அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் ஆண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணி வீரர்களுக்கும், அதில் இடம்பெற்றிருந்த தமிழ்நாட்டின் மன்னார்குடியைச் சேர்ந்த வீரர் ஹரிஹரன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் ஆசிய அளவிலான போட்டியில் பதக்கம் வென்று, தமிழகத்தின் விளையாட்டு வரலாற்றில் பெருமைமிகு அத்தியாயத்தைப் பதிவு செய்துள்ள வீரர் ஹரிஹரன் அவர்களின் வெற்றிப் பயணம் மேன்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டி : வூஷூ போட்டியில் வெள்ளி வென்றார் இந்தியாவின் ரோஷிபினா தேவி! இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? GOLD RATE | தங்கம் விலை அதிரடி சரிவு – இன்றைய நிலவரம் என்ன? பேட்மிண்டனில் இந்தியாவுக்கு வெண்கலம் – அணியில் இடம்பெற்ற தமிழக வீரருக்கு முதல்வர் வாழ்த்து! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
ஆசிய விளையாட்டுப் போட்டி : பதக்கம் வென்றவர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk