இஸ்ரேலின் பிரதமராக ஆட்சியமைக்க ஐசென்கோட்டுக்கு அரபு கட்சிகள் ஆதரவளிப்பது குறித்து... காடி ஐசென்கோட் - AP இஸ்ரேலின் புதிய பிரதமராகப் பதவியேற்று ஆட்சி அமைக்க எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்கோட்டுக்கு ஆதரவளிப்பதாக, அரபு கட்சிகளின் கூட்டணி அறிவித்துள்ளது. இஸ்ரேலில், கடந்த அக்.27 ஆம் தேதி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சித் தலைமையிலான கூட்டணி 53 இடங்களை மட்டுமே வென்றது. இதையடுத்து, அவரது கூட்டணியில் இடம்பெற்று 7 இடங்களைக் கைப்பற்றிய யுனைடெட் தோரா ஜுடாயிஸம் எனும் கட்சி நெதன்யாகு அரசு அமைப்பதற்கு ஆதரவு அளிக்க முடியாது என இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக் உடனான சந்திப்பில் தெரிவித்துள்ளது. இத்துடன், 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில், அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசென்கோட் கூட்டணி 48 இடங்களையும், முதல்முறையாக அரபு கட்சிகள் 19 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. இந்த நிலையில், அதிபர் ஹெர்சாக் உடனான ஆலோசனைக் கூட்டத்தில், ஐசென்கோட் பிரதமராகப் பதவியேற்று அரசு அமைப்பதற்கு ஆதரவளிக்கவுள்ளதாக, அரபு கட்சிகளின் ஜாய்ண்ட் லிஸ்ட் கூட்டணி இன்று (நவ. 5) அறிவித்துள்ளது. ஏற்கெனவே, நெதன்யாகுவின் அரசு குறித்து இஸ்ரேலியர்கள் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருவதால், ஐசென்கோட் அரபு கட்சிகளின் ஆதரவை ஏற்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. மேலும், பாலஸ்தீனர்களின் ஆதரவைப் பெற்ற அரபு கட்சிகள் கூட்டணி அரசில் இடம்பெற்றால் காஸா விவகாரத்தில் அமைதியான முடிவுகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இஸ்ரேலின் புதிய பிரதமர் காடி ஐசென்கோட்? அரபு கட்சிகள் ஆதரவு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗