தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன வேலைவாய்ப்பு; 5 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங், எம்.பி.ஏ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க; தேர்வு முறை இதுதான் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (TNPL) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் 23.09.2026 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். Assistant General Manager (Marketing) காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Engineering Degree with MBA (Marketing) / PG Diploma in Marketing Management (or) Degree in Arts / Science / Commerce with MBA (Marketing) / PG Diploma in Marketing Management (or) MBA (Marketing) படித்திருக்க வேண்டும். மேலும் 23 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். வயதுத் தகுதி: 43 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 70100 - 3% - 146960 Chief Manager (Marketing) காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Engineering Degree with MBA (Marketing) / PG Diploma in Marketing Management (or) Degree in Arts / Science / Commerce with MBA (Marketing) / PG Diploma in Marketing Management (or) MBA (Marketing) படித்திருக்க வேண்டும். மேலும் 19 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். வயதுத் தகுதி: 39 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ. 60200 - 3% - 126220 Manager (Marketing) / Deputy Manager (Marketing) காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Engineering Degree with MBA (Marketing) / PG Diploma in Marketing Management (or) Degree in Arts / Science / Commerce with MBA (Marketing) / PG Diploma in Marketing Management (or) MBA (Marketing) படித்திருக்க வேண்டும். மேலும் 10 - 14 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். வயதுத் தகுதி: 29 வயது முதல் 48 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ. 45500 - 3% - 95420 Deputy Manager (Marketing) / Assistant Manager (Marketing) காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Engineering Degree with MBA (Marketing) / PG Diploma in Marketing Management (or) Degree in Arts / Science / Commerce with MBA (Marketing) / PG Diploma in Marketing Management (or) MBA (Marketing) படித்திருக்க வேண்டும். மேலும் 8 - 10 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். வயதுத் தகுதி: 28 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ. 37900 - 3% - 79520 Assistant Manager (Secretarial) காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Graduate and an Associate Member of the Institute of Company Secretaries of India (ICSI) படித்திருக்க வேண்டும். மேலும் 8 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். வயதுத் தகுதி: 28 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ. 31100 - 3% - 65350 வயது வரம்பு தளர்வு: தமிழக அரசு விதிகளின்படி பி.சி, எம்.பி.சி, பி.சி.எம் பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி, எஸ்.சி.ஏ பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tnpl.com/wp-content/uploads/2025/04/Bio-Data-Format-for_TNPL.pdf என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். முகவரி: CHIEF GENERAL MANAGER (HR) TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED NO.67, ANNA SALAI, GUINDY, CHENNAI – 600 032, TAMIL NADU விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.09.2026 இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. He is working as a Senior Sub Editor in Indian Express Tamil. He has been working in this organization for more than 4 years. He writes news related to politics, education and employment opportunities. Educational Qualification: Bachelor's Degree in Information Technology Experience: More than 5 years of experience in the news industry. Expertise: He writes education-related news ranging from school and college exams, results, and other information to exams like NEET and JEE. Additionally, he is also writing about the latest job news on TNPSC, Railways, Bank exams and Tamil Nadu and India-wide job opportunities. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வேலை வாய்ப்பு; 5 பணியிடங்கள்; விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk