சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று முன்தினம் மத்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 17.30 மணி அளவில் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவியது. இது மேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திர- தெற்கு ஓடிசா கடலோர பகுதிகளை 23 ஆம் தேதி இரவு விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையில், கலிங்கப்பட்டினம் அருகே கரையை கடக்கக்கூடும். சுமார் 7.6 கி.மீ உயரம் வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதியிலிருந்து, தாய்லாந்து வளைகுடா (Gulf of Thailand) வரை மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. GOLD RATE | தங்கம் விலை அதிரடி சரிவு – இன்றைய நிலவரம் என்ன? பேட்மிண்டனில் இந்தியாவுக்கு வெண்கலம் – அணியில் இடம்பெற்ற தமிழக வீரருக்கு முதல்வர் வாழ்த்து! ஓப்போவின் K14 Plus 5G ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம்! “தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இனியும் பதவியில் நீடிக்க கூடாது” – மு.க.ஸ்டாலின் Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk