சூர்யா நடித்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’ குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு வெளிவந்து, அதிரடி படங்கள் மத்தியில் தனித்துவமான வரவேற்பைப் பெற்றது. தெலுங்கு, தமிழில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த இந்த படம், நடிகர் சிவராஜ் குமாரை ஆழமாக பாதித்துள்ளது. பெற்றோர், குடும்ப நினைவுகளைத் தூண்டியதால், படம் பார்த்த பிறகு ஒரு மணி நேரம் தூங்க முடியாமல், கண்ணீர் வந்ததாக அவர் கூறியுள்ளார். லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. சூர்யாவுடன் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சமீபத்தில் தொடர்ச்சியாக வெட்டு, குத்து என அதிரடி, ஆக்சன் படங்களே தொடர்ச்சியாக வந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு குடும்ப உறவுகளின் உணர்வுகளை மையமாகக் கொண்டு வெளிவந்த இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தெலுங்கு, தமிழ் இரண்டிலும் நன்றாக சென்ற இப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து அசத்தியது. #Shivarajkumar: I watched #VishwanathAndSons recently. When I saw the film, I couldn’t sleep for an hour. It reminded me of my parents and my family. I was lying there, thinking about it, and I was in tears. I think some emotions.. I also wish to do a film like that someday.… இந்தசூழலில் இப்படம் குறித்து பேசியிருக்கும் நடிகர் சிவராஜ் குமார், “சமீபத்தில் நான் விஸ்வநாத் & சன்ஸ் படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தைப் பார்த்த பிறகு, என்னால் ஒரு மணி நேரம் தூங்க முடியவில்லை. அது என் அப்பா, அம்மாவையும், என் குடும்பத்தையும் எனக்கு நினைவூட்டியது. அதைப் பற்றி யோசித்தபடியே படுத்திருந்தபோது என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. சில உணர்வுகள் நம்மை கலங்கவைத்துவிடுகின்றன. என்றாவது ஒரு நாள் நானும் இப்படியான ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன்” என பேசியுள்ளார்.
”விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்து தூங்க முடியவில்லை..” - சிவராஜ் குமார்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk