10 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரித்த போக்சோ வழக்குகள்.. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சி தகவல்!!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
10 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரித்த போக்சோ வழக்குகள்.. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சி தகவல்!!

போக்சோ போன்ற கடுமையான சட்டங்கள் நடைமுறையில் இருந்தும், இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2015ஆம் ஆண்டில் 10 ஆயிரத்து 934 சிறுமிகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நிலையில், 2024ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 43 ஆயிரத்து 675 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த 2020 ஆண்டு முதல் 2024 ஆண்டு வரை மட்டும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கிறது. இதில் பெரும்பான்மையானவை அதாவது 1 லட்சத்து 83 ஆயிரத்து 372 வழக்குகள் பாலியல் வன்கொடுமை குற்றங்களாகும். பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் 12 முதல் 18 வயதிற்குட்பட்டவர்கள். அதிலும் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளே மிக அதிக ஆபத்தை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது. அதேபோல் 6 வயதிற்குட்பட்ட 3 ஆயிரத்து 600 பச்சிளம் குழந்தைகளும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகள் தெரிவிக்கின்றன. அதில் 97 சதவீத குற்றங்கள் நன்கு அறிமுகமானவர்களாலேயே ஏற்பட்டுள்ளன. நண்பர்கள் மற்றும் காதலர்களால் 50.9 சதவீதமும், உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார்களால் 37.6 சதவீதமும், குடும்ப உறுப்பினர்களால் 8.2 சதவீத குற்றங்களும் நடைபெற்றுள்ளன. அறியப்படாத நபர்களால் நடக்கும் குற்றங்கள் வெறும் 3.3 சதவீதம் மட்டுமே. மாநிலங்களைப் பொறுத்தவரை, ஒரு லட்சம் மக்கள் தொகைக்கான குற்ற விகிதத்தில் 20.4 சதவீதத்துடன் மேகாலயாவும், 16.4 சதவீதத்துடன் சிக்கிமும் , 16.1 சதவீதத்துடன் மிசோரமும் முன்னிலையில் உள்ளன. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு 13.6 சதவீத குற்ற விகிதத்துடன் 4ஆவது இடத்தில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றங்களை தடுக்க போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்ட போதிலும் சுமார் 89.5 சதவீத வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் விகிதம் வெறும் 32.3 சதவீதமாகவும் 70 சதவீதத்துக்கும் அதிகமான வழக்குகள் தண்டனையின்றி முடிவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. விழிப்புணர்வு மற்றும் வழக்குப்பதிவு செய்யும் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டிருப்பது புள்ளிவிவர உயர்வுக்கு காரணமாக இருந்தாலும், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையை உறுதி செய்தால் மட்டுமே சிறுமிகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய முடியும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை