திருத்தேர் நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து மீண்டும் கோயில் நிலையை அடைந்தது. தேரோட்டம் நடைபெற்ற வீதிகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். திருச்சி கேகே நகர் இந்திரா நகரில் அமைந்துள்ள அலமேலு மங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் ஸ்ரீனிவாச பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஒவ்வொரு நாளும் நடைபெற்ற வாகன சேவைகளிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார். கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்ற பின்னர், தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் திரளாகக் கூடி, 'கோவிந்தா... கோவிந்தா...' என பக்திகோஷம் முழங்கியபடி தேரின் வடத்தைப் பிடித்து உற்சாகத்துடன் இழுத்துச் சென்றனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பல்வேறு தரப்பினரும் தேரோட்டத்தில் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். திருத்தேர் நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து மீண்டும் கோயில் நிலையை அடைந்தது. தேரோட்டம் நடைபெற்ற வீதிகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோயில் மற்றும் தேரோடும் வீதிகள் சிறப்பு அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும், தேரோட்டத்தையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு உணவருந்தினர். விழா நிகழ்ச்சிகளுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் திருச்சி ஸ்ரீகாளிதாஸ் குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நாதஸ்வர இசை மற்றும் பக்தர்களின் கோஷங்கள் முழங்க நடைபெற்ற தேரோட்டம், அப்பகுதியில் விழாக்கோலம் பூண்டது போல் காட்சியளித்தது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீனிவாச பெருமாள் மற்றும் தாயாரை தரிசித்து அருள் பெற்றனர். செய்தி: க.சண்முகவடிவேல் Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
“கோவிந்தா... கோவிந்தா!” கேகே நகரில் கோலாகலமான ஸ்ரீனிவாச பெருமாள் தேரோட்டம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Events
✍️ TN24 Editorial Desk