வேரியபிள் அபெர்சர் முதல் லைவ் ஹிஸ்டோகிராம் வரை: மிரள வைக்கும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் கேமரா

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
வேரியபிள் அபெர்சர் முதல் லைவ் ஹிஸ்டோகிராம் வரை: மிரள வைக்கும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் கேமரா

iPhone 18 Pro Max price in India உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கன்டென்ட் கிரியேட்டர்களாக மாறிவரும் வேளையில், பாரம்பரிய கேமரா நிறுவனங்களுக்கு ஆப்பிள் நேரடி சவாலை விடுத்துள்ளது. ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ரிவ்யூ: ஆப்பிள் இதை ஒரு சாதாரண போனா வச்சிருக்க விரும்பல விலை: ரூ. 1,79,900 எழுதியவர்: நந்தகோபால் ராஜன் சமீபத்துல நடந்த ஆப்பிள் லான்ச் ஈவென்ட்ல அவங்க ஒரு விஷயத்தை ரொம்ப தெளிவா சொல்லிட்டாங்க. அதாவது, சாதாரண போன்களுக்கும் ப்ரோ (Pro) போன்களுக்கும் நடுவுல ஒரு பெரிய கோட்டை கிழிச்சுட்டாங்க. இந்த முறை சாதாரண ஐபோன் மாடலையே அவங்க ரிலீஸ் பண்ணல. குறிப்பா, கன்டென்ட் கிரியேட்டர்ஸ் மற்றும் ப்ரொபஷனலா யோசிக்கிறவங்களுக்குன்னு பார்த்து பார்த்து செதுக்கி இருக்காங்க இந்த ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ். இந்த போனோட விலை ரூ. 1,79,900. பார்க்க விலை அதிகமா தெரிஞ்சாலும், ஒரு பெரிய கேமரா செட்டப் வாங்குறதுக்கு ஆகுற செலவுல பாதி விலைக்கு, உங்களோட மொத்த கிரியேட்டர் வேலையையும் இந்த ஒரு போன் பாத்துப்போம்னு களம் இறங்கி இருக்காங்க. அப்படி இந்த போனை ஒரு வேற லெவல் ப்ரோ டூலா மாத்துறதுக்கு அதுல இருக்கிற அந்த மூணு முக்கியமான விஷயங்களை பார்ப்போம். ஆங்கிலத்தில் வாசிக்க நம்மல பலபேர் டி.எஸ்.எல்.ஆர். கேமரால 'ஆட்டோ' மோட்தானே யூஸ் பண்ணுவோம்? அந்த மாதிரி ஆட்கள்னா இந்த கேமரா மாற்றங்கள் உங்களுக்கு பெருசா ஒன்னும் தெரியாது. ஆனா, நீங்க 'மேனுவல்' (Manual) மோட்ல போட்டோ எடுக்குற ஆளா இருந்தா, இந்த போன் உங்களுக்கு ஒரு செம்ம ட்ரீட்! வேரியபிள் அபெர்சர் (Variable Aperture): 48MP ஃபியூஷன் கேமராவுல பிசிக்கல் பிளேடுகள் இருக்கு. இது இருட்டல நல்லா வெளிச்சத்தை உள்ளிழுத்து போட்டோ கிளியரா வர ஹெல்ப் பண்ணும். இதுல ஆட்டோ மோடும் இருக்கு, அப்புறம் f/1.48 தொடங்கி f/4 வரைக்கும் நாலு f-ஸ்டாப் ஆப்ஷனும் கொடுத்திருக்காங்க. போட்டோ எடுக்கும்போது பின்னால இருக்கிற பல்பு வெளிச்சம் ஸ்டார் மாதிரி மினுமினுக்கிற எஃபெக்ட்லாம் இதுல சூப்பரா வரும் (இந்த அம்சம் மெயின் லென்ஸ்ல மட்டும்தான் கிடைக்கும் பாஸ்!) ஷட்டர் ஸ்பீட் மற்றும் லைவ் ஹிஸ்டோகிராம்: நம்ம டி.எஸ்.எல்.ஆர். கேமரா மாதிரி ஷட்டர் ஸ்பீடைக் மாத்தி, சப்ஜெக்ட்டை ஹைலைட் பண்ணி சிலுவெட் (Silhouette) போட்டோஸ் எடுக்கலாம். அதுமட்டுமில்லாம, இந்த எல்லா அம்சங்களையும் வச்சுக்கிட்டு 4K வீடியோவை 120fps ஸ்பீடுல கூட ஷூட் பண்ணிக்கலாம். கொளுத்துற வெயில்ல ஷூட் பண்ணும்போது, இந்த லைவ் ஹிஸ்டோகிராம் மற்றும் ஒயிட் பேலன்ஸ் அட்ஜஸ்ட் பண்ற ஆப்ஷன்லாம் வேற லெவல் மாற்றத்தைக் கொடுக்குது. நாம என்ன யோசிச்சு கேமராவைத் தூக்குறமோ, அதே அவுட்புட்டை கரெக்டா ஸ்கிரீன்ல கொண்டுவர இது செம்மயா ஹெல்ப் பண்ணுது. கேமராவுல பண்ணியிருக்க இந்த சின்னச் சின்ன மாற்றங்களாலதான், போன் பின்னாடி இருக்குற கேமரா பம்ப் கூடவே கொஞ்சம் தடிமனாக மாறி இருக்கு! லேப்டாப் லெவல் பெர்ஃபார்மன்ஸ் தரும் ப்ராசஸர் ஆப்பிள் போனோட ப்ராசஸர் பத்தி சொல்லவே தேவையில்லை, எப்பவுமே நெக்ஸ்ட் லெவல்தான். இதுல இருக்கிற A20 ப்ரோ சிப், நம்ம வேலையை எவ்வித லேக்கும் இல்லாம சூப்பரா பண்ணித் தருது. 4K வீடியோவை 60 அல்லது 120fps-ல ஷூட் பண்ணி, எடிட் பண்ணி, கலர் கரெக்ஷன் பண்ணி எக்ஸ்போர்ட் பண்ணும்போது போன் சும்மா ராக்கெட் மாதிரி வேலை செய்யுது. குறிப்பா, போன் சூடாவே ஆகாது! இதுல இருக்கிற வேப்பர் சேம்பர் (Vapor Chamber) டெக்னாலஜிதான் இந்த மேஜிக்கை பண்ணுது. அதுபோக, ஆப்பிள் - ஜெமினி கூட்டணியோட சூப்பரா ஒர்க் ஆகுற சிரி (Siri), ஸ்கிரீன்ல என்ன இருக்குன்னு கேட்டு தெரிஞ்சுக்க செம்மயா உதவுது. இந்த போன்ல 5391mAh பெரிய பேட்டரி கொடுத்திருக்காங்க. நாள் முழுக்க பிரவுசிங், வீடியோ ஷூட்டிங், எடிட்டிங், சேட்டிங்னு கண்டினியூவா யூஸ் பண்ணாலும் பேட்டரி தாங்கும். சார்ஜர் தேடி ஓட வேண்டிய அவசியமே இல்லை. அதுபோக, ஒரு தேர்ட்-பார்ட்டி 60W GaN சார்ஜர் வச்சு வெறும் 15 நிமிஷத்துல 50% சார்ஜ் ஏத்திக்கலாம். போன்ல எல்லாமே சூப்பரா இருந்தாலும், போன வருஷம் வந்த 17 ப்ரோ மேக்ஸுக்கும் இதுக்கும் லுக் வைசா எந்த மாற்றமும் இல்ல. புது கலர் ஆப்ஷன்ஸ் தவிர வேற பெருசா ஃபிளாட் பண்றதுக்கு ஒன்னும் இல்ல. ஆனா ஆப்பிள் என்ன யோசிக்குதுன்னா, போன் வேலை செஞ்சா போது லுக்லாம் முக்கியமில்ல அப்படின்னு இறங்கி இருக்காங்க. யாரு இதை வாங்கலாம்? நீங்க நார்மலா போன் யூஸ் பண்றவரா இருந்தா, இந்த போன் உங்களுக்கு தேவையில்லை; சாதாரண ஐபோனே போதும். உங்ககிட்ட ஆல்ரெடி ப்ரோ போன் இருந்தா, அதுவும் 15 ப்ரோ அல்லது அதுக்கு பழைய மாடலா இருந்தா மட்டும் இதை வாங்குங்க. ஆனா, நீங்க ஒரு தீவிரமான கன்டென்ட் கிரியேட்டரா இருந்து, மேனுவல் கேமரா செட்டிங்ஸ் மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் ஒர்க்ஃப்ளோ உங்களுக்கு கண்டிப்பா தேவைப்பட்டா, தாராளமாக இந்த வருஷம் இந்த ஐபோன் 18 ப்ரோ மேக்ஸை நீங்க கண்ணை மூடிட்டு செலக்ட் பண்ணலாம்! Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை