பாலிவுட் பாடகி கனிகா கபூர் தனது மணமுறிவை அறிவித்துள்ளது பற்றி... கனிகா கபூர், கணவர் கௌதம் உடன்... - படங்கள்: இன்ஸ்டா / கனிகா கபூர் பாலிவுட் பாடகி கனிகா கபூர் தனது இரண்டாவது கணவர் கௌதம் ஹதிராமனி உடனான மணமுறிவை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். லக்னௌவில் பிறந்த பாடகி கனிகா கபூர் 2012ல் அலிஃப் அல்லா எனும் ஆல்பத்தில் பாடி கவனம் பெற்றார். பின்னர், பல்வேறு திரைப்படங்களில் பாடல் பாடியுள்ளார். குறிப்பாக அவர் பாடிய பேபி டால் பாடல் மிகவும் கவனம் பெற்றது. முன்னதாக, கனிகா கபூர் ராஜ் சந்தோக் என்பவரை 1999ல் திருமணம் செய்து, லண்டனுக்குக் குடிபெயரந்தார். இவர்களுக்கு 3 மூன்று குழந்தைகள் பிறந்தார்கள். பின்னர், அவருடன் 2012ல் பிரிந்தார். அடுத்தாக இந்தியாவுக்கு வந்த கனிகா, 2022ல் தொழிலதிபர் கௌதம் ஹதிராமனியை திருமணம் செய்தார். தற்போது, இவருடனும் விவாகரத்து பெறவிருப்பதாக அறிவித்துள்ளார். இவர்கள் 15 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வந்தார்கள். பின்னர், 4 ஆண்டுகளில் மணமுறிவை அறிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் கனிகா கபூர் கூறியிருப்பதாவது: எனதருமை நண்பர்கள், குடும்பத்தினர்களுக்கு... நீண்ட யோசனைகளுக்குப் பிறகு நானும் எனது கணவரும் பிரிந்துவாழ முடிவெடுத்துள்ளோம். நான் இவருடன் இருந்த காலம் மிகவும் நன்றாக இருந்தது. அவரது வருங்காலத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். எங்களது தனியுரிமையை மதிக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். கனிகா கபூர் - படம்: இன்ஸ்டா / கனிகா கபூர் தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இரண்டாவது கணவருடனும் தனது மணமுறிவை அறிவித்த பாடகி கனிகா கபூர்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗