முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது, “தமிழ் இதழியலின் முன்னோடிகளில் ஒருவரும், தினத்தந்தி நாளிதழின் நிறுவனரும், முன்னாள் சட்டமன்றப் பேரவைத் தலைவருமான சி.பா.ஆதித்தனாரின் பிறந்த நாளில், தமிழுக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும், இதழியல் துறைக்கும் அவர் ஆற்றிய அளப்பரிய பணிகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன். இதழியல் துறையில் உயிரோட்டமான எளிய தமிழ்நடையை அறிமுகப்படுத்தி, தமிழ்நாட்டின் கடைக்கோடி மனிதனும் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி, அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் சி.பா.ஆதித்தனார். தமிழ்நாடு அரசின் அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை வகித்த அவர், சட்டமன்றப் பேரவைத் தலைவராக இருந்தபோது, சட்டமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் தினம் ஒரு திருக்குறள் கூறி அவையைத் தொடங்கும் நடைமுறையைக் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்மொழி, தமிழினம் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்திட்ட “தமிழர் தந்தை” சி.பா.ஆதித்தனாரின் புகழ் நம் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார். “கரூர் துயரம்: தமிழ் மக்களின் மனங்களில் ஆறாவடு!” – கனிமொழி “கரூர் துயரம்: ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு!” – முதலமைச்சர் விஜய் “மின் கட்டணக் கணக்கீட்டு முறையை தனியாருக்கு ஒப்படைக்கும் முடிவை தவெக அரசு கைவிட வேண்டும்” – சிபிஐ(எம்) வலியுறுத்தல்! “இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு தாராபுரம் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்” – உதயநிதி ஸ்டாலின்! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள்: முதலமைச்சர் விஜய் புகழாரம்!
📅
📍 Tiruppur, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk