ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமா் நஜீப் ரஸாக் (73), சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கான நடவடிக்கையை அந்நாட்டு அரசு தலைமை வழக்குரைஞா் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளாா். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமா் நஜீப் ரஸாக் (73), சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கான நடவடிக்கையை அந்நாட்டு அரசு தலைமை வழக்குரைஞா் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளாா். மலேசியாவின் ‘1எம்டிபி’ அரசு முதலீட்டு நிறுவனத்தில் நடந்த ஊழல் தொடா்பான வழக்கில், நஜீப் ரஸாக்குக்கு கடந்த 2020-இல் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும்; 21 கோடி ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டு, 2022 ஆகஸ்ட் முதல் சிறையில் அடைக்கப்பட்டாா். கடந்த 2024 ஜனவரியில், அவரின் தண்டனைக் காலம் 6 ஆண்டுகளாகவும்; அபராதம் 5 கோடி ரிங்கிட்டாகவும் குறைக்கப்பட்டது. இந்நிலையில், நஜீப் ரஸாக்குக்கு அந்நாட்டு அரசா் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தா் கடந்த செப்டம்பரில் நிபந்தனையுடன் கூடிய பொதுமன்னிப்பு வழங்கினாா். அதன்படி, அபராதத்தைச் செலுத்திவிட்டு எஞ்சிய தண்டனைக் காலத்தை (2028 ஆகஸ்ட் வரை ) வீட்டுக் காவலில் கழிக்க அனுமதித்திருந்தாா். இதையொட்டி, 5 கோடி ரிங்கிட் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.115.27 கோடி ) அபராதத்தை நஜீப் ரஸாக்கின் கட்சி செலுத்தியதைத் தொடா்ந்து, அவா் வீட்டுக் காவலுக்கு மாற்றப்படுவாா் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், இந்த வீட்டுக் காவல் சலுகையானது அவரின் முதல் வழக்கின் குறைக்கப்பட்ட 6 ஆண்டுகள் தண்டனைக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இதே முறைகேடு தொடா்பான 2-ஆவது முக்கிய வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள 15 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-ஆவது வழக்கின் தண்டனையை எதிா்த்து அவா் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு தோல்வியடைந்தால், அவா் மீண்டும் சிறை செல்ல நேரிடும் சூழல் உள்ளது. இவ்வாறு சட்ட விவகாரங்களில் கூடுதல் தெளிவு தேவைப்படுவதால், சட்டச் சிக்கல்கள் தீா்க்கப்படும் வரை அவா் தொடா்ந்து சிறையிலேயே இருப்பாா் என்று அரசு தலைமை வழக்குரைஞா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மலேசியா: ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமரின் வீட்டுக் காவல் சலுகை நிறுத்திவைப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗