வீரமணி விவகாரம் குறித்து கடந்த 2024-ல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மூத்த காவல் அதிகாரி ஒருவரைச் சந்தித்து புகார் அளித்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆதிதிராவிடர் பிரிவுத் தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார். 'ஜெம் கிரானைட்ஸ்' உரிமையாளர் ஆர். வீரமணி மீதான பாலியல் வழக்கில் புதிய திருப்பமாக, இக்குற்றம் குறித்து 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே சென்னை காவல்துறையிடம் தகவல் தெரிவித்திருந்ததாக காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார். சென்னையை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி விபசார தடுப்பு பிரிவு போலீசில் புகாரை ஒன்றை அளித்திருந்தார். "அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என்னுடைய அலுவலகத்துக்கு வந்தார். அவர் 'பென்டிரைவ்' ஒன்றை கொடுத்தார். அதில் பிரபல தொழில் அதிபரான 'ஜெம்ஸ் கிரானைட்ஸ்' உரிமையாளர் வீரமணி (வயது 84) சிறுமியிடம் பாலியல் உறவில் ஈடுபட்ட 'வீடியோ' காட்சிகள் இருப்பதாக கூறிச் சென்றார்' என்ற தகவலை தெரிவித்தார். அந்த ’பென்டிரைவ்’வில் இருந்த வீடியோ காட்சியை விபசார தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். இதில் தொழில் அதிபர் வீரமணி சிறுமியுடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவு போலீசார் அக்டோபர் 7 ஆம் தேதி அன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், வீடியோ காட்சியில் இடம்பெற்ற பாதிக்கப்பட்ட நபரை ஆரம்பகட்ட விசாரணையில் அடையாளம் காண இயலாத காரணத்தைக் குறிப்பிட்டு, வீரமணிக்கு எதிரான போக்சோ (POCSO) வழக்கு தொடர்பாக சென்னை காவல்துறை பிப்ரவரி 2026-ல் 'மேற்கொண்டு நடவடிக்கை ஏதுமில்லை' (further action dropped) என்ற நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தது. இருப்பினும், இவ்வழக்கு நீதிமன்றத்தால் நிரந்தரமாக முடித்துவைக்கப்படவோ அல்லது கைவிடப்படவோ இல்லை. சிறப்பு போக்சோ நீதிமன்றம் இவ்வழக்கை முடித்துவைப்பதற்கான பரிந்துரையை நிராகரித்து, மேலும் விசாரணை நடத்த உத்தரவிட்டது. மீண்டும் விசாரணை நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கடந்த ஜூலை மாதத்தில் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் தொழில் அதிபர் வீரமணி சாந்தி என்ற பெண்ணுக்கு தேனாம்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்துள்ளார். அந்த வீட்டில் சாந்தியும், அவரது கணவர் மகேந்திர சிம்கனும் பல சிறுமிகளை தொழில் அதிபர் வீரமணிக்கு விருந்தாக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களுடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். இதில் இந்த வழக்கு தொடர்பான 'வீடியோ' ஆதாரங்கள், சிறுமிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பல சிறுமிகளை சீரழித்த தொழில் அதிபர் வீரமணியை மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்புப்பிரிவு போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர். சிறுமிகளை சப்ளை செய்து வந்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் வீரமணியின் நிறுவனத்தில் 23 ஆண்டுகளாகப் பணிபுரிந்த கணேசன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். நேற்று புதன்கிழமை வீரமணியின் அலுவலகம் உட்பட 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில், கைப்பேசிகள், பல்வேறு ஆவணங்கள் மற்றும் மின்னனு சான்று ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட சான்று பொருட்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லுக் அவுட் நோட்டீஸ் இதனிடையே, பாலியல் வழக்கில் ஜெம் கிரானைட் வீரமணி சிக்காமல் இருக்க காவல் துறை அதிகாரிகள், முக்கிய அரசியல் கட்சியினருக்கு ரூ 70 கோடி வரை செட்டில்மென்ட் வழங்க உதவியதாக ரயில்வே தொழிற்சங்க (SRMU) தலைவர் கண்ணையா மகன் பிரகாஷுக்கு சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியது. ஆனால், பிரகாஷ் அவரது வீட்டில் இல்லை எனவும், தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அவரிடம் விசாரணை நடத்த அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. பிரகாஷுக்கு சம்மன் வழங்குவதற்காக அவரது இல்லத்திற்குச் சென்ற காவல்துறை குழு, அவர் வெளிநாடு சென்றிருப்பதாகத் தெரிவித்ததை அடுத்து, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் (LOC) பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் ஆய்வாளர்களுக்கு சம்மன் இதற்கிடையில், ஜெம் வீரமணி வழக்கை அப்போது விசாரித்த உதவி ஆணையர், காவல் ஆய்வாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. உதவி ஆணையர் யாஸ்மின், காவல் ஆய்வாளர்கள் மகேஷ்குமார், ராஜலட்சுமி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வழக்கை முடித்து வைத்தது ஏன்? என கேள்வி கேட்டு இந்த சம்மன் வழங்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுக்கு முன்பே புகார் இந்நிலையில், 'ஜெம் கிரானைட்ஸ்'உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் வழக்கில் புதிய திருப்பமாக, வீரமணி மற்றும் அவரது கூட்டாளி சாந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, 2024-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதியன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மூத்த காவல் அதிகாரி ஒருவரைச் சந்தித்து புகார் அளித்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆதிதிராவிடர் பிரிவுத் தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளேடான 'தி இந்து'-க்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்து இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Martin Jeyaraj is the Senior Sub Editor and Sports Journalist of Tamil Indian Express Digital. Dynamic and seasoned Multimedia Journalist with over 5 years of experience in reporting and digital storytelling. Proficient in data-driven journalism and social media engagement, having increased publication readership. Specialization: While he covers a variety of sports, he is primarily covers Cricket for the publication. with a focus on domestic tournaments and international fixtures. Based in chennai, his reporting has ranged from the Ranji Trophy to ICC World Cups. he also writes extensively about Kabbadi. Writing Style: His work is characterized by storytelling breaking down the bio-mechanics, tactics, and psychological grit of athletes. also explore the personal journeys of athletes beyond the podium. Notable Recent Articles: conversation with PKL Tamil Thalaivas coach Sanjeev Baliyan, Assistant coach Suresh Kumar. Conversation with Tamil Thalaivas CEO Shushen Vashishth. Deep Dive discussion about Rugby Premier League, with Bengaluru Bravehearts CEO Sanjith Shetty. Professional Experience: Tamil Indian Express: Prior to his current role as Senior Sub Editor he started as retainer. after gaining experience, he served as Sub Editor. SUN TV NETWORK: He previously worked as programming producer in Sun Tv network, creating promos and fillers. and writing scripts for kid's shows. Deccan Chronicle and NEWS 7 TAMIL where he learned reporting and covering daily News as Trainee reporter. both organisations shaped him to pursue Journalism as career. Qualifications, Degrees: Bachelor's degree in physics from Alagappa University, Karaikkudi. PG in Master of Arts Journalism and Mass Communication from SRM University, Chennai. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
வீரமணி மீது நடவடிக்கை எடுக்க 2 ஆண்டுக்கு முன்பே புகார்: காங்கிரஸ் நிர்வாகி பரபர தகவல்
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk