பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து தீர்மானிக்க 13 பெண் உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பெண்கள் முழு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு பெறுவது குறித்த விவகாரத்தை ஆராய, தமிழ்நாடு அரசு 13 நபர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று (செப்டம்பர் 23) தெரிவிக்கப்பட்டது. மாநிலத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவதன் சாத்தியக்கூறுகளை ஆராய மாநில அளவிலான குழுவை அமைக்கவும், பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு முழு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவதற்கான கொள்கையை உருவாக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும் மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த நர்மதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து தீர்மானிக்க 13 பெண் உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க மூன்று மாத காலம் அவகாசம் தேவை என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், இந்த முக்கியமான விவகாரத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்காக மனுதாரரைப் பாராட்டியது. மேலும், அரசு அமைத்த குழு தனது அறிக்கையை ஜனவரி 21, 2027 அன்று சமர்ப்பிக்க உத்தரவிட்டு, வழக்கை அன்றையைய தினத்திற்கு ஒத்திவைத்தது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
மாதவிடாய் விடுப்பு அளிப்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைப்பு: உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தமிழக அரசு தகவல்
📅
📍 Madurai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk