'கண்களையே மூட முடியவில்லை' - மலிவான சிகிச்சையில் கண் இமை தோலை நீக்கிய இந்த பெண்களுக்கு என்ன நேர்ந்தது?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
'கண்களையே மூட முடியவில்லை' - மலிவான சிகிச்சையில் கண் இமை தோலை நீக்கிய இந்த பெண்களுக்கு என்ன நேர்ந்தது?

எச்சரிக்கை: அறுவை சிகிச்சை தொடர்பான அதிர்ச்சி தரும் படங்களும் விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன. "எல்லோரும் இதை மிகவும் எளிதானது போல் கூறினார்கள். ஆனால், என் முகம் தீப்பற்றி எரிவது போல இருந்தது. மேலும், தோல் கருகியதால் ஒரு பயங்கரமான வாசனை வந்தது" என்று தனது கண் இமை அறுவை சிகிச்சையைப் பற்றி நிகிதா மோர்கன் கூறுகிறார். சமூக வலைதளங்களில் அது தொடர்பான வீடியோக்களைப் பார்த்த பிறகு, கண்களுக்கு மேலே உள்ள தோலை அகற்றும் பிளெபரோபிளாஸ்டி அல்லது "பிளெஃப்" அறுவை சிகிச்சையைச் செய்துகொள்ள அவர் முடிவு செய்தார். அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும், நிகிதா கடுமையான வலியை உணர்ந்தார். கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் அறுவை சிகிச்சை செய்வதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களான கண் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், பொதுவாக வெளிநாடுகளில் குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் பிளெஃப் அறுவை சிகிச்சையால் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நோயாளிகள் பாதிப்புகளை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கின்றனர். பிரிட்டனில் பொதுவாக ஆயிரக்கணக்கான பவுண்டுகள் செலவாகும் இந்தச் சிகிச்சைக்கான தேவை அதிகரித்துள்ளதாக அவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். முகத்தை இறுக்கமாக்குதல், மென்மையாக்குதல் மற்றும் தூக்கி நிறுத்துதல் போன்ற பரந்த அழகியல் போக்கின் ஒரு பகுதியாக இதற்கான தேவை அதிகரித்துள்ளது. ஐரோப்பாவின் பல பகுதிகள், ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள கிளினிக்குகளில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுடன் சிக்கல்களும் ஏற்படுவதாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படும்போது, சிகிச்சைக்குப் பிந்தைய தொடர் கவனிப்பு இல்லாததால் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையான என்.ஹெச்.எஸ் மீது கூடுதல் சுமை ஏற்படுவதாக கூறுகின்றனர். End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு நிகிதாவைப் போலவே, இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரச்னைகளை எதிர்கொண்ட டஜன் கணக்கானோரிடம் பிபிசி பேசியுள்ளது. அவர்களில் ஒரு பெண்ணின் கண் இமையில் அதிகப்படியான தோல் அகற்றப்பட்டதால், தூங்கும்போது கண்களை மூடி வைத்திருக்க டேப்பைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. மற்றொரு பெண் தனது பார்வையை இழந்துவிடுவோமோ என்று அஞ்சினார். வெளிநாடுகளில் சிகிச்சை பெற்ற பிறகு, கண்களைச் சரியாக மூட முடியாமல் இருந்த நோயாளிகளைத் தாங்கள் பார்த்துள்ளதாகவும் பிரிட்டன் அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்தனர். டப்ளினைச் சேர்ந்த நிகிதா, தனது கண்களுக்கு மேலும் தெளிவான வடிவம் கிடைக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால், அயர்லாந்தில் மேல் கண் இமை அறுவை சிகிச்சைக்கு 4,000 யூரோவுக்கும் (3,400 பவுண்டுக்கும் ) அதிகமாக செலவாகும் என்று கூறப்பட்டதால், அதைச் செய்துகொள்ள அவரால் முடியவில்லை. பின்னர், டிக்டாக்கில் நெதர்லாந்தைச் சேர்ந்த ஃபேஸ்லேண்ட் நிறுவனத்திடம் வெறும் 750 யூரோ (650 பவுண்டு) செலவில் 'பிளெஃப்' சிகிச்சை பெற முடியும் என்பதை 31 வயதான நிகிதா கண்டுபிடித்தார். டஸ்ஸல்டார்ஃபில் உள்ள அதன் கிளினிக்கை, "ஒருவர் உள்ளே வருவது, ஒருவர் வெளியே செல்வது எனத் தொடர்ந்து இயங்கும் ஒரு கன்வேயர் பெல்ட் போல இருந்தது" என்று அவர் விவரித்தார். 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நெதர்லாந்து, ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள தங்களது கிளினிக்குகளில் பிரிட்டனைச் சேர்ந்த 2,950-க்கும் மேற்பட்டவர்களுக்கு பிளெஃப் சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. "பாதுகாப்பான மற்றும் தரமான" சிகிச்சைகளை வழங்குவதாகக் கூறும் அந்த நிறுவனம், "1 சதவீதத்திற்கும் குறைவான சிகிச்சைகளில் தான் புகார்கள் எழுந்துள்ளன" என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், மீண்டும் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டியிருந்த அனைவரும் இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை. 'பிளெஃப்' சிகிச்சையில் பிரச்னைகளை எதிர்கொண்டதாக பிபிசியிடம் பேசியவர்களில் பெரும்பாலானோர் அந்த நிறுவனத்தின் கிளினிக்குகளுக்குச் சென்றவர்கள். ஆனால், ஃபேஸ்லேண்ட் நிறுவனத்தில் மொத்தம் எத்தனை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்பது எங்களுக்குத் தெரியவில்லை. 2025 நவம்பரில் 'பிளெஃப்' சிகிச்சை செய்துகொண்ட நிகிதா, இந்த சிகிச்சை இவ்வளவு தீவிரமானதாக இருக்கும் என்பதை தான் உணரவில்லை என்கிறார். "உதடுகளில் சிகிச்சை செய்துகொள்வது அல்லது போடாக்ஸ் செய்வது போன்றதுதான்" என்று தான் நினைத்ததாக அவர் கூறுகிறார். அவருக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது. ஆனால், மருத்துவர் மென்மையான கண் இமைத் தோலை வெட்டத் தொடங்கியபோது, இதுவரை அனுபவித்திராத அளவுக்கு வலியை உணர்ந்தார். "நான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். அது மிகவும் கொடூரமாக இருந்தது. அவர் எனக்கு தையல் போடும்போது, ஊசி என் தோலுக்குள் செல்வதை என்னால் உணர முடிந்தது" என்று நிகிதா கூறுகிறார். ஃபேஸ்லேண்ட் நிறுவனம், சிகிச்சைக்கு முன்பாக அனைவருக்கும் ஆலோசனை வழங்கப்படுவதுடன், அவர்கள் "போதுமான தகவல்களைப் பெற்று, சிகிச்சைக்கு நன்கு தயாராக இருப்பதை" உறுதி செய்வதற்காக ஒப்புதல் படிவங்களிலும் கையெழுத்து பெறப்படுவதாகத் தெரிவித்துள்ளது. மேலும், சிகிச்சையின்போது நிகிதா "மிகவும் பதற்றமாகவும், உறுதியற்ற நிலையிலும் இருந்ததாக" அவரது மருத்துவர் தெரிவித்ததாகவும், இது "வலியை அவர் உணரும் விதத்தைப் பாதிக்கக்கூடும்" என்றும் ஃபேஸ்லேண்ட் கூறியது. சில மணி நேரங்களிலேயே, "மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட" நிகிதா, வீடு திரும்புவதற்காக விமானத்தில் ஏறினார். அறுவை சிகிச்சை செய்த அதே நாளில் விமானத்தில் பயணம் செய்வது மருத்துவ நிபுணர்களாலும், ஃபேஸ்லேண்டு நிறுவனத்தாலும் பரிந்துரைக்கப்படுவதில்லை. ஆனால், சமூக வலைதளங்களில் பலர் அவ்வாறு பயணம் செய்வதை அவர் பார்த்திருந்தார். "என்னால் சரியாகப் பார்க்கவே முடியவில்லை"என்று கூறும் நிகிதா, "நான் மேலே பார்த்தால், என் தையல்களில் இருந்து ரத்தம் கசியும். அதனால், நான் ரத்தக் கண்ணீர் வடிப்பது போல இருந்தது"என்கிறார். அறுவை சிகிச்சை செய்த அதே நாளில் விமானத்தில் பயணம் செய்ததை நினைத்து நிகிதா மிகவும் வருந்துகிறார். மற்றவர்களும் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அவர் அறிவுறுத்துகிறார். கடந்த மூன்று ஆண்டுகளில், பிரிட்டனின் நான்கு முன்னணி சமூக ஊடக தளங்களில் சமூக ஊடக கணக்குகள் பதிவிட்ட பிளெஃப் அறுவை சிகிச்சை தொடர்பான வீடியோக்கள் கிட்டத்தட்ட 15 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளதாக பிபிசி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. முந்தைய மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இது ஐந்து மடங்கு அதிகமாகும். பலரும் இந்தச் சிகிச்சையால் கிடைத்த நேர்மறையான முடிவுகளை தங்கள் பதிவுகளில் பகிர்ந்துள்ளனர். அவர்களில் பலர் ஃபேஸ்லேண்டு நிறுவனத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர். ஒரு பெண், தனது தொங்கிய கண் இமைகள் பார்வையை பாதித்ததுடன், தலைவலியையும் ஏற்படுத்தியதாக எங்களிடம் தெரிவித்தார். என்.ஹெச்.எஸ் சிகிச்சைக்கு அவர் தகுதி பெறவில்லை. அதேநேரத்தில், பிரிட்டனில் தனியார் சிகிச்சை பெறும் அளவுக்கு அவரால் செலவிட முடியவில்லை. ஆனால் இப்போது, ​​ஃபேஸ்லேண்ட்டுக்குச் சென்ற பிறகு, தனது பிரச்னைகள் தீர்க்கப்பட்டுவிட்டதாக அவர் கூறுகிறார். "மலிவு விலையில், எளிதில் அணுகக்கூடிய மற்றும் உயர்தர சிகிச்சையில்" கவனம் செலுத்துவதன் மூலம் சந்தையை மாற்றி வருவதாக அந்த நிறுவனத்தின் இணையதளம் தெரிவிக்கிறது. அறுவை சிகிச்சை முறைகள் தொடர்பாக ஃபேஸ்லேண்டு நிறுவனத்தால் உள்நாட்டிலேயே பயிற்சி அளிக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களால் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் கண் இமை அறுவை சிகிச்சைக்கு பொதுவாக தயாரிப்பு, அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்கு சுமார் மூன்று மணி நேரம் ஆகும் என்று பிரிட்டனில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் எங்களிடம் தெரிவித்தனர். ஆனால் நாங்கள் பேசிய ஃபேஸ்லேண்ட்டில் சிகிச்சை பெற்றவர்கள், அந்த கிளினிக்குகளில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவான நேரமே செலவிட்டதாகக் கூறுகின்றனர். சிகிச்சை அளிப்பவர்கள் அதிக எண்ணிக்கையிலான சிகிச்சைகளை மேற்கொள்ள அனுமதிப்பது, செலவுகளை கணிசமாகக் குறைக்க உதவுவதாக ஃபேஸ்லேண்ட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்லேண்ட்டு நிறுவனத்தில் பிளெஃப் அறுவை சிகிச்சை செய்துகொண்ட எட்டு நாட்களுக்குப் பிறகு, லாரா (உண்மையான பெயர் அல்ல) கண் இமைகளில் ஏற்பட்ட காயங்கள் மீண்டும் திறந்ததால், அவசர சிகிச்சைப் பிரிவுக்கு முதல் முறையாகச் சென்றார். மொத்தம் நான்கு முறை அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு செல்ல வேண்டியிருந்தது. ஜூன் மாதம் நிறுவனத்தின் ஆம்ஸ்டர்டாம் கிளினிக்கில் அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை சிக்கல்கள் ஏதுமின்றி நடந்ததாகத் தெரிந்தது. ஆனால், பிரிட்டனுக்குத் திரும்பிய அவர் தனது தையல்களை அகற்றியபோது பிரச்னைகள் எழத் தொடங்கின. வெளிநாட்டில் சிகிச்சை பெறும் பலர் இதுபோன்று தாங்களாகவே தையல்களை அகற்றிக் கொள்கின்றனர். அவரது கண்களுக்கு மேலே இருந்த பிறை வடிவ வெட்டுக் காயங்கள் தையல்களால் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தன. ஆனால், தையல்கள் அகற்றப்பட்டபோது அவை பிரிந்து, சிவந்து, ஆறாத நிலையில் இருந்த காயங்கள் வெளிப்பட்டன. பின்னர் அந்தக் காயங்களில் தொற்றும் ஏற்பட்டது. ஒரு சிகிச்சை நிபுணர் முறையாகப் பயிற்சி பெற்றிருந்தால், இதுபோன்ற சம்பவம் மிகவும் அரிதாகவே நிகழும் என்று பிரிட்டன் அறுவை சிகிச்சை நிபுணர்கள் எங்களிடம் தெரிவித்தனர். இது முதல்முறையாக நடந்தபோது, 40 வயதின் தொடக்கத்தில் இருக்கும் லாரா, ஃபேஸ்லேண்டு நிறுவனத்தின் அவசர உதவி எண்ணை பலமுறை தொடர்புகொள்ள முயன்றதாகக் கூறுகிறார். ஆனால், அவரால் தொடர்புகொள்ள முடியவில்லை. வேறு வழியின்றி, அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு விரைந்தார். "நான் நீண்ட நேரம் கண்களை மூடிக்கொண்டிருந்தால், ஏற்படும் அழுத்தம் காரணமாக எனது காயங்கள் மீண்டும் திறந்துவிடும். தூங்குவதற்கே நான் பயந்தேன். தொடர்ந்து கடுமையான வலியில் இருந்தேன்" என்று அவர் கூறுகிறார். அதற்குப் பிறகு வந்த நாட்களில், லாரா ஃபேஸ்லேண்டு நிறுவனத்தின் மருத்துவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். பல சந்தர்ப்பங்களில், தன்னை மீண்டும் பரிசோதிக்குமாறு கூறி, விமானத்தில் திரும்பி வருவதாகவும் அவர் முன்வந்தார். "நான் அழுதுகொண்டே, 'என்னை இப்படி விட்டுவிட முடியாது' என்று கெஞ்சினேன்" என்று அவர் கூறுகிறார். ஆனால், அவருக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவது தான் சிறந்த வழி என்று ஃபேஸ்லேண்ட் நிறுவனம் தெரிவித்தது. லாரா என்.ஹெச்.எஸ் கண் மருத்துவ நிபுணரிடம் அனுப்பப்பட்டார். "அதிகப்படியான தோல்" அகற்றப்பட்டுள்ளதாக அந்த நிபுணர் தெரிவித்தார். தனது குறைந்த செலவிலான அறுவை சிகிச்சையை சரிசெய்வதற்கான செலவை என்.ஹெச்.எஸ் ஏற்றுக்கொண்டது குறித்து லாரா எப்படி உணர்கிறார்? "எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது... மக்கள் 'இது உங்களுடைய சொந்த தவறு' என்று நினைப்பார்கள். ஆனால், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் ஒருபோதும் அந்த சிகிச்சையைப் பெற்றிருக்க மாட்டேன்"என்கிறார் லாரா. லாரா ஃபேஸ்லேண்ட் நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவதால், அவரது வழக்கு குறித்து விரிவாக கருத்து தெரிவிக்க முடியாது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்லேண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் சுயாதீன புகார் குழு ஒன்று லாராவுக்கு 175 யூரோ (150 பவுண்டு ) வழங்க முன்வந்தது. ஆனால், அதை அவர் நிராகரித்துவிட்டார். கடந்த 12 மாதங்களில் 'பிளெஃப்' அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட சிக்கல்களுடன் நோயாளிகளைப் பார்த்தபோது, அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் சிகிச்சை பெற்றவர்கள் என்று பிரிட்டன் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுக்குப் பிறகு ஏற்படும் மிகவும் பொதுவான பிரச்னையாக, கண்களை முழுமையாக மூட முடியாமல் போவது இருப்பதாக பிபிசிக்காக நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரிட்டன் மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த பிரிட்டிஷ் கண் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை சங்கத்தின் (Bopss) 63 உறுப்பினர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். "கண் இமைகளில் இருந்து அதிகப்படியான தோலை அகற்றுவது ஆபத்தானது. ஏனெனில், அது கண்ணை வெளிப்புறச் சூழலுக்கு வெளிப்படையாக விட்டுவிடுகிறது" என்று பிரிட்டிஷ் கண் அறுவை சிகிச்சை சங்கத்தின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ள கண் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் கொலின் வைஸ் விளக்குகிறார். "அதை சரிசெய்வது கடினமாகவும், அதிக செலவாகக்கூடியதாகவும் இருக்கலாம்"என்றும் அவர் குறிப்பிடுகிறார். கண் இமைகளை அவர் "ஒரு ஜோடி திரைச்சீலைகளுக்கு" ஒப்பிடுகிறார். அவற்றைத் திறக்கும்போது, கண்களை மூடும்போது கண் உருண்டையை முழுமையாக மறைக்கும் அளவுக்கு போதுமான தோல் இருப்பதற்காக, அவற்றில் மடிப்பு இருக்க வேண்டும். வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் கண் அறுவை சிகிச்சை சங்கத்தின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ள பிற சிக்கல்களில் தழும்புகள், இரு கண்களும் சமமாக இல்லாமல் போதல் மற்றும் காயங்கள் மீண்டும் திறந்துகொள்ளுதல் ஆகியவை அடங்கும். பதிவு செய்யப்படாத பிரிட்டன் மருத்துவப் பணியாளர்களிடம் சிகிச்சை பெற்ற பிறகும் சிக்கல்களை எதிர்கொண்ட நோயாளிகளைப் பார்த்ததாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்தனர். அவர்களில் சிலருக்கு வீடுகளின் வரவேற்பறைகளிலேயே 'பிளெஃப்' அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. 2024-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று, கேரின் ஹார்டே பார்ப்பதற்கு சிரமப்பட்ட நிலையில் கண் விழித்தார். ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஃபேஸ்லேண்டு கிளினிக்கில் அவர் பிளெஃப் அறுவை சிகிச்சை செய்துகொண்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்தது. அவரது இடது கண் வீங்கி, அதிலிருந்து ரத்தம் வடிந்துகொண்டிருந்தது. இரு கண்களுக்கு மேலிருந்த காயங்களும் திறக்கத் தொடங்கியிருந்தன. "கூடுதலாக இருந்த கொஞ்சம் தோலுக்காக என் பார்வையை இழந்துவிடுவேனோ என்று நான் மிகவும் பயந்தேன்" என்று அவர் கூறுகிறார். ஃபேஸ்லேண்ட் வெகு தொலைவில் இருந்ததால், அதைத் தொடர்புகொள்வதில் பயனில்லை என்று கருதிய கேரின், நேராக அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றார். பின்னர், அவரது பார்வை பாதிக்கப்படாது என்று மருத்துவர்கள் அவருக்கு உறுதியளித்தனர். ஆனால், அவரது முகத்தில் கடுமையான தொற்று ஏற்பட்டிருந்தது. அவருக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டதுடன், மருத்துவமனையில் தொடர்ந்து பரிசோதனைகளும் மேற்கொள்ள வேண்டியிருந்தது. என்ன நடந்தது என்பதைத் தெரிவிக்க கேரின் ஃபேஸ்லேண்ட் நிறுவனத்தை இரண்டு முறை தொடர்புகொண்டதைவும், அதற்கு 12 நாட்களுக்குப் பிறகு அவருக்கு சுருக்கமான பதில் கிடைத்ததை காட்டும் மின்னஞ்சல்களை பிபிசி பார்த்துள்ளது. அதன்பிறகு மேலும் சில மின்னஞ்சல்கள் பரிமாறப்பட்டன. ஆனால், அதன் பிறகு அந்த நிறுவனத்திடமிருந்து தனக்கு எந்தத் தகவலும் வரவில்லை என்று கேரின் கூறுகிறார். "சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்புக் காலத்தில், அந்தப் பெண்ணிற்குத் தேவையான ஆதரவையோ அல்லது தொடர் கண்காணிப்பையோ வழங்காமல் தாங்கள் கைவிட்டுவிடவில்லை என்று 'ஃபேஸ்லேண்ட்' நிறுவனம் உறுதியாகக் கூறுகிறது." தங்களது குழுக்களிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்று நோயாளிகள் உணர்ந்திருந்தாலோ அல்லது சிகிச்சைக்குப் பிறகு சிக்கல்களை எதிர்கொண்டிருந்தாலோ அதற்காக வருந்துவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கேரின், லாரா மற்றும் நிகிதாவைப் போலவே, வெளிநாடுகளில் குறைந்த செலவில் கண் இமை அறுவை சிகிச்சை செய்துகொண்ட நாங்கள் பேசிய நபர்கள், சிகிச்சைக்குப் பிந்தைய குறைந்த அளவிலான பராமரிப்புதான் தங்களது மிகப்பெரிய புகார் என்று கூறுகின்றனர். "வழக்கமான பிளெஃப் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நோயாளிக்கு 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும் சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு கிடைக்க வேண்டும்" என்று வைஸ் கூறுகிறார். "உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தால், உடனடியாக சிகிச்சை வழங்கும் திறன் என்பது சாத்தியமற்றதாகிவிடும்." சில சந்தர்ப்பங்களில் குறைந்த செலவு என்பது குறைந்த தரத்தைக் குறிக்கக்கூடும் என்பதையும் நோயாளிகள் அறிந்திருக்க வேண்டும் என்று அவர் எச்சரிக்கிறார். அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஒரு வாரத்துக்குப் பிறகு, நிகிதா தனது தையல்களைத் தானாகவே அகற்றிக்கொண்டார். அதை எப்படி செய்வது என்பதை டிக்டாக் வீடியோக்களைப் பார்த்துத் தெரிந்துகொண்டார். "தோலில் இருந்து எதையோ பிடுங்கி எடுப்பது போல இருப்பதால், உடல் பலவீனமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது" என்று அவர் கூறுகிறார். தையல்களை எப்போது அகற்ற வேண்டும் என்பது குறித்து நோயாளிகள் தங்களது மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுமாறு அறிவுறுத்தப்படுவதாகவும், அதை எவ்வாறு செய்வது என்பது குறித்த தகவல்கள் அவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் ஃபேஸ்லேண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், தனக்கு சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு தொகுப்போ அல்லது அதற்கான வழிமுறைகளோ கிடைக்கவில்லை என்று நிகிதா கூறுகிறார். தையல்களை அகற்றுவதற்காக நோயாளிகள் ஃபேஸ்லேண்டு கிளினிக்கிற்குத் திரும்பி வரலாம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், நாங்கள் பேசியவர்களில் யாரும் அவ்வாறு செய்திருக்கவில்லை. சிகிச்சை பெற்றவர்கள் தங்களது தையல்களை அகற்றிக்கொள்வது "பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்" என்று வைஸ் கூறுகிறார். தொற்று ஏற்படும் அபாயத்தையும், காயங்கள் மீண்டும் பிரிந்து திறக்கும் வாய்ப்பையும் குறைக்க, தையல்களை அறுவை சிகிச்சை நிபுணர் அல்லது செவிலியர்தான் அகற்ற வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். சிறிய தழும்பைத் தவிர, தனது சிகிச்சையின் முடிவுகளில் நிகிதா பெரும்பாலும் மகிழ்ச்சியாகவே இருக்கிறார். ஆனால், மற்றவர்கள் தனது அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்டு, இதில் உள்ள அபாயங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார். "என்னிடம் பணம் இருந்திருந்தாலோ , அல்லது டிக்டாக்கில் கூறப்பட்ட விஷயங்களை நான் கேட்காமல் இருந்திருந்தாலோ, வீட்டுக்கு அருகிலேயே வேறு ஒரு இடத்துக்குச் சென்றிருப்பேன். இவ்வளவு அவசரமாக இந்த சிகிச்சையை மேற்கொண்டிருக்க மாட்டேன்" என்று அவர் கூறுகிறார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழிந்த பின்னரும், கேரினுக்கு இன்னும் இடது கண்ணில் மங்கலான பார்வை மற்றும் தழும்புகள் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. இதற்கிடையில், தனது இரு கண்களுக்கும் மேலே ஏற்பட்டுள்ள தழும்புகள் வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடும் என்று லாரா அஞ்சுகிறார். "உண்மையில் சரிசெய்ய வேண்டிய அவசியமே இல்லாத ஒரு பிரச்னையைச் சரிசெய்ய நான் முயற்சித்தேன். ஆனால், இப்போது அறுவை சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு இன்னும் பெரிய பிரச்னையுடன் திரும்பியிருக்கிறேன். அதற்கான செலவை என்னால் ஏற்க முடியவில்லை.இது மிகவும் வேதனையான விஷயம்"என்கிறார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை