திருவனந்தபுரம் - மங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயிலில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணித்துள்ளனர். வந்தே பாரத் ரயில் - கோப்புப் படம் திருவனந்தபுரம் - மங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயிலில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணித்துள்ளனர். இதுவரை இல்லாத வகையில் 2025 - 26 நிதியாண்டில் 189.35% இருக்கைகள் நிரம்பியுள்ளன. 2025-26 நிதியாண்டில் வந்தே பாரத் ரயிகளில் ஒட்டுமொத்தமாக 99.10% இருக்கைகள் நிரம்பிய விகிதம் பதிவாகியுள்ளது. நாட்டில் 2019 ஆம் ஆண்டு வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. பயணிகளின் பயண நேரத்தை குறைக்கும் வகையிலும் பயணிகளுக்கு சொகுசுப் பயணத்தை வழங்கும் நோக்கத்திலும் இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில், 2025 - 2026 நிதியாண்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக வந்தே பாரத் ரயிலில் 99.10% இருக்கைகள் நிரம்பிய பயணத்தை பதிவு செய்துள்ளன. நாட்டில் படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயில், 2026 ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. ஹெளரா முதல் காமக்யா வரையிலான இந்த ரயில் சேவையில் 114.54% இருக்கைகள் நிரம்பின. இதே காலகட்டத்தில், அதிகபட்சமாக திருவனந்தபுரம் - மங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் இருக்கை 189.35% நிரம்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவலில், எண் 20631 கொண்ட வந்தே பாரத் ரயில், மங்களூரு - திருவனந்தபுரம் இடையே பயணிக்கையில் 174.77% இருக்கைகள் நிரம்பியிருந்தன. மறுமார்க்கத்தில் வண்டி எண் 20632 கொண்ட வந்தே பாரத் ரயிலில் அதிகபட்சமாக 189.35% இருக்கைகள் நிரம்பியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
அதிக பயணிகள்! திருவனந்தபுரம் - மங்களூரு வந்தே பாரத் ரயிலின் புதிய சாதனை!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗