அழகியல் காட்சியல்ல வானியல் நிகழ்வுகள்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Events ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
அழகியல் காட்சியல்ல வானியல் நிகழ்வுகள்!

வியாழன் கோளின் நிலா மறைப்பு குறித்த நடுப்பக்கக் கட்டுரை.... முனைவர் பொ. ரமேஷ் அரிய வானவியல் நிகழ்வான வியாழன் கோளின் நிலா மறைப்பு, நவம்பர் 3-ஆம் தேதி அதிகாலை நடைபெற்றது. சூரியக் குடும்பத்தின் மிகப் பெரிய கோளான வியாழன், பூமியின் இயற்கை துணைக்கோளான நிலவுக்குப் பின்னால் சென்று சில நிமிஷங்கள் மறைந்து மீண்டும் தோன்றியது. திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இந்த நிகழ்வைக் காண முடிந்த நிலையில், சென்னை, திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் பெய்த மழை மற்றும் நிலவிய மேகமூட்டம் காரணமாக வானியல் ஆர்வலர்களால் இந்த நிகழ்வைத் தெளிவாகக் காண முடியவில்லை. வானியல் அறிவியலில் ஒரு வான்பொருள் மற்றொரு வான்பொருளின் முன் கடந்து சென்று அதை மறைப்பது மறைப்பு எனப்படுகிறது. இந்த நிகழ்வில் நிலவு, வியாழன் கோளுக்கும் பூமிக்கும் இடையில் தோன்றும் வகையில் கடந்து சென்றதால், பூமியிலிருந்து பார்க்கும்போது வியாழன் கோள் நிலவின் பின்னால் மறைந்தது. பின்னர், நிலவின் விளிம்பைக் கடந்து மீண்டும் வெளிப்பட்டது. இது ஒரு சாதாரண கோள் சந்திப்பு அல்ல; நிலவு மற்றும் வியாழன் ஆகியவற்றின் தோற்ற இயக்கத்தை நேரடியாகக் கவனிக்கக் கிடைத்த ஓர் அரிய வானவியல் நிகழ்வாகும். நவம்பர் 2-ஆம் தேதி இரவு தொடங்கி நவம்பர் 3-ஆம் தேதி அதிகாலை வரை இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்திய நேரப்படி அதிகாலை சுமார் 2 மணி முதல் வானவியல் ஆர்வலர்கள் நிலவையும் அதற்கு அருகில் பிரகாசமாகத் தெரிந்த வியாழன் கோளையும் கவனிக்கத் தொடங்கினர். குறிப்பிட்ட பகுதிகளில் நிலவு தனது விளிம்பால் வியாழனை மறைத்தது. சில நிமிஷங்கள் கழித்து வியாழன் மீண்டும் நிலவின் மறுபக்கத்திலிருந்து தோன்றியது. இந்த மறைப்பு நிகழ்வின் கால அளவு பார்வையாளர்கள் இருக்கும் புவியியல் இடத்தைப் பொருத்து மாறுபட்டது. இந்த நிகழ்வைக் காண தமிழகத்தின் பல பகுதிகளில் வானவியல் ஆர்வலர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். குறிப்பாக சென்னை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை நேரத்தில் நிலவிய மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக வானம் தெளிவாகத் தெரியவில்லை. இதனால், நிலவு மற்றும் வியாழன் கோளின் மறைவு, மீண்டும் தோன்றுதல் ஆகிய காட்சிகளை நேரடியாகக் காண முடியாமல் பலர் ஏமாற்றமடைந்தனர். வானியல் நிகழ்வுகளைப் பார்வையிடுவதில் வானிலையின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த அனுபவம் மீண்டும் உணர்த்தியது. மாறாக, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வானிலை ஓரளவு சாதகமாக இருந்ததால் இந்த அரிய நிகழ்வைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. தொலைநோக்கி மற்றும் பைனாகுலர் போன்ற கருவிகளைப் பயன்படுத்தியவர்கள் நிகழ்வின் நுட்பமான காட்சிகளையும் கவனிக்க முடிந்தது. இந்த நிகழ்வின் மற்றொரு சிறப்பம்சம் வியாழன் கோள் நான்கு பெரிய துணைக்கோள்களுடன் தொடர்புடையதாகும். இத்தாலிய வானியலாளர் கலிலியோ கலிலி 1610-ஆம் ஆண்டு தொலைநோக்கி மூலம் வியாழனைச் சுற்றி வரும் நான்கு முக்கியத் துணைக்கோள்களைக் கண்டறிந்தார். அவை ஐ.ஓ. யூரோப்பா, கனிமீடு, காலிஸ்டோ ஆகியவையாகும். இவை கலிலியோ துணைக்கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஐ.ஓ. துணைக்கோளில் ஏராளமான எரிமலைச் செயல்பாடுகள் நடைபெறுகின்றன. யூரோப்பாவின் பனிக்கட்டிப் படலத்துக்கு கீழே திரவ நீர்ப்பெருங்கடல் இருக்கக்கூடும் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். கனிமீடு சூரியக் குடும்பத்திலேயே மிகப் பெரிய துணைக்கோளாகும். இது புதன் கோளைக் காட்டிலும் பெரியது. காலிஸ்டோ ஏராளமான விண்கல் தாக்கப் பள்ளங்களைக் கொண்ட பழைமையான துணைக்கோளாகும். நிலா மறைப்பு நிகழ்வின்போது வியாழன் கோளுடன் அதன் துணைக்கோள்களும் நிலவின் பின்னால் மறைவதையும் மீண்டும் தோன்றுவதையும் சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் கவனிக்க முடியும். ஒவ்வொரு துணைக்கோளும் வியாழனைச் சுற்றி வெவ்வேறு சுற்றுப்பாதையில் இயங்குவதால் அவற்றின் மறைவு மற்றும் தோற்ற நேரங்கள் ஒன்றுக்கொன்று மாறுபடும். இதுபோன்ற நிகழ்வுகள் வியாழனின் துணைக்கோள்களின் இயக்கத்தைப் புரிந்துகொள்ளவும், அவற்றின் சுற்றுப்பாதைகளை ஆய்வு செய்யவும் உதவுகின்றன. இந்த நிகழ்வின் மூலம் மற்றொரு முக்கியமான அறிவியல் உண்மையும் வெளிப்படுகிறது. ஒரே வானவியல் நிகழ்வை பூமியின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து பார்க்கும்போது அதன் தோற்றம் மாறுபடலாம். சில இடங்களில் ஒரு கோள் நிலவுக்குப் பின்னால் முழுமையாக மறையும்; வேறு சில இடங்களில் இரண்டும் அருகருகே கடந்து செல்வதுபோல மட்டுமே தெரியும். நிலவு பூமிக்கு அருகில் இருப்பதால் அதன் தோற்ற நிலை பார்வையாளரின் இருப்பிடத்தைப் பொருத்து மாறுவதே இதற்குக் காரணம். மேலும், வானியல் நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்திருந்தாலும் அவற்றை நேரடியாகக் காண்பது வானிலைச் சூழலைப் பொருத்தது என்பதையும் இந்த நிகழ்வு எடுத்துக்காட்டியது. மேகமூட்டம், மழை, வளிமண்டலத் தெளிவு மற்றும் ஒளி மாசு போன்றவை வானவியல் பார்வையிடலைப் பாதிக்கின்றன. எனவே, வானியல் நிகழ்வுகளைக் காணத் திட்டமிடும்போது அறிவியல் கணிப்புகளுடன் உள்ளூர் வானிலை முன்னறிவிப்பையும் கவனிப்பது அவசியமாகும். வானம் ஒவ்வொரு நாளும் பல்வேறு அறிவியல் அதிசயங்களை நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. அவற்றைக் கவனிப்பதும், பதிவு செய்வதும், அடுத்த தலைமுறையினரிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதும் நம் அனைவரின் பொறுப்பாகும். வானியல் நிகழ்வுகள் வெறும் அழகான காட்சிகள் மட்டுமல்ல; அவை பிரபஞ்சத்தின் அடிப்படை இயற்பியல் விதிகளைப் புரிந்துகொள்ள உதவும் இயற்கையின் ஆய்வுக்கூடங்களாகும். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை