விடைபெற்றார் சிஆர்7! சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Sports ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
விடைபெற்றார் சிஆர்7! சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு!

போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ (41), சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வுபெறுவதாக வியாழக்கிழமை (நவ. 5) அறிவித்தார். கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ (41), சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வுபெறுவதாக வியாழக்கிழமை (நவ. 5) அறிவித்தார். கிளப்புகளுக்கான போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடுகிறார். போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ்உடன் அண்மையில் மோதல் போக்கு ஏற்பட்ட நிலையில், தற்போது ரொனால்டோ இந்த முடிவை எடுத்துள்ளார். நீண்ட காணொலியில் தனது முடிவை அறிவித்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். சமகாலத்தில் கால்பந்து உலகின் இரு பெரும் ஜாம்பவான்களாக வலம் வந்த ஆர்ஜென்டீனாவின் லயனல் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ, சரியாக ஒருமாத இடைவெளியில் அடுத்தடுத்து சர்வதேச கால்பந்து களத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர். மெஸ்ஸி கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி ஓய்வை அறிவித்தது நினைவுகூரத்தக்கது. ’சிஆர்7' என ரசிகர்களால் அழைக்கப்படும் ரொனால்டோ, கடந்த 2003 ஆகஸ்ட் 20-ஆம் தேதி கஜகஸ்தானுக்கு எதிரான நட்பு ரீதியிலான ஆட்டம் மூலமாக, சர்வதேச கால்பந்தில் 18 வயதில் அறிமுகமானார். அதுமுதல், சுமார் 24 ஆண்டுகள் போர்ச்சுகல் அணியில் விளையாடியிருக்கிறார். அதுவரை பெரிய போட்டிகளில் வென்றிருக்காத போர்ச்சுகல், ரொனால்டோ வந்த பிறகு ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் ஒரு முறையும் (2016), நேஷன்ஸ் லீக்கில் இரு முறையும் (2019, 2025) வாகை சூடியது. எனினும், அவர் தலைமையிலும் போர்ச்சுகலுக்கு உலகக் கோப்பை கைகூடவில்லை. கால்பந்து உலகின் பிரபலமானதாக இருக்கும் பேலன் தோர் விருதை 5 முறை (2008, 2013, 2014, 2016, 2017) வென்றிருக்கும் ரொனால்டோ, அதுதவிர ஃபிஃபா வழங்கும் உலகின் சிறந்த வீரர் விருதை 3 முறை வென்றுள்ளார். கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் 1-0 என வேல்ûஸ வென்ற ஆட்டமே, போர்ச்சுகல் அணிக்காக ரொனால்டோ விளையாடிய கடைசி ஆட்டமாகும். அடுத்த ஆட்டத்தில் ரொனால்டோவை ஸ்டார்டிங் லெவனில் களமிறக்கும் திட்டம் இல்லை என்று போர்ச்சுகல் பயிற்சியாளர் ஜீசஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். நார்வேக்கு எதிரான அந்த ஆட்டத்தில் களமிறக்கப்படாமலே போனதால் அதிருப்தி அடைந்த ரொனால்டோ, போர்ச்சுகல் அணியின் தேசிய முகாமிலிருந்து செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியேறினார். ஜீசஸ் தனது நம்பிக்கையை உடைத்துவிட்டதாகவும், அணியிலிருந்து வெளியேறியதற்காக சக வீரர்கள் மற்றும் போர்ச்சுகல் மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் அறிக்கை வெளியிட்டார். மறுபுறம், போர்ச்சுகல் அணி எப்போதும் ரொனால்டோவை வரவேற்பதாகவும், அணிக்குத் திரும்புவது ரொனால்டோவின் முடிவைப் பொருத்தது என்றும் ஜீசஸ் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் சுமுக முடிவு எட்டப்படாமல் தொடர்ந்த நிலையில், தற்போது ரொனால்டோ ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். ரொனால்டோவை பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ள போர்ச்சுகல் கால்பந்து சம்மேளனம், மெஸ்ஸியைப் போலவே ரொனால்டோவுக்காக பிரியாவிடை ஆட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தது. தேசிய அணியிலிருந்து ஓய்வுபெற்ற ரொனால்டோ, இனி அல் நாசர் அணிக்காக கிளப் போட்டிகளில் விளையாடுவார். இந்த சீசனுடன் கிளப் நிலையிலான போட்டிகளில் இருந்தும் அவர் ஓய்வுபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்து வந்த காலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ: போர்ச்சுகல் தேசிய அணியின் 7-ஆம் எண் ஜெர்ஸியை திருப்பி ஒப்படைக்கும் நாள் வந்துவிட்டது. அந்த எண் எனக்குரியது மட்டுமே என்று எப்போதும் நான் நினைத்தது இல்லை. ஆனால், அந்த எண் பொறித்த ஜெர்ஸியை கடந்த 23 ஆண்டுகளாக அணியும் பொறுப்பும், கெüரவமும் எனக்குக் கிடைத்தது. அதை உலகெங்கும் சுமந்து சென்றேன். தற்போது அந்த எண்ணை வரும் தலைமுறையிடம் ஒப்படைக்கும் தருணம் வந்துவிட்டது. இது கடினமான முடிவு தான். ஏனெனில், சில முடிவுகளை மூளையோடு சேர்த்து, மனதிலிருந்தும் எடுக்க வேண்டியுள்ளது. 2003 ஆகஸ்ட்டில் தொடங்கி, எனது வாழ்க்கையின் பாதையையே மாற்றிய இந்தப் பயணம், தற்போது முடிவுக்கு வருகிறது. சர்வதேச அளவில் ரொனால்டோ மட்டுமே எட்டியிருக்கும் சாதனைகள் 234 - சர்வதேச களத்தில் தேசிய அணிக்காக அதிக ஆட்டங்களில் விளையாடியிருக்கும் ஒரே வீரர். 146 - சர்வதேச கால்பந்தில் தேசிய அணிக்காக அதிகமான கோல்கள் அடித்திருக்கும் ஒரே வீரர். 6 - ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிகளில் அதிக எடிஷன்களில் (2006, 2010, 2014, 2018, 2022, 2026) கோல் அடித்த ஒரே வீரர். 10 - சர்வதேச கால்பந்தில் அதிக முறை ஹாட்ரிக் கோல்கள் அடித்த ஒரே வீரர். 48 - சர்வதேச கால்பந்தில் 48 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக கோல் அடித்த ஒரே வீரர். 14 - ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் அதிக கோல்கள் (மொத்தமாக 14) அடித்த ஒரே வீரர். 11 - உலகக் கோப்பை போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த போர்ச்சுகல் வீரர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை