திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக வேலை வாய்ப்பு; 2 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க; தேர்வு முறை இதுதான் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் நீதி குழுமத்தில் எழுத்தர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 26.09.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இளநிலை உதவியாளருடன் இணைந்த பதிவு எழுத்தர் (Junior Assistant Cum Record Clerk) காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். வயதுத் தகுதி; இந்தப் பணியிடங்களுக்கு 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 20,000 அலுவலக உதவியாளர் (Office Assistant) காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுத் தகுதி; இந்தப் பணியிடங்களுக்கு 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 13,000 தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2026/09/17894638942819.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண். 118, முதல் தளம், மாவட்ட ஆட்சியரகம், திருவள்ளூர் - 602001 விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2026 இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. He is working as a Senior Sub Editor in Indian Express Tamil. He has been working in this organization for more than 4 years. He writes news related to politics, education and employment opportunities. Educational Qualification: Bachelor's Degree in Information Technology Experience: More than 5 years of experience in the news industry. Expertise: He writes education-related news ranging from school and college exams, results, and other information to exams like NEET and JEE. Additionally, he is also writing about the latest job news on TNPSC, Railways, Bank exams and Tamil Nadu and India-wide job opportunities. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
மாவட்ட ஆட்சியரக வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு தகுதி; விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk