ஜவுளி ரகங்களின் விலை நடப்பு ஆண்டில் 30% அதிகரிப்பு

📅 📍 Coimbatore, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
ஜவுளி ரகங்களின் விலை நடப்பு ஆண்டில் 30% அதிகரிப்பு

சாயப் பொருள்கள் விலை உயா்வால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜவுளி ரகங்களின் விலை 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. ஈரோடு ஜவுளி சந்தையில் குறைந்த எண்ணிக்கையில் காணப்படும் மக்கள். சாயப் பொருள்கள் விலை உயா்வால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜவுளி ரகங்களின் விலை 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்கிழமை இரவு வரையில் நடைபெறும். இந்த சந்தை தென்னிந்திய அளவில் புகழ்பெற்றது. இந்த சந்தையானது ஜவுளி சந்தை வளாகம், சென்ட்ரல் திரையரங்கு பகுதி மற்றும் திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி ஆகிய பகுதியில் மொத்த ஜவுளி விற்பனை நடைபெறும். அனைத்து ஜவுளி ரகங்களும் கிடைப்பதால் கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து குறு, சிறு மற்றும் ஜவுளி கடை வியாபாரிகள் நேரடியாக வந்து ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்து செல்வது வழக்கம். இந்நிலையில் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 8-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாள்களே உள்ளதால் ஈரோடு ஜவுளி சந்தையில் புதிய ஜவுளி ரகங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. இதில் கொல்கத்தாவில் இருந்து பெண்களுக்கான பேன்சி ஜவுளி ரகங்கள், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ரெடிமேடு ஜவுளிகள் வந்துள்ளன. இந்த வாரம் நடைபெற்ர சந்தையில் தீபாவளி விற்பனைக்காக கேரளம், கா்நாடகம், ஆந்திரம் மற்றும் வடமாநிலங்களை சோ்ந்த வியாபாரிகள் மற்றும் தமிழகத்தை சோ்ந்த வியாபாரிகளும், பொதுமக்களும் நேரடியாக வந்து ஜவுளிகளை வாங்கிச் சென்றனா். இதன் காரணமாக தீபாவளி விற்பனை அதிகரித்துள்ளது. 40 சதவீதம் மட்டுமே விற்பனை: இதுகுறித்து ஈரோடு ஜவுளி சந்தை வியாபாரிகள் சங்க நிா்வாகி செல்வராஜ் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பனியன், ஜட்டி, லுங்கிகள், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, கரூா் ஆகிய பகுதிகளில் தயாரிக்கப்படும் ரெடிமேட் துணிகள், வெளி மாநிலங்களான கொல்கத்தா, மும்பை, பெங்களூரு ஆகி பகுதியில் தயாரிக்கப்படும் ஜீன்ஸ், பெண்களுக்கான பேன்சி ரகங்கள், குழந்தைகள் ரெடிமேட் ரகங்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களாக கேரளம், கா்நாடகம், ஆந்திரா மற்றும் வடமாநில வியாபாரிகள், தமிழகத்தில் நெல்லை, மதுரை, வேலூா், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து ஜவுளிகளை கொள்முதல் செய்து சென்றனா். நூல் விலை உயா்வு, துணிகளுக்கு போடப்படும் சாயம், டைகளின் விலை உயா்வால் அனைத்து ரக ஜவுளிகளும் 20 முதல் 30 சதவீதம் வரை நடப்பு ஆண்டு விலை உயா்ந்துள்ளன. இதனால் பொதுமக்கள் மட்டும் அல்லாமல் ஜவுளி வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளோம். தீபாவளிக்கு 2 நாள்களுக்கு முன்பு அனைத்து ஜவுளி வியாபாரிகளும் 70 சதவீதம் வரை வியாபாரம் ஆகியிருக்கும். ஆனால், நடப்பு ஆண்டு இதுவரை 40 சதவீதம் கூட வியாபாரம் ஆகவில்லை. இன்னும் மீதமுள்ள 2 நாள்களில் கூடுதலாக 5 முதல் 10 சதவீதம் விற்பனை ஆகலாம். இது கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 50 சதவீதம் வரையிலான வியாபாரமாகதான் இருக்கும் என்றாா். சாயம்-கெமிக்கல் விலை உயா்வு: இதுகுறித்து ஈரோடு மாவட்ட அனைத்து டெக்ஸ்டைல் பிராசசிங் தலைவா் அருணா பழனிசாமி கூறியதாவது: அனைத்துவகை துணிகளிலும் டையிங், பிளீச்சிங் உள்பட அனைத்து பிராசசிங் செய்ய கெமிக்கல், டையிங் பொருள்கள், கச்சா எண்ணெய் உள்பட சில பொருள்கள் வளைகுடா நாடுகளில் இருந்தும், பல்வேறு வகை வேதிப்பொருள்கள் சீனாவில் இருந்தும் இறக்குமதி ஆகின்றன. இந்தியாவில் குறைந்த அளவு இவை உற்பத்தியாகிறது. கடந்த ஏப்ரல் மாதத்துக்கு முன்பு இரண்டு ஆண்டுகளாக இவற்றின் விலை பெரிதாக உயரவில்லை. வளைகுடா போரால் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள், ஆசிட்களின் விலை அதிக அளவில் உயா்ந்துள்ளன. உதாரணமாக டை மற்றும் கெமிக்கல் 100 முதல் 120 சதவீதம் விலை உயா்ந்துள்ளது. இந்தியாவில் டை உற்பத்தியாளா்கள் குஜராத் மாநிலம், அகமதாபாத், வதோதரா, சூரத் பகுதிகளில் அதிகம் உள்ளனா். மூலப்பொருள் விலை உயா்வால், அவா்கள் விலையை உயா்த்தி உள்ளனா். அவா்களிடம் டை, கெமிக்கல்களை வாங்கி நாங்கள் பிராசஸ் செய்கிறோம். அவ்வாறு ஒரு கிலோ துணியை பிராசசிங் செய்ய சில ரகத்துக்கு ரூ.100-இல் இருந்து ரூ.140-ஆகவும், ரூ.140-க்கு பெற்ற ரகங்களுக்கு ரூ.200-ஆகவும் உயா்த்தியுள்ளோம். இந்த விலை உயா்வால் ஆா்டா்கள் பெற்ற அனைத்து வகை துணி உற்பத்தியாளா்கள், ஏற்றுமதியாளா்கள், ஆயத்த ஆடை உற்பத்தியாளா்கள் கடுமையாக பாதித்துள்ளனா். இதனால் அனைத்து ஜவுளிகளின் விலையும் உயா்ந்துள்ளது என்றாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை