ஜப்பானின் அய்ச்சி – நகோயாவில், ஆசிய விளையாட்டு 20-வது தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தத் தொடரில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா, தாய்லாந்து உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பெண்களுக்கான 60 கிலோ வூஷூ இறுதிப்போட்டி இன்று காலை நடைபெற்றது. இந்தப் போட்டியில் சீன வீராங்கனை ஜாங் சியாயுயிடம் போராடி ரோஷிபினா தேவி தோல்வி அடைந்தார். இரண்டு சுற்றுகளிலும் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற சீன வீராங்கனை ஜாங் சியாயு மொத்தத்தில் 10-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தையும், 2-ஆவது இடத்தை பிடித்த ரோஷிபினா வெள்ளிப்பதக்கத்தையும் தன்வசப்படுத்தினர். தங்கத்தைத் தவறவிட்டிருந்தாலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று பதக்கங்களை வென்ற வூஷூ வீராங்கனை என்ற பெருமையையும் ரோஷிபினா பெற்றுள்ளார். இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? GOLD RATE | தங்கம் விலை அதிரடி சரிவு – இன்றைய நிலவரம் என்ன? பேட்மிண்டனில் இந்தியாவுக்கு வெண்கலம் – அணியில் இடம்பெற்ற தமிழக வீரருக்கு முதல்வர் வாழ்த்து! ஓப்போவின் K14 Plus 5G ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம்! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
ஆசிய விளையாட்டுப் போட்டி : வூஷூ போட்டியில் வெள்ளி வென்றார் இந்தியாவின் ரோஷிபினா தேவி!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk