குழு அமைத்தால் ஆயிற்றா?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
குழு அமைத்தால் ஆயிற்றா?

தமிழகத்தில் அடுத்தடுத்து சிறைக் கைதிகள் தப்பிய சம்பவம் குறித்த தலையங்கம்..... தப்பியோடிய கைதிகள். - கோப்புப்படம். தமிழகத்தில் அடுத்தடுத்து சிறைக் கைதிகள் தப்பிய சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. நல்லவேளையாக, தப்பியோடியவர்கள் ஓரிரு நாள்களுக்குள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம், தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் விசாரணைக் கைதி முத்து இளங்கோவனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக சக கைதிகள் கடந்த அக். 26-ஆம் தேதி இரவு 10 மணி அளவில் தகவல் தெரிவித்துள்ளனர். அறைக் காவலர் ஸ்டாலின் பிரபு அந்த அறைக்குச் சென்று பார்த்தபோது 17 கைதிகள் அவரை சூழ்ந்து கொண்டு தாக்கிவிட்டு தப்பியோடினர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்று, சென்னையைச் சேர்ந்த சுதீப் போகதி (21), சுரேஷ் (41) ஆகியோர் முறையே அக். 20, 21-ஆம் தேதிகளில் புழல் சிறையில் இருந்து தப்பியோடினர். இந்த இரண்டு சம்பவங்களின் பரபரப்பு அடங்குவதற்குள், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஈரோடு மாவட்டம், பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த ராகவன் (25) கடந்த அக். 31-ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறைக்கு அழைத்துவரப்பட்டபோது காவலர்களைக் கீழே தள்ளிவிட்டு தப்பியோடினார். இவையெல்லாவற்றையும் விஞ்சும் வகையில், சென்னை புழலில் சிறுமிகளிடம் அத்துமீறிய ஆட்டோ ஓட்டுநரான 60 வயது முதியவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் கடந்த அக். 31-ஆம் தேதி தப்பியோடிவிட்டார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 14 மாவட்ட சிறைகள் உள்ளிட்ட 125 சிறைகள் உள்ளன. இந்தச் சிறைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட அனுமதிக்கப்பட்ட அளவு 5,489 பேர் ஆகும். ஆனால், இதில் 7 முதல் 10 சதவீதம் வரை காலிப் பணியிடங்கள் உள்ளன. இப்போது கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்படுவது சூடு பிடித்துள்ளதால் கைதிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், அனுமதிக்கப்பட்ட காவலர், அலுவலர்களின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளாக அதிகரிக்கப்படவில்லை. தமிழகத்திலுள்ள 125 சிறைகளில் சுமார் 24,000 கைதிகளை அடைக்க முடியும். இப்போதைய நிலையில் இந்தச் சிறைகளில் 23,600 கைதிகள் உள்ளனர். ஆனால், இது சமச்சீரற்ற நிலையில் இருப்பதால் பல சிறைகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிக கைதிகள் உள்ளனர். உதாரணத்துக்கு, 17 கைதிகள் தப்பியோடிய தேனி சிறையில் அதிகபட்சம் 200 கைதிகளை அடைக்கமுடியும். ஆனால், அந்த நாளில் 334 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். வேலூர், திருச்சி நீங்கலாக மற்ற 7 மத்திய சிறைகளிலும் 111 சதவீதம் முதல் 210 சதவீதம் வரை கூடுதலாக கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மதுரை மத்திய சிறையில் 1,252 கைதிகளை அடைக்க முடியும் என்ற நிலையில் 2,623 கைதிகள் (210 சதவீதம்) உள்ளனர். நன்னடத்தைக் கைதிகளைக் கொண்டு பெட்ரோல் விற்பனை நிலையங்கள், சிற்றுண்டி விற்பனையகம், காய்கறித் தோட்டங்கள், பல்பொருள் அங்காடிகள், கோழி மற்றும் ஆட்டிறைச்சிக் கடைகள், செக்கு எண்ணெய் தயாரிப்பு -விற்பனை, கால்நடைப் பண்ணைகள், தொழிலகங்கள் போன்றவை மாநிலம் முழுவதும் நடத்தப்படுகின்றன. இங்கும் சிறைக் காவலர்கள் பணியமர்த்தப்படுவதால் சிறைப் பணியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறது. தேனி சம்பவத்துக்குப் பின்னர், இதுபோன்ற வெளிப்பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல ஏக்கர் பரப்பளவில் உள்ள சிறைகளில் உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், காவலர்கள் பற்றாக்குறையால் அங்கு காவலர்கள் பணியில் அமர்த்தப்படுவதில்லை. அசம்பாவிதம் நேரும் சந்தர்ப்பங்களில் ஒலிக்க வேண்டிய அபாய சங்கும் பல சிறைகளில் சரியாகப் பராமரிக்கப்படாததால் வேலை செய்வதில்லை. சிறைத் துறையில் சில கருப்பு ஆடுகளும் உள்ளன. அதனால்தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு பீடி, கஞ்சா, கைப்பேசி போன்றவை தங்குதடையின்றி கிடைக்கின்றன. கைதிகள் தப்பிய சம்பவங்களையடுத்து, சிறைப் பாதுகாப்பை வலுப்படுத்த சிறைகளில் ஆய்வு மேற்கொண்டு பரிந்துரைகளை அளிக்க முன்னாள் டிஜிபி ஜே.கே. திரிபாதி தலைமையில் மூவர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. ஒரு பிரச்னை பூதாகரமாகும்போது குழுக்கள் அமைக்கப்படுவது புதிதல்ல. கடந்த ஆட்சிகளில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம், மாணவர்களிடையே ஜாதிய பாகுபாடுகளைக் களைதல் தொடர்பாக நீதிபதி சந்துரு ஆணையம், சென்னை வெள்ளம் தொடர்பாக வி.திருப்புகழ் குழு போன்ற பல குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால், அவற்றின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டனவா என்பது ஆள்பவருக்குத்தான் வெளிச்சம். ஜே.கே. திரிபாதி தலைமையிலான குழு அளிக்கும் பரிந்துரைகளைப் பொதுவெளியில் வெளியிடுவதுடன் தயவு தாட்சண்யம் இல்லாமல் பரிந்துரைகளை அமல்படுத்துவதுதான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக அமையும். ஆட்சி மாறினால் போதாது; காட்சியும் மாற வேண்டும். வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறுஎய்தி உள்ளப் படும். செயல் திறனால் பெருமை பெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது, நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும். திருக்குறள் (எண் 665) அதிகாரம்: வினைத்திட்பம் தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை