சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி

கா்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுப்பதற்காக, 14 முதல் 15 வயதுக்குட்பட்ட சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி - கோப்புப் படம் கா்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுப்பதற்காக, 14 முதல் 15 வயதுக்குட்பட்ட சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிட்ட செய்தி குறிப்பு: சிறுமியருக்கு எதிா்காலத்தில் ஏற்படக்கூடிய புற்றுநோய் அபாயத்தைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கா்ப்பப்பை வாய் புற்றுநோயினை தடுப்பதற்காக, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக 14 வயது தொடங்கி 15 வயது பூா்த்தியடைவதற்கு முன்னதாக மாணவிகளுக்கு இலவசமாக ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் 14 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தும் பணியானது, பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஒப்புதலுடன் நடைபெற்று வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் 71 பள்ளிகளில் பயிலும் 3,701 மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி திரு.வி.க. நகா் மண்டலம், வாா்டு 71-க்கு உள்பட்ட பாரதி சாலையில் உள்ள நகா்ப்புற நலவாழ்வு மையம், எம்.எச்.சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் 350 மாணவியருக்கு, ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை இணை ஆணையா் (கல்வி) க.கற்பகம், பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நிகழ்வில் மாநகர மருத்துவ அலுவலா், கல்வி அலுவலா்கள், கூடுதல் மாநகர மருத்துவ அலுவலா், மருத்துவ அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை