தெலங்கானா மருத்துவமனை தீ விபத்து: 25 பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்றத் உயிரைப் பணயம் வைத்த 4 மருத்துவர்கள்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
தெலங்கானா மருத்துவமனை தீ விபத்து: 25 பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்றத் உயிரைப் பணயம் வைத்த 4 மருத்துவர்கள்

தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள், உதவியாளர்கள் மற்றும் செவிலியர்கள் பச்சிளம் குழந்தைகள் சிறப்புப் பராமரிப்புப் பிரிவில் (எஸ்.என்.சி.யு) இருந்த பெரும்பாலான குழந்தைகளை வெளியேற்றிவிட்டனர். தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான 'ரிம்ஸ்' மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் சிறப்புப் பராமரிப்புப் பிரிவில் ஏசி இயந்திரம் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் கருகிய பகுதிகளை மக்கள் பார்க்கின்றனர். செவ்வாய்க்கிழமை நடந்த இச்சம்பவத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்; மேலும் 2 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். Photograph: (PTI Photo) எழுதியவர்: நிகிலா ஹென்றி தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவ அறிவியல் கழகத்தில் (ஆர்.ஐ.எம்.எஸ்) திங்கள்கிழமை இரவு பச்சிளம் குழந்தைகள் சிறப்புப் பராமரிப்புப் பிரிவில் (எஸ்.என்.சி.யு) பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், எரியும் கட்டிடத்திற்குள் இருந்து சுமார் 25 குழந்தைகளை உடனடியாக மீட்க 4 மருத்துவர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்துப் போராடியுள்ளனர். ஆங்கிலத்தில் படிக்க: தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன்பே, அங்கிருந்த குழந்தைகள், உதவியாளர்கள் மற்றும் செவிலியர்களின் உதவியோடு பெரும்பாலான பச்சிளம் குழந்தைகளை எரியும் பகுதியிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர். மீட்புப் பணியின் போது புகை மூட்டத்தால் ஒரு மருத்துவர் மயக்கமடைந்து விழ, மற்றவர்கள் அவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அங்கு நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த மருத்துவர் நவ்நீத் ரத்தோட், "நான் எதேச்சையாகத்தான் அந்தத் தளத்திற்குச் சென்றேன். ஒரு நோயாளிக்கான மருத்துவ ஆலோசனைக்காக அங்குச் சென்றிருந்தேன்" என்று கூறினார். அவர் பச்சிளம் குழந்தைகள் சிறப்புப் பராமரிப்புப் பிரிவை (எஸ்.என்.சி.யு) நெருங்கியபோது, ஏ.சி ஒன்றிலிருந்து தீப்பொறியும் புகையும் வருவதைக் கண்டார். "நான் உள்ளே ஓடியபோதே புகையின் நெடி வீசியது" என்று அவர் தெரிவித்தார். புகை மூட்டம் தீவிரமடைந்ததும், மருத்துவர் ரத்தோட் சட்டென்று குறைந்தது 4 குழந்தைகளை அள்ளிக்கொண்டு வெளியே ஓடினார். சிக்கலான மீட்புப் பணி 10 மாதம் முடிவதற்கு முன்பே பிறந்த குழந்தைகள் என்பதால், அவை பல்வேறு தீவிர சிகிச்சை உபகரணங்களுடன் இணைக்கப்பட்டிருந்தன. இதனால் மீட்புப் பணி மிகவும் கடினமாக இருந்தது. "முதலில் குழந்தைகளை செயற்கை சுவாசம் அளிக்கும் குழாய்கள், வார்மர்கள் மற்றும் மெக்கானிக்கல் வென்டிலேட்டர்களில் இருந்து கவனமாகப் பிரிக்க வேண்டியிருந்தது. நாங்கள் மிகக் குறைந்த நேரத்திலேயே அதைச் செய்தோம்" என்று பொது மருத்துவத்துறை உதவிப் பேராசிரியரான மருத்துவர் ரத்தோட் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழிடம் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து இளநிலை மருத்துவரான (ஹவுஸ் சர்ஜன்) இஃப்தேகர் உள்ளே சென்றார். அவர் சுமார் 3 குழந்தைகளை கருவிகளிலிருந்து பிரித்து வெளியே கொண்டு வந்தார். "இரண்டாவது முறை உள்ளே சென்றபோது, அதிகப்படியான புகையைச் சுவாசித்ததால் அவர் பச்சிளம் குழந்தைகள் சிறப்புப் பராமரிப்புப் பிரிவில் (எஸ்.என்.சி.யு) அறைக்குள்ளேயே மயங்கி விழுந்துவிட்டார்" என்று ரத்தோட் கூறினார். மற்றொரு மருத்துவரான ஷ்ரவந்தி (எஸ்.என்.சி.யு பொறுப்பாளர்), இரண்டு வார்மர்களில் இருந்து இரண்டு குழந்தைகளை அள்ளிக்கொண்டு ஓடியதைக் கண்டதாக மருத்துவர் ரத்தோட் தெரிவித்தார். மீட்புப் பணிகள் நடந்துகொண்டிருந்தபோதே, ஏசி பெட்டி வெடித்துச் சிதறி அதன் பாகங்கள் தரையில் விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். "தரையில் தீப்பற்றி எரிந்தது. இருப்பினும், உதவியாளர்களும் பணியாளர்களும் முடிந்தவரை அதிகமான குழந்தைகளைக் காப்பாற்ற உள்ளேயும் வெளியேயும் ஓடிக்கொண்டே இருந்தனர்" என்று மயக்கமடைந்த பின் மற்ற ஊழியர்களால் வெளியே இழுத்து வரப்பட்ட மருத்துவர் இஃப்தேகர் கூறினார். இளநிலை மருத்துவர் டும்பா அசோக் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழிடம் கூறுகையில், பெற்றோரின் அலறல் சத்தம்தான் அவரை கடைசி முறையாக கட்டிடத்திற்குள் செல்ல வைத்ததாகத் தெரிவித்தார். "நான் இதற்கு முன் ஒரே ஒரு நாள் மட்டுமே இந்தப் பிரிவில் பணியாற்றியிருக்கிறேன். அதனால் குழந்தைகள் எங்கு இருப்பார்கள் என்பது எனக்குத் தெரிந்திருந்தது; அவர்களின் அழுகைச் சத்தமும் கேட்டது. நான் உடனே உள்ளே ஓடி, இரு குழந்தைகளைக் கண்டெடுத்து வெளியே கொண்டு வந்தேன்." இவ்வாறு மீட்கப்பட்ட அந்த இரு குழந்தைகளே எரியும் அறையிலிருந்து உயிரோடு மீட்கப்பட்ட கடைசி குழந்தைகள் ஆவர். சில நிமிடங்களிலேயே வளாகம் முழுவதும் அடர்ந்த புகை சூழ்ந்துகொண்டது. "கண்முன்னே எதுவும் தெரியாத அளவுக்குப் புகை மூட்டம். எஸ்.என்.சி.யு அறையின் அமைப்பு பற்றித் தெரிந்தவர்களால் மட்டுமே கடைசி நேரத்தில் உதவ முடிந்தது" என்று மருத்துவர் ரத்தோட் கூறினார். குழந்தைகள் வெளியே கொண்டுவரப்பட்ட உடனே, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். "தீ மற்றும் புகையிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே எங்கள் எண்ணமாக இருந்தது" என்றார் மருத்துவர் அசோக். மருத்துவர் ரத்தோட் நெகிழ்ச்சியுடன், "என் வாழ்நாளில் இந்த இரவை என்னால் மறக்கவே முடியாது..." என்றார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை