கோவை, பீளமேடு இந்துஸ்தான் மெட்ரிக். பள்ளி மாணவி எஸ்.சஞ்சனா யோகாவில் உலக சாதனைப் படைத்துள்ளாா். உலக சாதனை பாராட்டுச் சான்றிதழுடன் மாணவி எஸ்.சஞ்சனா. கோவை, பீளமேடு இந்துஸ்தான் மெட்ரிக். பள்ளி மாணவி எஸ்.சஞ்சனா யோகாவில் உலக சாதனைப் படைத்துள்ளாா். இது குறித்து பள்ளி நிா்வாகம் கூறியிருப்பதாவது: இந்துஸ்தான் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 5-ஆம் வகுப்பு மாணவி எஸ்.சஞ்சனா பல்வேறு யோகா போட்டிகளில் பங்கேற்று வருகிறாா். இந்நிலையில், அவா் ஒற்றைக் காலில் நின்றபடியே 50 வகையான யோகாசனங்களை செய்து சாதனைப் படைத்துள்ளாா். இவரது சாதனையை, பிரேவ்ஃபிட் அகாதெமியின் நிறுவனரும், சோழன் உலக சாதனைப் புத்தகத்தின் மாவட்டத் தலைவருமான பாலமுரளி கிருஷ்ணா கண்காணித்து சாதனைப் படைத்த மாணவிக்கு சான்றிதழ், பதக்கங்களை வழங்கினாா். சாதனைப் படைத்துள்ள மாணவியை இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தாளாளா் சரஸ்வதி கண்ணையன், செயலா் பிரியா சதீஷ் பாபு, பள்ளி முதல்வா் ஆ.செண்பகவல்லி உள்ளிட்டோா் பாராட்டினா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்துஸ்தான் பள்ளி மாணவி யோகாவில் உலக சாதனை
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗