தவெக வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.. இது ஒரு திணிக்கப்பட்ட தேர்தல்! சிபிஎம் சண்முகம் விளாசல்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️
தவெக வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.. இது ஒரு திணிக்கப்பட்ட தேர்தல்! சிபிஎம் சண்முகம் விளாசல்!

செங்கல்பட்டு: மத்திய அரசின் கைப்பாவையாக தன்னிச்சையாக செயல்பட்ட தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், மதுராந்தகம் - தாராபுரத்தில் நடப்பது திணிக்கப்பட்ட தேர்தல் எனவும், தவெக வேட்பாளர்கள் தோற்கடிக்க பட வேண்டும் சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், மதுராந்தகம் அருகே மேலவளம்பேட்டை பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சண்முகம், இந்த தேர்தல் இயற்கையாக வந்த தேர்தல் அல்ல, மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல், திமுகவும் அதிமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயன்றார்கள். அது எங்களுக்கு பிடிக்கவில்லை என ராஜினாமா செய்தவர்கள் கதை சொல்கிறார்கள் அதில் உடன்பாடு இல்லை என்றால் அதிமுகவில் இருந்து வெளியேறி சுயேட்சையாக நின்றிருக்க வேண்டும். ஏன் தவெகவில் இணைந்தீர்கள், ஏதோ ஆதாயத்திற்காக தான் சேர்ந்தார்கள். என்ன பேரம் நடந்தது? ஏன் கட்சி மாறி வந்தார்கள், ஆதாயம் இல்லாமல் அவர்கள் போய் இருக்க மாட்டார்கள். எதற்காக ராஜினாமா செய்தார்? எதற்காக அதே பதவிக்கு போட்டியிடுகிறார்? என இப்பகுதி மக்கள் கேட்க வேண்டும். இது மக்களை கேலிக்குள்ளாகிற விஷயம், 20-நாட்களில் ராஜினாமா செய்துள்ளார்கள். மீண்டும் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம், மீறி வெற்றி பெற்றால் அரசியல் ஆதாயம் கருதி மீண்டும் வேறு கட்சிக்கு செல்வார்கள். தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் அவர்களுக்கு ஆதரவு அளித்தோம். எங்களுடைய ஆதரவுடன் தவெக ஆட்சி அமைந்துள்ளது. இன்னமும் எங்களுடைய ஆதரவு தொடர்கிறது. வேறொரு கட்சியில் இருந்து வந்த நபர்களை அவர்கள் சேர்ப்பது மட்டுமல்லாமல் மீண்டும் அவர்களை போட்டியிடுவதற்காக அனுமதித்து இருக்கிறார்கள் எப்படி அந்த நபர்களுக்கு ஓட்டு கேட்க முடியும். அதற்கு எந்த அடிப்படையில அவர்கள் வாக்கு கேட்கிறார்கள். ஆகவே நாங்கள் அந்த வேட்பாளரை ஆதரிக்க முடியாது. அதே நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைப் போல தேர்தலை புறக்கணிப்பது என்கிற முடிவு பொருத்தமான முடிவு அல்ல என்று இடதுசாரி நாங்கள் முடிவு செய்தோம். ஆகவே தனித்து போட்டியிடுவது என்கிற முடிவு எடுத்தோம். தவெகவிற்கு ஆதரவு அளித்ல நாங்கள் திமுகவுடன் சேர்ந்து போட்டியிட முடியாது. இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இரண்டு தேர்தல் ஆணையர்களின் ஆலோசனை கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டார் என்று மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்கள் தெரிவித்துள்ளனர் மத்திய அரசுக்கு கை பாவையாகா செயல்பட்டு உள்ளார். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை