பஞ்சாபில் ஆம் ஆத்மி எம்எல்ஏ உள்பட 7 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
பஞ்சாபில் ஆம் ஆத்மி எம்எல்ஏ உள்பட 7 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

பஞ்சாபில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. உட்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை பற்றி.. அமலாக்கத் துறை - file photo பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மகளிர் அணித் தலைவரும், மோகா தொகுதி எம்.எல்.ஏ.வுமான அமன்தீப் கௌர் அரோரா உள்பட அவர்களுடன் தொடர்புடையவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை புதன்கிழமை சோதனை நடத்தியது. இந்தச் சோதனை நடவடிக்கை இன்று அதிகாலை தொடங்கித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் அரசு, நிறுவனச் சொத்துகளை மோசடியாகக் கையகப்படுத்தியது மற்றும் பொது நிதியை முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில், மொத்தம் ஏழு இடங்களில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பாக மத்திய விசாரணை அமைப்பான அமலாக்கத்துறை, அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 754ஏ-க்காக கையகப்படுத்தப்பட்ட அரசு நிலத்தை மோசடியாகப் பெயர் மாற்றம் செய்தது, இழப்பீட்டுத் தொகையைத் தவறான நபர்களுக்கு வழங்கியது தொடர்பாக, பஞ்சாப் காவல்துறை கடந்த ஜூன் 16, 2024 அன்று பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், அமலாக்கத்துறை இந்த வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அமன்தீப் கௌர் அரோரா, அவரது கணவர் ராகேஷ் அரோரா, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடையவர்களுக்குச் சொந்தமான இடங்கள் மட்டுமின்றி, ராகேஷ் அரோராவுடன் தொடர்புடைய போதை மீட்பு மையத்திலும் அமலாக்கத்துறை குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது நடைபெற்று வரும் இந்த வழக்கிற்குத் தேவையான ஆதாரங்களைச் சேகரிக்கும் நோக்கில் இந்தச் சோதனை நடத்தப்படுகிறது. ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது. காவல்துறை பதிவு செய்த எப்ஃஐஆர் மற்றும் அமலாக்கத்துறையின் இசிஐஆர் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள், இந்த வழக்கில் எவ்வாறு பணப் பரிமாற்றங்களைச் செய்துள்ளனர், என்னென்ன ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் கண்டறியவே இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை