அமெரிக்கா–இஸ்ரேல் படைகள் மற்றும் ஈரான் இடையேயான ஏழு மாத போர் காரணமாக மத்திய கிழக்கு எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஏற்பட்ட நிலையில், இதுவரை நேரடி பேச்சுவார்த்தையை மறுத்திருந்த ஈரான், அமெரிக்காவுடன் பேசத் தயார் என அறிவித்தது. இதனால் போர் முடிவுக்கு வரும் நம்பிக்கை உருவாகி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இரு நாளில் ஒரு சதவீதம் குறைந்தது. அமெரிக்கா, இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் போர் 7 மாதத்தை தாண்டியும் தொடர்ந்து வருகிறது. உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 40% பங்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், இந்த போர் காரணமாக அந்த வர்த்தகம் பெரும்பாலும் முடங்கியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய்க்கு உலகளவில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்தது. இந்த போர் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது. ஈரான் அமெரிக்கா இடையேயான போர் முடிவடைந்தால் மட்டுமே கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் வரும் என கருதப்பட்ட நிலையில், அப்படி ஒரு சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதுவரை அமெரிக்காவுடன் நேரடி பேச்சு வார்த்தையை மறுத்து வந்த ஈரான் தற்போது நேரடி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்துள்ளது. மேலும் போர்ப் பதற்றத்தை தணிக்கவும், போரை முடிவுக்குக் கொண்டுவரவும் விருப்பம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக போர் விரைவில் முடிவுக்கு வரும் என நம்பிக்கையில் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் இரண்டே நாளில் ஒரு சதவீதம் வரை குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் 92.15 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் (WTI Crude), 91.56 டாலர் என்ற அளவு விலை குறைந்துள்ளது. மேலும் இந்த விலை குறைவு மேலும் சில நாட்களுக்கு தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் என்றால், அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இருப்பு கடந்த வாரம் 3 மில்லியன் பீப்பாய்கள் அதிகரித்து 426.4 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்துள்ளதாக அமெரிக்க அரசு அறிக்கை வெளியிட்டது. இதுவும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைய ஒரு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
ஈரான் எடுத்த ஒற்றை முடிவு... கச்சா எண்ணைய் விலையில் பெரும் மாற்றம் : முடிவுக்கு வருமா சிக்கல் ?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk