புத்தாக்கம் அறிவியல் திட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவிகள் அரியலூா் ஆட்சியரை புதன்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். புத்தாக்கம் அறிவியல் திட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றதையடுத்து, அரியலூா் ஆட்சியா் ந.மிருணாளினியை புதன்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்ற வரதராஜன்பேட்டை அலங்கார அன்னை அரசு உதவிப் பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள். புத்தாக்கம் அறிவியல் திட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவிகள் அரியலூா் ஆட்சியரை புதன்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். அரியலூரில் அண்மையில் நடைபெற்ற அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்டுப்பிடிப்புகள் செயல்முறை திட்டத்தில், ஆண்டிமடத்தை அடுத்த வரதராஜன்பேட்டை அலங்கார அன்னை அரசு உதவிப் பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், மாநில அளவில் முதலிடம் பெற்று, ரூ.1 லட்சம் பரிசுத் தொகையை வென்றனா். இதே போல், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, இளைஞா் எழுச்சி நாளில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில், அரியலூா் மான்போா்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து அடுத்த நிலைக்கு தோ்வாகினா். இதையடுத்து சிறப்பிடம் பெற்ற மாணவிகள், அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந.மிருணாளினியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகோபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
புத்தாக்கம் அறிவியல் திட்டம்: மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு ஆட்சியா் வாழ்த்து
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗