தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு அரசு அலுவலகங்களை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அவர் கிண்டி – பூந்தமல்லி மெட்ரோ கட்டுமான பணிகள், காஞ்சிபுரம் சிப்காட் தொழிற்சாலை, புழல் சிறை, சமூக நிதி விடுதி என பல்வேறு இடங்களை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின் உற்பத்தி மற்றும் மின் தேவைகள் குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக பல்வேறு இடங்களில் மின் துண்டிப்புகள் அடிக்கடி ஏற்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், மின்வெட்டுகள் ஏற்படும் காரணங்கள் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும் பருவமழை தொடங்க உள்ள நிலையில் பருவழைக்காக மின்சாரத் துறையில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. “ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும்!” – அண்ணாமலை “மோதிரம் மாட்டி விளம்பரம் தேடும் அக்கறையை குழந்தைகளின் உயிரை காப்பதில் காட்ட வேண்டும்!” – கனிமொழி GOLD RATE | தொடர்ந்து சரியும் தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன? IIT-களில் 53 மாணவர்கள் உயிரிழப்பு – மாணிக்கம் தாகூர் கண்டனம்! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk