ராகவ் இந்த 4-ல் நாங்கள் உடனடியாக இம்ப்ரஸ் ஆக வேண்டும் அப்படித்தானே என்று கேட்க, அதற்கு ஜேசன், உங்களை இம்ப்ரஸ் பண்ண வேண்டியது எங்கள் வேலை கிடையாது என்று சொல்ல அவரது தரப்பினர் கைத்தட்டி வரவேற்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போட்டியாளர்களுக்கு இடையே நடைபெறும் விவாதங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடு குறித்த ப்மோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் விஜய் டிவியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் ஷோ பிக்பாஸ். இதுவரை 9 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 10-வது சீசன் கடந்த செப்டம்பர் 6-ந் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கியது. இந்த ஆண்டு, இதுவரை இல்லாத வகையில் இந்நிகழ்ச்சி தொடக்க மேடையிலேயே சில போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதே சமயம், 'லட்சுமி பிரியா, ஷாதிகா, நடிகை சாந்தினி தமிழரசன், நடிகர் பிளாக் பாண்டி, தொகுப்பாளர் வினோத் பாபு, நடிகர் குமரன், தொகுப்பாளர் ராகவன் ரகுநாதன், பிரித்விநாத், முத்தழகி, தன்யா, ஒப்பனை அஷ்மிதா, சீரியல் நடிகர் அவினாஷ், நடிகர் முகேஷ், குக் வித் கோமாளி பிரபலம் அன்சார், சீரியல் நடிகை ஸ்வாமிதா, ஜாவித் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், வீட்டுக்கு உள்ளே போட்டியாளர்களுக்கு இடையில் நடக்கும் விவாதங்கள் பெரிய எதிாபார்ப்பை ஏற்படுத்தி வரும் அதே வேளையில், வீட்டுக்கு வெளியே வீக்எண்ட் எபிசோடுக்கு வரும் விஜய் சேதுபதியின் பேச்சும் அவ்வப்போது சுவாரஸ்யத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே இன்றைய எபிசோட்டின் முதல் ப்ரமோவில், ஜேசன், செயல்பாடு, நிர்வாகம், அணுகுமுறை, விதிமுறைகள் என்று சொல்ல, உடனடியாக ராகவ் இந்த 4-ல் நாங்கள் உடனடியாக இம்ப்ரஸ் ஆக வேண்டும் அப்படித்தானே என்று கேட்க, அதற்கு ஜேசன், உங்களை இம்ப்ரஸ் பண்ண வேண்டியது எங்கள் வேலை கிடையாது என்று சொல்ல அவரது தரப்பினர் கைத்தட்டி வரவேற்கின்றனர். இதற்கு நீங்கள் இப்படியும் பண்ணலாம், பண்ற விதம் என்று ராகவ் சொல்கிறார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்த வீட்டில் எச்சில் தட்டை நான் கழுவிக்கொண்டு இருக்கிறேன். சும்மா சிரித்துக்கொண்டே இருக்கிறேன் என்பதால் ஜாலியாக இருக்கிறேன் என்று நினைக்காதீங்க, எனக்கு பதில் கிடைக்கவில்லை என்றால் நான் எனது வேலைகளை செய்யப்போவது இல்லை, யாருக்கும் உணவு கிடைக்காது என்று ஜேசன் சொல்ல அத்துடன் ப்ரமோ முடிகிறது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. I’m ELAYARAJA D, a seasoned media professional with over 9 years of experience in digital journalism. Currently Working as a Senior Sub-Editor at The Indian Express (Tamil) since Dec 2020, I specialize in reporting on Entertainment, Sports, and Tamilnadu news. My Media journey began in 2015 as a Playout Operator and Video Editor In JM Entertainment Network (Local TV Channel) in Trichy Upto 2017. Then spent Three years as a Sub Editor In Dineseithigai Online Media (Malayalam Express Group) Upto Dec 2020 and have extensive experience Sports reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from Periyar EVR College, Trichirapalli and a Master’s in Visual Communication from Thiru.Vi.Ka Arts College Thiruvarur. Contact: d.elayaraja@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
நான் வேலை செய்ய மாட்டேன்; ஒருத்தருக்கும் சாப்பாடு கிடையாது: ராகவ் - ஜேசன் விவாதம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk