காலாண்டு தேர்வுக்கு 9 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிவடைந்த பிறகு, அக்டோபர் 5ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 26-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை 9 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த தமிழக அரசின் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் கடந்த செப்டம்பர் 16-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தமிழகப் பள்ளிக்கல்வித் துறை முன்னர் வெளியிட்டிருந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி செப்டம்பர் 24-ந் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெற உள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் இன்று (செப்டம்பர் 24) நிறைவு பெற உள்ளது. அதேவேளையில், பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களான 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு நாள், நாளை (செப்டம்பர் 25) வரை காலாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு, மாணவர்களுக்கு வழக்கமாக விடப்படும் காலாண்டு விடுமுறை செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை அரசு விடுமுறை நாட்கள் (காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) உட்பட மொத்தம் 9 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிவடைந்த பிறகு, அக்டோபர் 5ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே காலாண்டு விடுமுறை தினமான 9 நாட்களும் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளது. விடுமுறை நாட்களில் மாணவர்களின் மனஅழுத்தத்தைக் குறைக்கவும், அவர்களை முழுமையாக ஓய்வெடுக்க அனுமதிக்கவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
9 நாட்கள் காலாண்டு விடுமுறை; மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk