தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து துறைகளிலும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற அரசாக புதிய தவெக அரசு விளங்குகிறது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள். பெருந்தலைவர் காமராஜர் அவர்களை கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டு செயல்படுகின்ற தவெகவின் தலைவரும், தமிழக முதல்வருமான மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் மக்களுக்கு நேர்மையான ஆட்சியை, வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். குறிப்பாக குறைந்த நாட்களிலேயே தமிழக மக்களுக்கு அதிக நம்பிக்கையை கொடுத்திருக்கிறார் நம் முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள். இதன் மூலம் பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு வளமான தமிழகத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே புதிய தவெக அரசின் நல்ல தூய முயற்சிக்கு நடைபெற இருக்கின்ற மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தவெக கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) ஆதரவளிக்கிறது என்பதை த.மா.கா(மூ) சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டி : பதக்கம் வென்றவர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து! ஆசிய விளையாட்டுப் போட்டி : வூஷூ போட்டியில் வெள்ளி வென்றார் இந்தியாவின் ரோஷிபினா தேவி! இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? GOLD RATE | தங்கம் விலை அதிரடி சரிவு – இன்றைய நிலவரம் என்ன? Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் : தவெகவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு!
📅
📍 Tiruppur, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk