ஒரே குடும்பத்தில் அன்புடன் வாழ்ந்த சகோதரியே என்னை ஒரு 'திருடி'யாகச் சித்தரித்ததை நம்பவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. ராதா எல்லா விஷயங்களிலும் மிகவும் கவனமாக இருப்பார். தனது பெயரில் இருக்கும் காசோலையைத் எடுத்து ரூ46 கோடி ரூபாய் மோசடி செய்ததாகச் சகோதரியும் நடிகையுமான ராதா சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு, மூத்த நடிகை அம்பிகாவும் அவரது சகோதரர் மல்லிகார்ஜுனனும் உணர்ச்சிப்பூர்வமாகப் பதிலளித்துள்ளனர். 80-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்தவர்கள் அம்பிகா மற்றும் ராதா. சகோதரிகளாக இவர்கள் இருவரும் இணைந்தும், தனித்தனியாகவும் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக சிவாஜிக்கு ஜோடியாக இருவரும் நடித்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு ராதா நடிப்பில் இருந்து விலகினாலும், அம்பிகா தொடர்ந்து வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் தனது அக்கா அம்பிகாவும். சகோதரன் மல்லிகார்ஜூனாவும், தன்னிடம் இருந்து ரூ46 கோடி செக் மோசடி செய்துவிட்டதாக ராதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிகழ்வு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ராதா வைத்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது, புணைக்கப்பட்டது என்று அம்பிகாவும், அவரது சகோதரர் மல்லிகார்ஜூனாவும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளனர். இந்த பேட்டியில் பேசிய அம்பிகா, ராதா முன்வைத்த நிதி மோசடி குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை. பொய்யான புணைக்கப்பட்டவை. இத்தனை ஆண்டுகளாக ஒரே குடும்பத்தில் அன்புடன் வாழ்ந்த சகோதரியே என்னை ஒரு 'திருடி'யாகச் சித்தரித்ததை நம்பவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. ராதா எல்லா விஷயங்களிலும் மிகவும் கவனமாக இருப்பார். அப்படி இருக்கும்போது அவர் கையொப்பமிட்ட வெற்றுச் (பிளாங்க்) காசோலைகளை (செக்) அலட்சியமாக வீட்டில் மறந்து வைத்துவிட்டுச் சென்றார் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை . அவர் வைத்துள்ள ஹேண்ட் பேக்கில் கூடத் தனித்துவமான 'நம்பர் லாக்' போட்டுப் பயன்படுத்தும் நபர் ராதா. தூங்கச் செல்லும்போது அந்தப் பையைக் பீரோவுக்குள் வைத்து மீண்டும் பூட்டிப் பத்திரப்படுத்துவார். அவ்வளவு விழிப்புணர்வு கொண்ட ஒருவர், கையொப்பமிட்ட காசோலைகளை வேறொரு இடத்தில் மறந்து வைத்தார் என்று கூறுவது நம்ப முடியாதது. அதேபோல் ஏ.ஆர்.எஸ் ('ARS) கார்டன்' என்ற வணிகப் பெயரிலிருந்து அம்பிகா என்ற என் பெயரின் முதல் எழுத்தான 'ஏ' வை நீக்கிவிட்டு, 'ஆர்.ஆர் கார்டன்ஸ்' என்று மாாற்றியது கூட எனக்குத் தெரியாமல் தான் நடந்தது" என்று அம்பிகா கூறினார். இந்த கார்டனை அக்காவுக்கு (அம்பிகா) கொடுத்துவிடலாம் என்று ராதாவின் கணவர் ராஜசேகரன் நாயர் மலையாள நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது அதன் பெயரை மாற்றிவிட்டார்கள். குடும்பத்தில் சொத்து தொடர்பாக முன்னரும் தகராறுகள் இருந்தது. ராதா ஒரு தங்க நகை பிரியர். எனக்குச் சேர வேண்டிய பெரும் பகுதி தங்க நகைகள் ராதாவிடம் இருக்கிறது. எனக்கு உரிமையான நகைகளைப் பற்றிக் கேட்கும்போது அவள் சரியாகப் பதில் அளிப்பதில்லை. கண்கலங்கிய நடிகை அம்பிகா! "ராதா தங்கத்தை பார்த்தாலே ஒரு மாதிரி ஆகிடுவா..அது தான் அவளோட வீக்னஸ்..என்னோட தங்கம் கூட அவங்க கிட்ட இருக்கு..நான் தான் அவங்க மேல கேஸ் போடணும்"..கொந்தளித்த நடிகை அம்பிகா#actressambika#actressradha#PropertyIssue#chennai#NewsUpdate… pic.twitter.com/sSxme3mX64 ராதாவுக்குத் தங்கத்தின் மீது ஒரு தனி பலவீனம் உண்டு. அம்மா அல்லது மற்ற அக்காக்களின் நகைகளை எடுத்ததைக் கூட விட்டுவிடலாம், ஆனால் என்னுடைய பெருமளவு நகைகள் இன்னமும் அவளிடம் தான் உள்ளன. அதுகுறித்து நேரடியாகப் பேச முயன்றால் அவள் தொலைபேசியைக் (போன்) கூட எடுப்பதில்லை. அம்மா உயிருடன் இருந்தபோதே சொத்துக்களைச் சமமாகப் பிரிக்க முடிவு செய்யப்பட்டது. நேரில் பேசும்போது எதுவும் இல்லை என்று கூறிவிட்டு, பின்னர் மாற்றிப் பேசுவது ராதாவின் வழக்கமான பாணி என்று அம்பிகா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். வணிகத் தேவைகளுக்காக வைக்கப்பட்டிருந்த ஐந்து வெற்றுச் காசோலைகளைத் திருடி, அம்பிகாவும் அவருடைய சகோதரரும் சேர்ந்து ரூ46 கோடி ரூபாய் தட்டையெடுக்க முயன்றதாக சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் ராதா புகார் அளித்திருந்தார். ஆனால், குடும்பச் சொத்தில் அம்பிகாவுக்கு உள்ள உரிமைகளை மறுக்கவும், அவரைத் தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்தவும் செய்யப்படும் முயற்சி இதுவே என்பது அம்பிகாவினதும் அவரது சகோதரரினதும் நிலைப்பாடாகும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
ராதாவுக்கு இதுதான் வீக்னஸ்; விழிப்புடன் இருப்பவர் அலச்சியமாக இருந்ததை நம்ப முடிகிறதா? காசோலை மோசடி வழக்கில் அம்பிகா கண்ணீர்
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk