விபத்து காரணமாக திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே இன்று (செப். 24) அதிகாலை கார், முன்னால் சென்ற ஆம்னி பேருந்தின் பின்புறத்தில் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமநாதபுரம் மாவட்டம் பிள்ளையார்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் பிரபாகரன் (30), முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த அம்மாசி மகன் கார்த்திக் (38), கண்ணாயிரம் மகன் காளீஸ்வரன் (25), ஓரிவயல் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் கண்ணதாசன் (22), கார்த்தியின் மனைவி சூர்யா (35), தேவிபட்டினத்தைச் சேர்ந்த சபரிகன் மகன் ஜான் கென்னடி (35), ரவி மனைவி சரண்யா (23) ஆகிய 7 பேரும் காரில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த ஏ.வி.கே. ஆம்னி பேருந்தின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக வேகமாக மோதியதாகக் கூறப்படுகிறது. மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கார்த்திக், பிரபாகரன், காளீஸ்வரன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த கண்ணதாசன், சூர்யா, ஜான் கென்னடி, சரண்யா ஆகிய 4 பேரும் மீட்கப்பட்டு பெரம்பலூர் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூர்யா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்தது. மற்ற 3 பேருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியைச் சேர்ந்த ஆம்னி பேருந்து ஓட்டுநர் ராஜசீலன் (45) என்பவரை கைது செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். கார் ஓட்டுநர் மற்றும் பேருந்து ஓட்டுநரின் பயணம், வாகனங்களின் வேகம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. பின்னர் போலீஸார் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர். இதனிடையே, விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்தில் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு பயணம் செய்த 34 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, மாற்று பேருந்து மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்து, திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்தி: க.சண்முகவடிவேல் Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
பெரம்பலூர் அருகே அதிகாலை கோர விபத்து; கார்-ஆம்னி பேருந்து மோதலில் 4 பேர் பலி
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk