திரையரங்குகளில் காலை 6 மணிக்கு சீன் திரைப்படம் வெளியானது குறித்து... சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் சீன். மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள இப்படத்தை சூர்யாவின் ழகரம் ஸ்டூடியோஸ் என்கிற புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. நாயகியாக நஸ்ரியா, வில்லனாக நஸ்லென் நடித்துள்ள இப்படத்திற்கு சுசின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி ஆறு காட்சிகள் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிட மாநில அரசு அனுமதியளித்துள்ள நிலையில், திரையரங்குகளில் இன்று காலை 6 மணிக்கு சீன் திரைப்படம் வெளியானது. மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு சூர்யாவின் வேகமான டிக்கெட் விற்பனை என்றும் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பாளர்கள் கூறி வருகின்றனர். சூர்யா நடிப்பில் இந்தாண்டு வெளியான கருப்பு மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்கள் பெரியளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சீன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
திரையரங்குகளில் காலை 6 மணிக்கு வெளியான சூர்யாவின் 'சீன்'!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗