தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகிய இருவரும் கடந்த 10 மாதங்களில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகளுக்கு எதிராக 14 முறை எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . ஒரே நாளில் 4 முறை கூட எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த மோதலுக்கு மூன்று முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவதாக, Form 6 விவகாரம். புதிய வாக்காளர் பதிவுக்கான Form 6-ல் கூடுதல் பிரகடனம் சேர்க்கப்பட்டுள்ளது. இது Registration of Electors Rules, 1960-ஐ திருத்தாமல் SIR உத்தரவு மூலம் மாற்ற முடியாது என மே 16-ம் தேதி ஆணையர் ஜோஷி எதிர்ப்பு தெரிவித்தார். மே 19-ம் தேதி ஆணையர் சந்து அதை ஆதரித்தார். ஆனால் ஜூலை மாதம் அந்த மாற்றம் ECINet போர்ட்டலில் கொண்டுவரப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இரண்டாவது, வாக்காளர் தரவுத்தள மையப்படுத்தல். தரவு நீக்கம், மீட்பு மற்றும் தொழில்நுட்ப அமைப்புகள் தொடர்பான முடிவுகள் தங்களுக்கு தெரியாமல் எடுக்கப்பட்டதாக இருவரும் தெரிவித்துள்ளனர். மூன்றாவது, IT பிரிவு பொறுப்பில் செய்யப்பட்ட மாற்றம். இதை எதிர்த்து இரு ஆணையர்களும் கேபினட் செயலருக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜோஷியின் பதவிக்காலம் 2031ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி முடிவடைகிறது. எனவே, 2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தலைமைத் தேர்தல் ஆணையராக அவர் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஞானேஷ்குமாருடன் பல்வேறு விஷயங்களில் முரண்பட்டதால் இப்போது விவேக் ஜோஷி கவனம்பெற்றுள்ளார். அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக பார்க்கப்படும் ஜோஷி அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக பார்க்கப்படும் ஜோஷி ரூர்க்கி பல்கலைகழகத்தில் இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றவர் வர்த்தகம், பொருளாதாரத்தில் மேற்படிப்பு, முனைவர் பட்டம் பெற்றவர் ஹரியானா கேடர் ஐஏஎஸ் அதிகாரி விவேக் ஜோஷி, பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார் 2019இல் இந்திய பதிவாளர் ஜெனரல் & மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையரானார் 2022இல் மத்திய நிதிச் சேவைகள் துறை செயலராக நியமிக்கப்பட்டார். 2024 நவம்பரில் ஹரியானா மாநில தலைமை செயலராக நியமிக்கப்பட்டார் 2025ஆம் ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார் ஜோஷியின் பதவிக்காலம் 2031ஆம் ஆண்டு பிப்ரவரி 18இல் முடிவடைகிறது 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தலைமைத் தேர்தல் ஆணையராக வாய்ப்பு
"Form 6 முதல் ECI Net வரை" : தேர்தல் ஆணையத்தை பிளவுபடுத்திய 3 விவகாரங்கள்!!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk