோடி தொடக்கக் கையிருப்பு இருந்தது என்றும், தேர்தல் காலத்தில் ரூ7 கோடி வரவு வந்ததாகவும் த.வெ.க செலவு அறிக்கையில் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 10 அன்று தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகம் கட்சிளை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
விஜய்க்கு மட்டும் தான், வேட்பாளர்களுக்கு அல்ல: சட்டசபை தேர்தலில் த.வெ.க செலவு செய்த மொத்த தொகை எவ்வளவு?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk