அமெரிக்காவின் முதல் முஸ்லிம் செனட்டர் அப்துல்! இவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
அமெரிக்காவின் முதல் முஸ்லிம் செனட்டர் அப்துல்! இவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு?

மிச்சிகன் மாகாணத்தின் செனட்டராக தேர்வாகியுள்ள அப்துல் எல்-சயீத்துக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவு குறித்து... மிச்சிகன் மாகாணத்தின் செனட்டராக தேர்வாகியுள்ள அப்துல் எல்-சயீத் மற்றும் அவரது மனைவி சாரா ஜுகாகு - AP அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக செனட் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் முஸ்லிம் வேட்பாளரான அப்துல் எல்-சயீத் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் 435 பிரதிநிதிகள் அவை இடங்களுக்கும், 35 செனட் அவை இடங்களுக்கும், பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்கள், உள்ளாட்சிப் பதவிகளுக்குமான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி, கடந்த நவ. 3 ஆம் தேதி மாலை நடைபெற்றது. ஜனநாயகக் கட்சிக்கும், வலதுசாரியான குடியரசுக் கட்சிக்கும் கடுமையான போட்டி நிலவிய இந்தத் தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று (நவ. 4) காலை முதல் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், மிச்சிகன் மாகாணத்தின் செனட் அவைப் பதவிக்குப் (செனட்டர்) போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் அப்துல் எல்-சயீத் 52.44 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்துள்ளார். இவருக்கு, 24 லட்சத்து 94 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம், வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்க செனட் அவையில் இடம்பெறும் முதல் முஸ்லிம் எனும் பெருமையை எல்-சயீத் அடைந்துள்ளார். இவருக்கு, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆதரவளித்து வந்த நிலையில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அப்துல் ஒரு பயங்கரவாதி எனக் குறிப்பிட்டு பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். எகிப்து நாட்டை பூர்வீகமாகக் கொண்ட தந்தைக்கு எல்-சயீத் கடந்த 1984 ஆம் ஆண்டு மிச்சிகன் மாகாணத்தில் பிறந்தார். மருத்துவரான இவர் இலவச மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வாக்குறுதிகளின் மூலம் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளார். இந்தியாவுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? அப்துல் எல்-சயீத் கடந்த 2006 ஆம் ஆண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாரா ஜுகாகு எனும் மனநல மருத்துவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சாரா ஜுகாகுவின் பெற்றோர் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிப்பெயர்ந்தவர்கள். சாராவின் தந்தையும், சிறுநீரக மருத்துவருமான தையப் ஜுகாகு கர்நாடகத்தின் பட்கல் பகுதியைச் சேர்ந்தவர். தையப் ஜுகாகுவின் தந்தை ஷம்சுதீன் ஜுகாகு ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞராகவும், அன்றைய மைசூர் மாநிலத்தின் துணை நிதியமைச்சராகவும் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை